Thursday, January 1, 2009

தென்றலாய் வருக

தென்றலாய் வருக!

பொன்னுல கெல்லாம் பாடி
பொய்கையாய் உறவு தேடி
துன்பியல் கொட்டும் மாந்தர்
திருந்திட மனிதம் கூடி
வன்பகை ஒடித்து வாகை
வடிவினில் இனங்கள் நாடி
இன்றொரு புதிய ஆண்டே
எழுச்சியாய் வருக ஆண்டே!

அகதியாய் அலையச் சொந்த
அன்னைமண் நிழல்கள் கூட
சகதியாய் ஆகக் குண்டு
சரித்திட வைத்த கேடு
பகரவே எட்டாம் ஆண்டு
பறந்தது புதிதாய் வந்து
திகழவே ஒன்ப தாகித்
தென்றலாய் வருக ஆண்டே!


-புதியபாரதி

2 comments:

  1. நல்ல கவிதை. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி பிரேம்குமார். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகுக. புதியபாரதி-நம்நாடு

    ReplyDelete