Tuesday, March 31, 2009

சோனியா கூனியா?


சோனியா கூனியா?

சோனியா சோனியா
நீயென்ன கூனியா?
ஈழமண்ணின் சடலங்கள்
இன்றுனக்குத் தீனியா?

இரசீவுப் பேய்வந்து
இரவைக் கடிக்கிறதா?
அரவாணி மனத்தாளே
அழலுன்னை முடிக்கிறதா?

ஈழமக்கள் பிணமாக்க
இத்தாலி அனுப்பியதா?
ஊழ்வினையின் இருப்பாளே
உயிர்ச்சிதறல் பார்க்காயா?

பிஞ்சுக்கள் சாவதுவும்
பிணக்குவியல் ஆவதுவும்
நஞ்சுமக ளுனக்கேதான்
நாளையெலாம் பழியிருக்கும்!

பிரியங்கா ராகுல்
பிள்ளைகளைப் பார்க்கும்நீ
எரியும் சிறிசுகளை
ஏனடிநீ பார்க்கவில்லை?

உன்னாலே இலங்கா
உயிர்குடித்துப் போகுதடி!
இந்நாள் இதுசரிதம்
என்றுனக்கும் ஆகுமடி!

-சுந்தரபாண்டியன்-தமிழ்நாடு

Thursday, March 26, 2009

இலங்கையன் வணக்கம்

கல்விமான் செல்வரத்தினம்(செல்வரத்தினம்) ஆசிரியர்
மறைந்தநாள் கவிதை.
இலங்கையன் வணக்கம்!


மனிதரில் நேயம் மிக்கோர்
மாமனி தன்னே என்பார்
புனிதராய் நிற்போர் எல்லாம்
புத்தனாய் மதிக்கக் காண்பார்
கனிதரும் சுவைபோல் கல்வி
கண்டவர் பயனே ஈவார்
இனியதின் மகிமை எல்லாம்
இலங்கையன் கொண்டான் என்பேன்!

எறும்புகள் ஊர்தல் போன்று
இவன்நடை இருக்கும் சின்னக்
குறும்புகள் சிரிப்பி னோடு
குறுமொழி கனமாய் மின்னும்
பெறும்புகழ் இவனைச் சார்ந்து
பெரும்தமிழ் அறிஞன் ஆனான்
தொறும்நிலக் கனடா மன்றில்
செந்தமிழ் மனிதம் தந்தான்!

கரும்புகள் இனிக்கா திந்தக்
கல்விமான் கதைக்கும் போதில்
அரும்புகள் விரிதல் போலே
அழகுற மொழிவான் சாதி
நொரும்புகள் நிலத்தில் கண்டு
நொடிந்தனன் அதற்குள் நின்றும்
திரும்பினான் செல்வா என்னும்
சிந்தனை யாளன் என்பேன்!

ஆயிரம் குடங்கள் வைத்து
அளன்கின்ற ஓமம் தோற்கும்
பாயிரம் கொண்டு இந்தப்
பரிதியின் பாடல் பூக்கும்
தாயினும் சிறந்தான் இந்தத்
தமிழறி வாளன் கண்டீர்
நோயினை வென்றான் ஆயின்
நின்றவன் போயே விட்டான்!

ஊன்றிய தடியே இல்லான்
உலவிய அறிஞன் எங்கே?
வான்மடி சென்றார் மன்றில்
வந்துநின் றழுவான் எங்கே?
கூன்பணி கொள்ளான் தேசக்
கூட்டமாய் நிற்பான் எங்கே?
ஏன்இவன் சென்றான் என்றே
என்னுளம் கனக்கு தம்மா!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

ஒரு தூயனின் இறப்பில் இதயத்தால் வணங்கி
புதியபாரதி

Wednesday, March 25, 2009

அற்புதம்

அற்புதம் நிகழும் தம்பி!
(நன்றி: வானமே எல்லை-02)

அடுத்தவன் பணத்தை நம்பி
அல்லவன் கரங்கள் பற்றிக்
கொடுத்தவன் காசி னோடு
கொள்ளலாம் தூக்கம் என்றால்
நடுத்தெரு வந்தே அந்த
நல்லவன் திருப்பிக் கேட்பான்
உடுப்புனக் குரிய வென்றே
ஒருநிலை அவனே கொள்வான்!

திருப்பிநீ கொடுத்தாற் கூட
தீயதாய் மாறும் நட்பு
கருத்தது மாறிப் பின்பு
காழ்ப்பதாய் மாறும் புத்தி
பெருத்திடக் காணும் அந்த
பீடைநீ கைக்கொள் ளாதே
பொருத்துநீ சிறுகச் சின்னப்
பொருளைநீ முதலில் தேடு!

வைப்பகம் தன்னில் போடு
வளரும்பின் வளரும் தேடு
ஒப்பிலா வங்கித் தேட்டம்
உருப்பெருத் தாகும் தோட்டம்
செப்பிடும் வெற்றிப் பாதை
செல்லலாம் என்றும் உந்தன்
கப்பிய சோகம் தீரும்
களித்திடப் படிகள் நீளும்!

காசினைக் கடனாய்ப் பெற்றுக்
காணிலக் கியங்கள் செய்தால்
பாசியாய்ப் பனியாய்த் தேயும்
படைப்புனக் காட்டம் காணும்
ஊசியாய்க் குத்தும் மாந்தர்
ஓடினும் விடவே மாட்டார்
வீசியே நடப்பாய் தம்பி
வீதியில் உன்னை நம்பி!

சுயமிடும் முயற்சி ஒன்றே
தோகையாய் விரியும் இற்றைச்
செயலெது உனக்கு உண்டோ
தேர்ந்திடு அறிவை நம்பி
முயலது போலே ஓடு
முடிவிலே வான எல்லை
அயலிலே வந்து நிற்கும்
அற்புதம் நிகழும் பாராய்!


-புதியபாரதி

Tuesday, March 24, 2009

சிந்தனை வானம் எல்லை!

வானமே எல்லை-01

சிந்தனை வானம் எல்லை!


இன்னொரு மனித னோடு
எடுத்தபோர் வெல்லக் கூடும்
அன்னவன் மீண்டும் உன்னை
அடிக்கவுன் வெற்றி போகும்
மின்னினால் போகும் எல்லாம்
வெற்றியாய் இருப்ப தில்லை
உன்னுளே தோன்றும் கோடு
உடைத்தெழு அதுதான் எல்லை!

எண்ணினால் நீயே எண்ணாய்
இலக்கெதோ அதற்குள் நிற்பாய்
அண்ணள வாகக் கொண்ட
அலகுகள் படியாய்க் கொள்வாய்
திண்ணிய வுரமும் வார்ப்புத்
திசையதும் வெறியாய்;த் தோன்றும்
கண்ணினில் எவரும் காணாக்
களம்மட்டும் உனக்குள் பூக்கும்!

உன்னையே நீயே வெல்வாய்
உயருவாய் இறங்க மாட்டாய்
பொன்வயல் உனது உள்ளம்
புதையலே தோற்றும் வெள்ளம்
அன்பினால் புத்தன் வென்றான்
அகிம்சையால் காந்தி வென்றார்
உன்கதை உனக்குள் உண்டு
உலகையே அசைக்கும் குண்டு!

கனிணிக்குள் உலகம் வந்து
கடுகுபோல் உருவம் ஆச்சு
மனமிடும் கனவுக் கோல
வடிவத்தைப் படமே ஆக்கும்
இனியதோர் கருவி தன்னை
இயப்பானார் கண்டார் இன்னும்
அனையதாய்ச் செய்தி வந்து
அதிசயம் புரிதல் பாராய்!

நீயுனை வைத்த வேள்வி
நீந்துவாய் அதனுள் ளேநீ
தேயுதல் நிலவுக் குண்டு
தெளிந்தவுன் அறிவுக் கில்லை
சாயுதல் பொழுதுக் குண்டு
சளையாத உழைப்புக் கில்லை
சேயுனை நம்பு உந்தன்
சிந்தனை வானத் தெல்லை!

-புதியபாரதி

Monday, March 23, 2009

சுதந்திரப்போர்..!

எத்தனை காலம்தான்..-03

சுதந்திரப்போர்..!

நாள்முழுதும் கொத்துக் குண்டுகள்..

சின்னப் பிஞ்சு தொடக்கம்
சிதறும் முதியவர்கள்..

போருக்கு நீரூற்றுவது இந்தியா
என்பதற்கு இலங்கா நாடாளுமன்றம்
பதிந்து அனுப்பியிருக்கிறது..

முல்லைத்தீவில் பிரபாகரனைப் பார்த்ததாக
கோத்தபாயா கோயபல்ஸ் ஆனார்

இராணுவ நகர்வை உள்ளேவைத்துப்
புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட
யுத்தத்தின் அறுவடையை
இராசபக்ச இப்பொழுது அளந்தபடி..!

இரண்டாயிரத்து ஒன்பது பங்குனித் திங்கள்
இந்தப் பக்கம் எழுதப்படுகிறது..

இறந்தும் படுகாயப் பட்டவர்களுமாய்
இருபதினாயிரம் இராணுவன்களை
இந்த இருசோடி வாரங்கள்
பதிந்திருக்கின்றன..

உலகமெங்கும் உருவான
தமிழர் எழுச்சி
வன்னித் துயரங்களுக்கு
ஒத்தடம் கொடுக்கிறது..

அய்நா மன்றத்தில் மனித உரிமைகள்
சிறீலங்காவைச் சுற்றி
முட்கம்பி வேலிகள் போடுகின்றன..

இராணுவ மாமேதை என்ற
இலட்சனையை பிரபாகரன்
மீண்டும் பதித்துக் கொள்கின்றார்..

பின்வாங்கப்பட்டதாகக் கூறப்பட்ட
பூமியில், புலிகளின் இறுதிநாட்களுக்கு
எண்ணிக்கொண்ட இந்தியாவும் இலங்காவும்
மூன்று நாட்கள் என்ற கணக்கு
முடிச்சு மாறிவிட்டதை உணர்கிறார்கள்..

ஐம்பத்தி ஏழாவது..எட்டாவது படையணி
கும்பம் விழுந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறது..

ஒட்டுசுட்டான் முள்ளியவளை வரை
துணுக்காய்..மன்னார் மேற்காய்த்
துளைக்கப்பட்ட ஊடறுப்புக்களில்
புலிகள் நிற்பதாகச் செய்திக் கசிவுகள்
திரும்பிக் கொண்டிருக்கின்றன..

கடந்த வருடம் இரண்டாயிரத்து எட்டில்
ஊடக ஆய்வாளர்
அனிதா பிரதாப் எழுதிய கட்டுரை
ஞாபகமிருக்கலாம்..

ஒன்பது மாசியில் மூசிவெடிக்கும் போரில்
புலிகள் திருப்பப் போர் எழும் என்ற
எழுதிக் கொண்டார்..

இவரின் கணிப்பும், புலிகளின் கணிப்பும்
ஒன்றுக்கொன்றாய் இணைந்த
இராணுவ நகர்வுப் பட்டறையில்
எழுதப்பட்டவைதாம் இவை.

ஆம்..அந்தப்போர்
நடைமுறைக்கு வந்த நாட்கள் இவை..

கிட்டே இழுத்து
முட்டக் கொடுக்கும் புலிகளின் படை
அரசு அறிவித்துக் கொள்ளுதல்போல்
அழிந்து போனவை அல்ல..

முரசு அறையும் நேரத்திற்கு
முழு உலகும் அதிர்வு நடக்கிறது..

உளத்திறன் அற்று சிங்க இராணுவம்
ஓடிக்கொண்டிருக்கிறது..

படைப்பிரேதங்களோடும், அவயம் இழந்தோருமாய்
கொழும்பு, அநுரதபுரம், குருநாகல் என்று
ஓடிக்கொண்டிருக்கின்றன காவு வண்டிகள்..

மக்களை முடிப்பதைப் பார்த்தே இன்றைய
சிங்களன் பார்த்து இராசபக்சாவுக்கு
கைதட்டிக் கொண்டிருக்கிறான்..

ஐந்தொகைக் கணக்கில் காணாதவர்களைக்
காட்டு என்ற சிங்களக் கனவாள்
எழுகின்ற நாட்களைக் கண்டு அரசாட்சி
கலங்கிக் கொண்டிருக்கிறது..

புலிவாலைப் பிடித்து..
விடுபட முடியாமல் இரத்தினசிறீக்கள்..

சோனியாக் காலத்தில் வரும்
மானியங்கள் மட்டும் கணக்கிடப்பட்ட நாட்கள்..

அரச இராணுவம் சேடம் இழுக்கிறதாக
இளம்பரிதி அறிவிப்பு வந்த
அடுத்தநாளின் வரிகள்தான் இங்கே
அலசப்படுகின்றன..

துரோகியாய்ப் போனவன் தூங்கி இருப்பது தானே?

தவமிருந்து வந்த தங்கத் தலைவனுக்கு
அவமாகிக் கதைபோடும் கருணா!
அட.. புலிகளைக் காட்டியே இன்னமும்
வாழுகிறான்..இவன்..!

சிங்கள இராணுவனுக்குச் சேர்த்துக் கொடுக்கிற
மங்களம் பாடுகிறது யாழ்ப்பாணத்தில்
இடக்கன் இடாப்பு..

அஞ்சி ஒடுங்கி வாழுகிறது
வஞ்சியர் மாராப்பு..

சிறுமியர்களையும் சீரழிக்கிறது இந்தச்
சீக்கூட்டம்..

கருணாவின் கூட்டம் கிழக்கின்
அழகுச் சிறுமியைக் கொன்றகதை
பொருமிப் பருக்கிறது..

கொலைகாரன் ஒருவன் சுடப்பட்டுச் செத்தான்..!

வலையில் விழுந்த மற்றவன்
நஞ்சுவில்லை உட்கொண்டு சாய்ந்தான்..

புதைக்கப்பட்ட இவனது சடலத்தைத்
தோண்டித் துப்பாக்கியால் சிதைத்தது
மக்கள் ஆத்திரம்..

தமிழனை வைத்தே தமிழனை அழிக்கும்
தந்திரங்களில் இன்னும் துட்டகெமுனுக்கள்..

தமிழகத் தமிழனே உங்கள்
ஆவேசங்கள் உலகம் முழுவதும்
மானத்தமிழன் ஆடைகள் ஆகிவிட்டன..

இந்தியத்தைத் துணைக்கு இன்னமும் அழைக்கின்ற
சிந்தனைக்குப் புலிகள் இன்னும்
வாக்குக் கொடுத்தபடி..
நடேசன் அழைப்பு வலிமையாக..

மாட்டாத இந்தியம் தீட்டாக வரைபடும்
என்பதைத் காட்டாக உரைக்கிறது காலம்..!

நீட்டாத கையை நீட்டினால் மட்டும்
நீளும் இந்தியச் சமுத்திரம்..

இல்லையேல் வீழும் வல்லாதிக்கப் பரவல்
என்பதைத் தீர்மானிக்கப் போகிறது
இன்றயை வன்னிப்போர்..!

குருதியிறைத்து, உடலைச் சிதறி
பதறி மடியும் என்தமிழர்களே,
பாலரே.. பிஞ்சுகளே..

உங்கள் உதிரங்களில் எங்கள்
உயிர்களைப் பதிந்து நாட்களை
இழக்கிறோம்..
உங்கள் சுவடுகளில் எங்கள்
சுதந்திரதேசம்.. எழுந்தபடி..!
-எல்லாளன்

Saturday, March 21, 2009

எத்தனை காலம்தான் ...?-02


எத்தனை காலம்தான் ...?-02


சேலைகட்டிய வெள்ளைக்காரி
சோனியாவுக்குச் சோடியைப் பிரிந்த சோகம்...

கோபத்தை ஈழத்தின் மீது
கொடுத்ததினால் குப்பை மேடுகளாய்ப்
பிணங்கள்..

அன்று...பிரபாகரனைக் கொல்வது
ஒன்றுக்காகவே
எழுதப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம்
தமிழர்கள் இல்லாமலேயே
தாம்பாளம் இடப்பட்டது..

அன்று அரிசியைக் காட்டினார்கள்
தமிழ்மண்ணில்..

இன்று ஆயுதத்தைக் கொடுக்கிறார்கள்
இலங்காவின் கையில்..

இரண்டுமே தமிழர் போற்றும் தலைவன்
பிரபாகரனைக் கொல்வதற்காக..

இருபது தடவைகளில் ஏடுகளில்
பிரபாகரனைக் கொன்றது
இந்தியா..

வரலாற்றின் குரலை அடைக்க
கூகைக் குரல்களால் முடியுமா?

எத்தனை நாடுகள்.. எத்தனை ஆயுதங்கள்
எத்தனை கோயபல்ஸ்கள்..
எத்தனை துரோகிகள்..
எத்தனை எட்டப்பர்கள்..

இன்னும் இமயமாக நிற்கிறான் பிரபாகரன்..

வதைபடும் இனத்திற்காக வந்தவன் அல்லவா?

பிடரியில் அடிவாங்கிப் போன இரசீவுக்கு
முடமாகிக் கிடந்தது மூளை..

பார்த்தசாரதி என்ற ஆலோசகரைத்
தமிழன் என்ற காரணத்திற்காகத்
தடைபோட்ட இரசீவின் மூளை
இறுதியில் மூளையின் தடயங்கள்
இல்லாமலேயே முடிந்தது..!

கொலைக்கரங்கள் மடிக்குள்ளேயும்
இருப்பதற்குத் காரணமாகிய
மகுடிகளை இன்னும் எந்த
விசாரணைகளும் இல்லாமலேயே
இந்திரா வாரிசுகள் இருப்பதற்கான
காரணம் என்ன?

கொலையைத் தமிழர் தலைகளில்
எழுதிய தடயங்கள் அழியாமலேயே வைத்து
அலையலையாகத் அந்த அதே
தமிழர்களைக் கொன்று..
இந்தியத்தின் தென்னகத்தே ஒரு
இறையாண்மைத் தமிழகத்தை
அழிக்கத் துணிந்தது இந்தியம்..

குமுதம் நேர்காணலில் ஒரு
காங்கிரசான் சொன்னான்..
ஒரு எழுபத்தி ஐயாயிரம் அல்லது
ஒரு இலட்சம் தமிழர்களே..
முல்லைத்தீவில் இருப்பதாக...

இரண்டரை இலட்சத்திற்கு மேலாக
இருப்பதாக அல்லவா..
அய்நா அமைப்புகள் சொல்கின்றனவே என்ற
கேள்விக்கு அறிவிலான்
அளப்பினான்..

உண்மைகள் தெரியாமல்
இல்லாத உழுத்தன்
இரண்டு இலட்சம் மக்களை
அழிக்கும் அவாவில் இருப்பதை
அலசிக்காட்டினான்..

எழுந்திருக்கும் தமிழக உணர்வுகளுக்கு
ஆணியடித்தான் இந்த
அவலப் பிறப்பான்..

சிறையைப் பிளம்பாக ஆக்கி வைத்திருக்கும்
சீமான்களை எல்லாம்
சிறிசாக்கினான் இந்தச் சின்னவன்..

இந்திய ஆயுதங்களால்-
இந்திய ஆலோசனையாளர்களால்
ஈழப்போரை நடத்துகிறது இலங்கா என்று
சிங்களம் பாராளுமன்றத்தில்
சொல்லியிருக்கிறது..!

இதனால் சோனியா இதுவரை
சேலையில் மறைத்துக் கொடுத்த ஆயுதங்கள்
மூலைக்குமூலை வெளியே வந்தன..

ஒரு நீதிமன்றத்தால் கலைக்கப்பட்ட
ஒப்பந்தத்தின் வலுவைக் காட்டிய
சிங்களத்திற்கு வாலைமுறுக்கும்
இந்தியத்தின் தலையில்
என்ன இருக்கிறது..தமிழா?

தேனீருக்காகத் தமிழனின்
கச்சதீவைக் கைகழுவிய இந்தியம் அல்லவா?

இந்திய காங்கிரஸ் என்ற-
ஈழமக்களின் சாவுக்குக் காரணமான-
கற்பழித்து, ஆறாயிரம் மக்களை
நெரித்துக் கொன்ற இந்தத் தமிழின
இயமன்களை தமிழகத்தில் இருந்து
துரத்து தமிழா..!

நீதியின் பிளம்பே..
துடிக்கும் தமிழக இளைஞனே..
இந்தத் தரித்திரக் கும்பல்களை
அப்புறப்படுத்தும் அந்த
அற்புதம் உன்றன்
வாக்குகளில் அல்லாவா இருக்கிறது..

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
எங்க நாட்டிலே..
எங்க இனத்திலே...!

-எல்லாளன் எழுதுவது..

Wednesday, March 18, 2009

எத்தனை காலம்தான்?




எத்தனை காலம்தான்?-01

கிழக்குக் கொடுத்த பிந்திய உதிரம்..!

வர்சா..!

கப்பம் கேட்டுக் கடத்திக் கொலையிடப்பட்ட
கனியா மொட்டு..

இன்னும் உலகம் தெரியாத-புரியாத
ஆறுவயது அழகின் மொட்டு-சின்னச் சிட்டு!

கொலையைச் செய்தவன் கொலையில்
விழுந்தான் எனினும்..
அலை அலையாய் வரும் செய்திகள்..
அதிர்ச்சிகளாய்..

இவனுக்கும் கருணா குழுவுக்கும்
இருக்கின்ற தொடர்பும், அவர்களும் இவனுமாய்
ஆற்றிய கடத்தல், கொலை, கப்பம், கற்பழிப்பு என
முப்பத்தைந்து குற்றங்களுக்கு
ஒப்புதல் கொடுத்திருக்கின்றன இந்த
ஊத்தை முகம்கள்..

தமிழனை அழித்துக் காட்டி ஒரு அமைச்சுப் பதவிக்கு
கருணா அரச முகங்களைப் பார்க்கிறான்..

தமிழனைக் கொல்வதாலேயே இந்தத் தாடனை
கோட்டும் கழுத்துப் பட்டியுமாய்
அலங்கரித்திருக்கிறது அரசாட்சி..

இதையெழுதுகின்ற நேரம்,
ஆயிரம்கிலோ நிறையுள்ள
பன்னிரண்டு குண்டுகளை,
வன்னியின் தலையில் இட்டுக் கொண்ட
வதைபடலத்தில்...
இந்தச் சிங்கள
அடிவருடிகள்..ஆகா..இன்னும் இன்னும்
என்று ஆட்சிக்குச் சங்கம் வாசித்துக் கொள்கிறார்கள்..

உதவாக் கரைகளோடு ஓடிப்போனவன்,
இலண்டனில் மனைவி இருக்க, கொழும்புக்
கடற்கரை விடுதியொன்றில்
காரிகை ஒருவர் தோள்பற்றி நிற்கக் கண்டதால்
லசந்தா என்ற இலங்காலீடர்
பத்திரிகையாளனைக் கொன்றான் என்று
அரசாங்கத் தரப்பில் இருந்து
அறிவித்தல் வந்தபோதும்
இந்த அடிமைப்பிரகிருதி சிரித்தபடி நின்றான்..!

கருணாபோல் எத்தனை கயமைக் கூட்டங்கள்..

எத்தனை மானிடங்களுக்கு இந்த எட்டப்பர்
இயமன்களாக வந்து கொண்டார்கள்..

குமார், யோசப், ரவிராசன், சிவராம், வெலிக்கந்தையில்
கொலையுண்ட தொண்டர்கள் என நீண்ட வரிசையைக்
கணக்குப் போட்டால் .....?

விரிந்து பரவும் இந்த
விசமிகளின் நஞ்சு..
பல்லாயிரம் விசப் பாம்புகளாய்..விரிகிறது!

வீராவேசமாக ஒரு விடியலுக்குப்
போராடுகின்ற ஒரு இனத்தை..
அதன் தலைவனை...
இந்தா அங்கே இருக்கிறார்..
இங்கே இருக்கிறார்..என்று
எல்லாம் தெரிந்தவனாக
இராசபக்சாவுக்குத் தன்னைக் காட்டிக்கொள்ளும்
இந்தத் தமிழ்த் துரோகி..
கிழக்கின் விடிவெள்ளி என்றல்லவா
கீதம் பாடுகிறான்..

புலிகளை ஒடுக்க,
இரண்டு கிழமைகள் போதுமென்றவன்
இப்பொழுது ஒரு ஒன்றரை ஆண்டு என்று
இராசபக்சா வீரத்திற்கு
இதிகாசம் உரைக்கிறான் இவன்...!

பிரபாகரன் கோழையல்ல என்று
அரசுக்குக் கூறிய பிள்ளையான் என்ற
கிழக்கின் முதலமைச்சர் பதவிக்காக
முகம்காட்டுபவர்..சிலநேரங்களில்
ஒரு வித்தியாசமானவனாக..

இருந்தாலும் இரண்டும் ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்தாம்..!

ஒன்றரை இலட்சம் தமிழர்கள் ரொறன்ரோ வீதியை
நிறைத்து நின்றார்கள்..

நாற்பதினாயிரம் பெல்ஜியத்தில்..!

ஐம்பதினாயிரம் செனீவாவில்...!

ஒரு நாற்பது பேரை உலகநாடுகளில்
எங்காவது ஒரு சந்தியில்
ஏற்படுத்தக் கூடிய வக்கில்லாத
நாயகர்கர்கள் எல்லாம் என்னமாதிரி
இனநாயகர்கள் என
இராசபக்சா சால்வைக்கு
சாம்பிராணி விசுக்கும் சல்லாரிகளாக
இன்னும் நின்றபடி..!

குண்டைப்போட்டு நசுக்கும்
கொடிய அரசைக் கண்டு
எல்லாத் தமிழர்களும் ஒரே
இனமாக மாறுகிற பொழுது..
இவர்கள் மட்டும் பதவிகளுக்காக...

உலக வரலாற்றில் தமிழினத்தின்
மிகப்பெரிய சாவை இராசபக்ச குடும்பம்
அரங்கேற்றுகிறது..

கதறியழும் தமிழினத்தைக்
காக்கின்ற கரங்களாய் உலகம் முழுவதும்
தமிழன் முகம்காட்டிக் கொள்ளுகின்றான்..

சங்கரிகளாக-சிங்க நரிகளாக
கொழும்பைச் சுற்றிவாழும் சிங்க இறால்களுக்கு
வரலாற்று வலை இறுகத்தான் செய்யும்..!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
எங்க நாட்டிலே-
எங்கள் இனத்திலே...?
-எல்லாளன் எழுதுவது

Sunday, March 15, 2009

மனிதத்தின் வெற்றி


மனிதத்தின் வெற்றி காண்பாய்!

முத்துகுமார் எரிந்தான்தீ எங்கே போச்சு?
முத்தமிழா உன்கதிதான் என்ன ஆச்சு?
சத்தியத்தை எழுதியவன் தர்மம் போமோ?
சரித்திரத்தைக் காட்டியவன் வேள்வி போமோ?
செத்தவர்கள் எதையெண்ணித் தீக்கு ளித்தார்?
சிங்களத்தைத் தூண்டுபவர் வெல்லத் தானோ?
எத்துபவர் எத்தட்டும் ஈழம் எண்ணி
இருப்பவர்க்கே தமிழகமாய் ஏற்று வாரீர்!

அமைதிபடை என்றுவந்த அம்சம் விட்டு
ஆறாயி ரம்மக்கள் அன்று கொன்றார்
மமதைப்பேய் கொண்டவர்கள் மாதர் தம்மை
வல்லுறவில் சீரழித்தார்; வாட்டி வந்தார்
சுமையெல்லாம் கொடுத்தவரே சிங்கப் பேயைத்
தூண்டியின்று ஈழத்தின் சாக்கள் வைத்தார்
எமையெல்லாம் இறப்புக்கே இட்டார் தம்மை
இன்தமிழா வாக்கிட்டு ஏற்பாய் தானோ?

ஓருகையாய் ஈழமதை எண்ணி நிற்கும்
எழும்தமிழர் கையோங்கக் காண்பீர்; எங்கள்
இருகையால் தொழுகின்றோம் எங்கள் முந்தை
இன்பிறப்பே தமிழகமே உங்கள் வெற்றி
தரும்வாக்கில் எங்களுயிர் தங்கும்; இல்லைத்
தறிக்கும்கைச் சூனியமே தாக்கும்; அந்தப்
பெரும்சாவைச் சுமப்பதற்கே பெற்ற மண்ணின்
பெருங்கதைகள் இருக்குமடா புக்காய் நெஞ்சே!

பத்துத்த லைமுறைக்கும் பட்டே போகப்
படுபாவிக் கோத்தபாயன் பார்க்கச் சொன்னான்
செத்துப்போ என்பதுவே தீர்ப்பே என்று
சொல்லுகின்ற சிங்களத்தில் என்ன உண்டு?
கத்துமணித் தமிழ்க்கடலம் கண்ட மண்ணே
கதறியழும் தமிழர்களைக் காண்கப் போமோ?
முத்துமணித் தமிழகத்தின் முன்னே நிற்கும்
முழுப்பணியும் மானத்தின் வெற்றிக் காப்பே!

-புதியபாரதி

(சகல தமிழக ஊடகங்களுக்கும் செல்வதாக)

Saturday, March 14, 2009

தமிழகமே

தமிழகமே தாங்கும் வெற்றி!

முத்துகுமார் எரிந்தான்தீ எங்கே போச்சு?
முத்தமிழா உன்கதிதான் என்ன ஆச்சு?
சத்தியத்தை எழுதியவன் தர்மம் போமோ?
சாக்கடையில் எங்கதுயர் வீழப் போமோ?
செத்தவர்கள் எதையெண்ணிச் செத்தார் தாமோ?
சிங்களத்தை தூண்டுபவர் வெல்லத் தானோ?
எத்துபவர் எத்தட்டும் ஈழம் எண்ணி
இருப்பவர்க்கே தமிழகமாய் ஏற்று வாரீர்!

அமைதிபடை என்றுவந்த அம்சம் விட்டு
ஆறாயி ரம்மக்கள் அன்று கொன்றார்
மமதைப்பேய் கொண்டவர்கள் மாதர் தம்மை
வல்லுறவில் சீரழித்தார்; வாட்டிப் போந்தார்
சுமையெல்லாம் கொடுத்தவரே சிங்கப் பேயைத்
தூண்டியின்று ஈழத்தைத் சாவாய் வைத்தார்
எமையெல்லாம் இறப்புக்கு இட்டார் தம்மை
இன்தமிழா வாக்கிட்டு ஏற்பாய் தானோ?

ஓருகையாய் ஈழமதை எண்ணி நிற்கும்
எழும்தமிழர் கையோங்கக் காண்பீர்; எங்கள்
இருகையால் தொழுகின்றோம் எங்கள் முந்தை
இன்பிறப்பே தமிழகமே உங்கள் வெற்றி
தரும்வாக்கில் எங்களுயிர் தாங்கும்; இல்லைத்
தறிக்கும்கைச் சூனியங்கள் தந்தே நிற்கும்
பெரும்சாவைச் சுமப்பதற்கே பெற்ற மண்ணின்
பெருங்கதைகள் இருக்குமடா பூப்பாய் நெஞ்சே!

பத்துத்த லைமுறைக்கும் பட்டே போகப்
பாடையிடக் கோத்தபாயன் பார்க்கச் சொன்னான்
செத்துப்போ என்பதுவே தீர்ப்பே என்று
சொல்லுகின்ற சிங்களத்தில் என்ன உண்டு?
கத்துமணித் தமிழ்க்கடலாய்க் கண்ட மண்ணே
கதறியழும் தமிழர்களைக் காண்கப் போமோ?
முத்துமணித் தமிழகத்தின் முன்னே நிற்கும்
முழுப்பணியும் கொண்டுவரும் வெற்றி வாக்கு!

-புதியபாரதி

சுதந்திரத் திருநாள்


சுதந்திரத் திருநாள் மலரும்...!


சாவின் மடியில் உருகும் உயிரே
சந்ததி சந்ததி தொழுவோம்!
கூவிக் கதறும் உங்களின் குரல்கள்
ஊழிகள் முழுவதும் பதிவோம!

நாளை மலரும் ஈழமெல் லாமும்
நாயகம் உம்நினை வாக்கும்!
சூளை யாக்கிய சிங்களத் தெறிப்புத்
தீண்டிய எம்முயிர் நிலைக்கும்!

பாளையின் சிரிப்பாம் பாலரை நீங்கள்
பகைவனின் தீயினில் கொடுத்தீர்!
கூழைக் கூட அருந்த விடாமல்
குடியாய் எரிந்திட விழுந்தீர்!

போரிடும் தமிழன் போர்ப்பகை தன்னை
பொடியாய் ஆக்கியே வருவான்!
வீறிடும் எங்கள் வேரின் கதறலை
விரட்டிய சுதந்திரம் தருவான்!

துட்டன் மகிந்தன் தூக்கிய கொலைவாள்
துடித்துமே அவனிடம் திரும்பும்
கெட்ட கெமுனுக்கள் கீழ்த்தரக் கூட்டம்
துடித்திடும் நாட்களே அரும்பும்!

பட்டமண் மீண்டும் பயிர்வேர் எடுக்கும்
பாரில்நம் நாடுதான் பிறக்கும்!
ஒட்டிய உறவுகள் உயிர்ப்பிடும் அந்த
உழைப்பின் சுருதிகள் திறக்கும்!

தேசப் பாவலன் துயர்ப்பா எல்லாம்
சுதந்திரப் பண்ணென விரியும்
பாச மைந்தர்கள் பண்பிடும் தலைவன்
பதிந்திடும் கொற்றமே தெரியும்!

நாளைய உலகம் தமிழனின் கையில்
நாடுகள் எல்லமும் வழுதும்!
தோளில் விழுந்திடும் மாலைகள் எல்லாம்
சுதந்திரம் சொல்லியே எழுதும்!

-புதியபாரதி

Friday, March 13, 2009

உலகத்தமிழா..


உலகத்தமிழா..
உன்கையில் விடியல்..

கண்ணில் தெரியும் மனித விளக்கைக்
காண வில்லையடி-எங்கள்
மண்ணில் இன்னும் மரணப் பேய்கள்
வாலைக் காட்டுதடி

சுனையின் ஊற்றுச் சிவந்த குருதி
சீறி வருகுதடி-சேற்றில்
மனையின் கூடு ஊழிக் கூத்தில்
வாதை கொடுக்குதடி!

நெருடும் காற்று குருடாய் வந்து
குடில்கள் அள்ளுதடி-துயரம்
வருடக் கூட மனிதம் இன்றி
மரணம் துள்ளுதடி!

ஊரும் உறவும் பிரிந்த கூண்டு
உடைந்து பறக்குதடி-உரிமை
கோரும் உறவு கூட இன்றிக்
குலைந்து சிதறுதடி!

உலகத் தமிழா இனியும் எங்கள்
உறவு சாகுமோ?-அந்த
இலவம் பஞ்சாய் இராச பக்சன்
எரிப்பில் வேகுமோ?

அகில மெங்கும் துயிலத் தமிழன்
ஆகக் கூடுமோ?-அட
முகிலைக் கிழித்து அதிர்வைக் காட்டு
விடியல் தோற்குமோ?

-புதியபாரதி

Thursday, March 12, 2009

வீரவணக்கம் தருகின்றோம்..!


வீரவணக்கம் தருகின்றோம்..!

வேள்வித்தீயின் மடியினிலே விழுந்தவெங்கள் உறவுகளே
வேரிற்பதித்த உயிர்களே வீரவணக்கம் தருகின்றோம்!
-வேள்வித்தீயின்

அவலம்தந்த வன்படையான் ஆட்சியீது தானடா
கவளம்சோறும் இன்றியந்தக் காடைபறிக்கக் காணடா!
-வேள்வித்தீயின்

பிஞ்சுவெந்து சாகிறான் பேடிகொன்று முடிக்கிறான்
வஞ்சனையார் கையிலே வஞ்சிசெத்துப் போகிறாள்
நெஞ்சுவெடி ஆகுதடா நிலத்துறவு சாகுதடா
அஞ்சியஞ்சி இன்னுமந்த அரக்கமடி சாவதோடா!
-வேள்வித்தீயின்
இஞ்சிதின்ற குரங்குபோல் இராசபக்சம் ஆனதடா
ஏழுலகம் வாழுகின்ற இனத்தமிழா எழுந்திடடா
துஞ்சவொரு நாழியில்லை தேசமெங்கும் அசைத்திடடா
தேன்தமிழ் ஈழமண்ணைத் திக்கெல்லாம் பதித்திடடா!
-வேள்வித்தீயின்
-சோலைக்குயில்

Wednesday, March 11, 2009

நீயெழு.. நீயெழு


நீயெழு.. நீயெழு

நீயெழு நீயெழு புலியே புலியே-எங்கள்
நிலத்தினில் ஆயிரம் வலியே.. –நீயெழு

சேயொடு தாயும் செத்து மடிகிறாள்-நீ
சிலிர்த்தெழும் நாளிது வெளியே.. –நீயெழு

பேய்விடும் குண்டு பிடரியில் விழுகுதே
பெயர்ந்த நிலங்கள் பற்றி எரியுதே
தாய்விடும் மூச்சு தாங்க முடியுமோ
தமிழ்ப்புலி நீயும் தூங்க முடியுமோ.. –நீயெழு

மரக்கிளை தன்னில் சதைகள் தொங்குதே
மகிந்தன் நரபலி வானம் இடியுதே
பரந்த தமிழினம் பதறித் துடிக்குதே
பாரும் வேடிக்கை பார்த்து இருக்குதே –நீயெழு..
-சோலைக்குயில்

Sunday, March 8, 2009

மாதரார் வாழ்க

மாதரார் வாழ்க! வாழ்க!
(மாதர்தினக் கவிதை
)

மாதரார் வாழ்க, அன்னை
மகத்துவம் வாழ்க, கற்பின்
போதனை வாழ்க, வஞ்சிப்
பெட்டகம் வாழ்க, வையக்
காதலே வாழ்க, மன்றின்
கருவறை வாழ்க, வெற்றிச்
சாதனை வாழ்க, நாளைச்
சந்ததி கொடுப்பாய் வாழ்க!!

பிள்ளைக்கு அன்னை நீயே
பெற்றவர் பிள்ளை நீயே
அள்ளிக்கை எடுக்கும் அந்த
அழகனின் மேடை நீயே
உள்ளத்தே தெய்வம் நீயே
உணவிடும் சுரபி நீயே
வள்ளிக்கு முருகன் போல்
வசமிடும் எழிலாள் நீயே!

சீதனம் உனக்குத் தந்தே
சேர்மணம் கொள்ளல் வேண்டும்
வேதனை தாங்கும் மண்ணின்
வேருனைப் போற்றல் வேண்டும்
சாதனை யாக்கும் தேசச்
சரிநிகர் படையாய் வந்த
மாதரார் ஈழ மன்றின்
மகத்துவம் பேச வேண்டும்!

பாரத்தைச் சுமப்பாய் தேசப்
படைஞர்கள் கொடுப்பாய் மைந்தர்
வீரத்தை ஏற்பாய் தேச
வேங்கையாய் எழுவாய் தன்னை
ஆரத்தி எடுப்பாய் வாழ்த்தி
ஆர்த்திடும் துர்க்கா ஆவாய்
மாரப்பூ இறைவன் செய்த
மனிதமே தாயே வாழ்க!

சோதனைத் தீயில் நின்றீர்
சிங்களக் கொடுமை தின்றீர்
ஆதனத் தோடு சென்று
ஆடவன் கைப்பி டிப்பீர்
பூதலப் தமிழர் பெண்மை
பிரபாவால் விடியல் பெற்றீர்
சீதனம் கேட்டால் தேசச்
சிறையிடச் சட்டம் கண்டார்

மனதினில் துணிவு பெற்றீர்
மனிதமாய் மகுடம் வைத்தீர்
கனரகம் இயக்கு கின்றீர்
கந்தகக் கணையாய்ச் சென்றீர்
தனமெனப் புதுமைப் பெண்ணாய்
தமிழீழத் தேசம் காத்தீர்
இனச்சரி சமமாய் நின்ற
எங்களின் தாயே வாழ்க!

கவிதைகள் செய்வீர் கன்னற்
கானங்க ளிசையை வைப்பீர்
அவையிடப் பரதம் நெய்வீர்
அரசியல் உரைகள் சொல்வீர்
தவமிடும் விடியல் சொல்லும்
தமிழ்மகள் ஆக வந்தீர்
நவமிடும் நிலத்துப் பெண்ணே
நாளிது தெய்வ நாளே!
-புதியபாரதி

Saturday, March 7, 2009

எட்டப்பக் கொடுமை

எட்டப்பக் கொடுமை

எட்டப்பன் பற்றிச் சிவநேசன்
எட்டப்பன் காக்கை எனவுரைத்துப் பார்மன்றம்
துட்டப்பர் பற்றிச் சிவநேசன்-தொட்டுவைத்து
யாழ்ப்பாண மண்ணின் இயமன் எனக்காட்டி
ஊழ்ப்பேயைச் சொன்னார் உரைத்து

ஒட்டுக் கூட்டம்
கற்பழிப்பு கன்னக்கோல் காசுபணக் கப்பமொடு
விற்றுஇனம் சீவிக்கும் வீணரென்றார்;-முற்றும்
துரோகியே ஆகித் தினம்தமிழர் கொல்லும்
குரோதிகைக் காம்பென்றார் கொள்!

கிழக்கின் பதர்

புலியோ டிருந்து பிரிந்தான் கருணா
வலிய எதிரியொடு வாய்ப்பாய்-பலியானான்
சிங்களத்து வெங்கொடுமைச் சேரக் கிழக்கெல்லாம்
பங்கம் விளைத்த பதர்!

அரசியற் குட்டம்
காழ்ப்பு எரிப்போடும் கற்பழிப்புச் சூறையென
கூழ்ப்பானை யாக்கிநிதம் கொன்றாரே-தாழ்ப்பாளின்
உள்ளே குதிரை ஒளித்தோடு கின்றவர்கள்
குள்ளர் அரசியலார் குட்டம்!

பல்லோரைக் கொன்ற பழியர்
சிவராம்; ரவிராஜ் குமார்பொன் பரராஜ்
உவப்பாளர் என்றான விக்கி-சிவப்பாகி
பாராளும் கூட்டமைப்பார் பாரெழுதும் ஊடகத்தார்
ஏராளம் கொன்றாரிவ் எட்டர்!

அந்நிய நிழலின் அடிமை
அந்நியன் சோறாடி ஆட்சிப் படைநக்கி
இந்நாளும் வந்தானே எட்டப்பன்-அந்நாளில்
காக்கை பருக்கைக்காய் காட்டிக் கொடுத்ததுபோல்
ஈக்கள் மலமானார் இன்றும்!

பணம்தேடும் பழியர்
நாட்டுப்பற் றாளர்கள் நாடும் கலைவாணர்
பாட்டுக் கவிபுனைந்த பலபேரை-காட்டிக்
கொடுத்துக் கனித்தமிழைக் கொல்வாரின் காசில்
எடுத்தார் லட்சமாய் எட்டி!

சொந்த இனத்தை மாய்த்த தீயர்
புளொட்மோகன் ராசிக்குழு பீற்றர் கருணா
களடக்ளஸ் நெப்போலி யன்னாய்-நிலத்தாயின்
செந்தமிழ் ஊட்டுச் சிறப்பாளர் கொன்றாடி
சொந்தநிலம் தீய்த்தாரே சொல்!

சிங்களரும் ஒட்டரும் சேர்ந்த கொலைக்காடர்
புலனாய்வர் இக்குட்டப் பொல்லாதார் கூடி
வலிகாமம் வீடுடையோர் வாட்டி-களவாடிக்
கொள்ளை புரிந்த கொடும்காதை செய்திகளில்
அள்ளிவரக் கண்ட அசிங்கம்!

தொண்டரைக் கொன்ற சிந்துஜன்
புனர்வாழ்வு பூப்பாரைப் போட்டுவெலிக் கந்தை
தனிலாடிச் சிந்துஜன் சுட்டான்-மனிதமே
இல்லான் இவனோர் எரித்தாக்கிக் கொன்றாடும்
பொல்லான் கருணாப் பிரிவு!

வழிசொல்லும் பழியர்
புளொட்கும்பல் ஈப்பீடி ஈயென்ரி எல்எவ்
களக்கும்பல் ஆட்சியொடு கண்டு-வளநாடு
வாய்கால் இருட்காடு வந்தார் வழிசொன்னார்
நாய்க்கால் அருகாய் நடந்து!

எட்டப்பனால் இறந்தார் அதிகம்
எதிரி அழித்து இறந்தாரை விஞ்சும்
பதர்கள் அழிக்கவுயிர் பட்டார்-சிதையில்
துயிலாரும் மாவீரர் தேசத்து நெஞ்சின்
உயிராற்றை ஓருமோ ஒட்டம்!

இது இரண்டாயிரத்தேழின் இடர்
இரண்டாயி ரத்தேழு ஒக்ரோபர் துக்கார்
புரண்ட நிரைக்காடு போட்டேன்-அரக்காது
எட்டப்பன் காக்கை இதிகாசம் கொண்டாடும்
துட்டப்பர் சிங்களத் தோட்டி!

குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு வார்த்து

குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு வார்த்து
உளக்கிக் குவித்தார் ஒட்டர்-குளவியாய்
குத்துவார் கொல்லுவார் கொள்ளை பறிக்கும்
எத்துவார் ஆகினர் எத்தர்!

விரிவுரையாளரைக் கொன்றார்
விரிவுரை யாளர்கள் வித்துவம் கல்வி
புரிகுவர் பார்த்துமே கொன்றார்-நரியாய்
புலனாய்ப் படையொடு போந்தவர் தன்தாய்
நிலத்தையே தீயிட்டார் நாசர்!

பிரிவுகளான பித்தர்
இடக்ளஸ் ஒருபக்கம் பிள்ளையான் என்பான்
மடக்காய் கிழக்கோடும் மற்றோன்-குடக்கன்
கருணா ஒருபக்கக் கந்தலாய் பிய்த்துக்
குருதி குடித்தாரே குத்தர்!

காக்கைகள் காணும் யாக்கை
கோடியாயக்; கோடியாய்க்; கொண்டனர் காசுறும்
பேடியாய் ஆகினர் பெண்டர்கள்-மாடியாய்
மாளிகை யாக்கினர் மடியினிற் போட்டனர்
தூளியாய் அந்நியத் துத்தர்!

இனங்கள் பொருதும் இடர்
முசுலீம் படையிட்டு முத்தமிழ ரோடு
பிசிறைக் கிளப்பவகை பெய்தார்-அசலாய்
தமிழமொழி கொண்ட தண்ணார் இனங்கள்
அமிழவழி இட்டதே ஆட்சி!

தாடிமயிர் ஒட்டர்
கோடிபணம் அள்ளி குலத்தை எரித்தவர்கள்
தேடி யுலகனைத்தும் சென்றார்-தாடிமயிர்
காட்டித் தனித்துவங்கள் காட்சி ஒழுகவைத்த
கூட்டர் கொன்றாரெம் கூடு!

பினாமிகளில் சொத்து
எழுநூறு கோடி இலங்கைப் பணத்தை
கழுகாய்ப் பறித்திட்ட கள்ளன்-குழுவாய்ப்
பிரிந்து பினாமிப் பெயர்களிலே சொத்தை
உரித்தான் கருணா உமி!

கருணா-பிள்ளையான் கணக்கு
கிழக்கில் கருணாவும் பிள்ளையான் என்றும்
உழக்கும் குழுவாக உண்டானார்-முழக்கி
இராணுவப் பூட்டுக்குள் எல்லாமாய் வீரப்
புராணங்கள் பாடுகிற புல்லர்!

சிறையிருந்த சிங்கன்
பிரித்தானி யாச்சிறையில் பேடி கருணா
சிரிப்பாகி நிற்கின்றான் செப்பீர்-நரிலங்கா
வேங்கைப் பலத்தை விசுக்க வயமிட்டு
நீங்கினான் இன்றொன்றும் இல்லை!

செய்தி: கொலையிடும் கருணா கூட்டம்

பிள்ளையான் கூட்டம் பிடித்தார் கருணாவின்
உள்ளக் குழுக்கள் உடையோரை-குள்ளக்
கருணா கொடிகட்டிக் காட்டேரி யாகவே
பெருத்தகொலை யாக்கினான் பேய்!

காலம்முழுதும் பழியார் வடுபேசும்

எட்டப்பர் கூட்டம் இடித்தாக மண்ணின்
கெட்டப்பர் என்றெழுதிக் கொண்டாரை-துட்டப்பர்
என்றேதான் தூற்றும் இனத்து வரலாறு
என்றென்றும் தானென்று எண்ணு!

ஈழப்போர்: கூட்டமாய் வந்த எட்டப்பர்
கட்டபொம்ம னுக்கொருவன் காக்கையவன் வன்னிக்கு
எட்டப்பர் கூட்டமெங்கும் ஓரானே-கெட்டவர்கள்
ஈழப்போர் தன்மட்டும் எட்டாகி எட்டப்பன்
சீழாகி வந்தானே செப்பு!

இந்தப்போர் மட்டும் ஏராளம் எட்டப்பர்!
கற்பழித்தான் சிங்களவன் காரிகை செத்தாளே
விற்றவனோ ஆட்சியை வேதமென்றான்-கற்றறியான்
கெட்ட கருணா கிளக்கனாய்ப் பிள்ளையான்
டக்ளசான் என்றாம் இடாப்பு!

தாய்மண் சிதற நீமட்டும் சிங்களத்திலா?
சிங்களவன் குண்டு சிதறடிக்கும் போதிலே
எங்களவன் எட்டப்பன் ஆவதோ-வெங்களத்தில்
வேங்கை மணிப்புதல்வர் வீழ்கின்ற போதிலே
நீங்கியே சிங்களத்தை நீக்கு

-சோலைக்குயில்

Thursday, March 5, 2009

நேற்று..இன்று..நாளை

நேற்று..இன்று..நாளை..!

நேற்று..
கொத்துகொத்தாய்ப் பூக்கள் தூவும்
தத்திவந்து தவளை பாயும்
கத்துகுயில் சிந்து பாடும்
சித்திரையில் கன்று துள்ளும்
அத்தான்மடி வஞ்சி துஞ்சும்
முத்துமாரி மணிகள் கொஞ்சும்
குத்துகுளிர் பனிகள் மேவும்
இத்தனையும் இயற்கை விஞ்சும்!

இன்று..
செத்துமடி யுதெங்கள் தேசம்
புத்தவகி டுவந்து மோதும்
யுத்தமகிந் தனவன் குண்டில்
சுத்தியெரிந்து நிலம் சாகும்
கத்திக்குழறும் பிஞ்சு மணிகள்
எத்திக்கருகும் புல்லர் தீயில்
பித்துபிடித்த சிங்க ஆட்சி
மொத்தியிறைக் குதடா சூழ்ச்சி!

நாளை..
விடியலெழு திநிற்பான் வேங்கை
குடிகளிணைந் துசொலும் வாழ்க்கை
மிடிகளக லுமெங்கள் தேசம்
கடியபகை மிரண்டு ஓடும்
அடிமைவிலங் கொடிந்து போகும்
நெடியசுதந் திரங்கள் மேவும்
படியமடிந் தவர்கள் மண்ணில்
புதியபர ணிசொல்லும் என்றும்!

நன்றி: சுந்தரபாண்டியன் கவிதை

Wednesday, March 4, 2009

தேசியத் தலைவன்

தேசியத் தலைவன்

தேசார் தலைவன்


தேசார் தலைவனென தேவனுருக் கொண்டதுபோல்
ஆசிபெற் றாண்டவனாய் ஆளவந்தான்-வாசமண்ணில்
எல்லை யொடித்துவந்து கொல்;லும் அரசபடைத்
தொல்லை முடிக்கவந்தான் தீரன்!

முகாம்கள் கொடுத்த முகம்

ஆனையிற வாகுவழி ஆர்கிழக்குக் கேகுவழி
கூனை யுடைத்தபடைக் கேடுகண்டான்-தானைசிங்கப்
பூனைநரி யானதிமிர்ப் பொல்லார் தெருச்சதிரில்
மானமகன் நோகநின்றான் மண்!

அவலக்கதை அறிந்த அம்பி

காலவரை யின்றிவதைக் காட்டு மிராண்டிகளாய்
சாலையெலாம் இட்டார் சவக்கிடங்கே-பாலனாய்க்
கண்ணில் அவலக் கலவரங்க ளிட்டகதை
எண்ணி யொடிந்தான் இதயம்!

தமிழ்மன்னர் சரித்திரம்

தேசம் தமிழெடுக்கத் தேர்ந்த அரசாட்சி
வீசும் முரசார்க்கும் வேந்தனென-ஆசையொடு
சங்கிலியன் பண்டாரன் சாற்றும்இ ராவணனார்
தங்கநிலம் கற்றானே தான்!

தமிழீழ அரன்வகுத்த தம்பி

ஆட்சி அமைச்சர் அரசாட்சி போர்ப்படைகள்
காட்சி கொடுக்கக் கனிந்ததமிழ்-மாட்சிமையாய்
வன்னித் தலமுறையும் வண்ணத் தமிழீழம்
சென்னியெலாம் வந்த சிறப்பு!

நான்குபடை கண்ட நாயகன்

மரபுப் படையோடும் வான்படையும் நீரார்
சுரமாய்க் கடற்படையும் சேர்த்தான்-கரும்புலியாய்
தன்னாவி எற்றித் தடைகள் உடைத்தெறியும்
பொன்னார் படையுமிட்டான் பேசு!


பிரபாவின் சிறப்புப் பெயர்கள்

சூரியன்; பிள்ளை சுடரோன் கரிகாலன்
சேரனொடு பாண்டியனும் சோழனென-வீரமொடு
தமிழீழம் மீண்டுமிட்ட தம்பிபெருங் கூட்டம்
கமழும் பலபெயர்கள் காட்டும்!

காந்தக் கண்கள்

காந்தம் அவன்கண்கள் கண்டுண்ட நாகமென
ஏந்தும் உரையாடல் இன்னமுதம்-பூந்தமிழர்
வீரியங்கள் போர்த்தநிலம் வித்தாய்ப் புலிகளிட்ட
போர்வயங்கள் யாவுமிவன் போதம் !

போரென்றால் போர்

போரென்றால் போரென்றான் தீர்வென்றால் தீர்வென்றான்
போரிட்ட சிங்களத்தைப் புட்டுவைத்தான்-நேரிட்டு
மாவீரன் என்க மகிந்தவதை மண்காக்கத்
தேவாரக் கோடுவைத்தான் தீரன்!

மசியாத மானவீரன்

வீரங்கொள் வேங்கை விளைந்துவரும் தத்துவத்தே
ஆரமுதம் ஆக்கியதோர் ஆசிரியன்-பேரங்கள்
போட்டும் மசியான் பெருங்காசு காட்சிவைத்துக்
கேட்டதுவே இந்தியத்துக் கேடு!

சொல்லிற் சூரியன்
மாவீரன் எண்ணி மனதுப் பெருங்காதல்
கோவிலாய் ஆக்கும் குலவேந்தன்-நாவாய்ந்து
சொன்னா லதுவேதம் சொல்லிற் துளிதவறி
நின்றாலு மேரான் நிசம்!

தேசப்பெண்

அடுப்படியி லாக்கியவள் ஆர்தோளி லேவும்
துடுப்பெடுத்துக் காக்கின்றாள் தேசம்-கொடும்வாதைக்
காட்டேறி மண்வந்து கற்புக் குலமாதர்
வாட்டும் கதைமுடிப்பாள் வஞ்சி!

அண்ணனின் அமுத வாக்கு

அண்ணன் சொலும்வேதம் ஆரமுதம் உள்வாங்கி
கண்ணிமைக்கும் போதே களமெடுப்பாள்-மண்ணில்
புலிப்படையும் மாதர் பெரும்படையும் கண்டு
எலிப்படையாய் ஓடுவான் எத்தன்!

வாராது வந்த மாமணி

வாராது வந்தவொரு மாமணியே தம்பியொரு
நேராக வந்த நிலவேந்தன்-கூராக
ஈட்டிவதை போட்டு எரித்தவர்கள் காட்டிலெதிர்
மூட்டியதே நீதிப்போர் மீட்சி!

முடிந்த ஒப்பந்தம்

சுதுமலையில் தம்பி அதிருமுரை தந்து
எதிரொலிகள் வைத்ததொரு எண்ணம்-அதுபோலே
இந்தியமும் லங்கா இணையிட்ட வொப்பந்தப்
பந்தி முடிந்ததடா பார்!

இந்தியம் காணாத இனத்தலைவன்

இந்தித் தளபதிகள் இப்படியோர் போர்த்தலைவன்
சந்தித்த தில்லையெனச் சாற்றினரே-இந்தியத்து
வல்லரசுக் காட்டினிலே மாறன் பிரபாபோல்
இல்லையொரு வீரனென்றார் ஏர்!

நீதிப்படை

புலிப்படையாய் நீதிநெறிப் போதமெனக் காணும்
நிலப்படையாய் ஆர்க்கின்றார் நித்தம்-எலியான
எட்டப்பர் ஒட்டர் இனத்துப் பதர்வந்தும்
கட்டுக் குலையாக் கணக்கு!

பிரபா பதிகம்

பிரபாகை நோக்கிப் பிறக்கும் திசையில்
சுரமாகி ஏவுகணை செல்லும்-கரிகாலன்
கட்டளையில் நின்று கனிநிலத்தைக் காப்போரின்
பட்டுப் பதிகமிது பார்!

பொதுவுடமைப் பிரபா

பொதுவுடமைப் பாட்டாளிப் புத்தகமாய்ப் பேணும்
மதியுடைமை யாக்கினான் மண்ணில்-நதியார்ந்து
வண்ணம் பொருண்மியம் வாருழவம் விஞ்ஞான
எண்ணமெலாம் ஆவான் இவன்!

மூத்த கலைஞர் போற்றுதல்

தொடர்பாடல் ஊடகம் தேசக் கலைகள்
நடம்பாட்டு வாத்தியமே நன்றாய்-புடம்போட்டு
மூத்தோர் அறிவோர் முழுநேரத் தூரிகையர்
ஏத்தும் பிரபாவென் றேர்!

பெண்வீரம் நிலம் வெல்லும்

விடியலிலே பெண்கள் விளையும் நிலமே
மிடிமையிருள் போக்கிநலம் மீளும்-அடிமையென
வாழும் இனமென்றும் வாழாது வெங்கொடுமைச்
சூழும் இனம்வீழும் செத்து

பலமே இனம்வெல்லும்

பலம்கொண்ட நாடொன்றே பார்க்கக் கணிப்புக்
கலம்கொண்டு நிற்பதாய்க் காணும்-நிலம்மேவி
வல்லமை நீடுயர்ந்த வண்ணமே தற்காக்கும்
துல்லியங்க ளாக்கும் தெரி!

ஒற்றுமையே பலம்

நாடொன்று தோன்றுமெனில் நற்புயங்க ளார்க்குமெனில்
கூடொன்றாய் ஆகிக் குதிக்குமெனில்-தேடொன்றாய்
மக்கள் அருகணைந்து மண்விடிய லாகவரும்
பக்கமெலாம் ஒற்றுமையே பார்!

உரிமையொடு வினவும் பிரபா

மண்ணின் துயரில் மான நெடும்போரில்
கண்ணாய்ப் பணியாற்றும் காரிளையாய்-எண்ணீர்
உரிமையொடு கேட்கின்றேன் ஏற்றபெரும் பாதைச்
சரிதமொடு நின்றுலகிற் சாற்று!

எட்டில் எடுத்த உறுதி

தாய்மண்ணும் கொப்பாட்டன் தந்த பெருமண்ணும்
பேய்வந்து தாலாட்டப் போகோம்நாம்-ஓய்வின்றி
மீட்சிப் பெரும்போரை வேராக்கிப் போர்வெல்லும்
காட்சியினி ஒன்றே கணக்கு!

பிரபா கூறும் போர்யுக்தி

கொன்று இனமழிக்கும் கூற்றப் பெரும்போரை
வென்று நாமெழுதும் வேளைவரும்-இன்றுநாம்
போரை இலாவகமாய்ப் போடும் வரைபடத்தே
ஆரை வடித்ததென்றே ஆர்!

கார்த்திகை உரையில் கரிகாலன்

புலத்தீர் கிறுங்காதீர் போர்வேங்கை தொய்விற்
துலங்குவதாய் எண்ணாதீர் தோளீர்-கலங்காமல்
வையப் பெருஞ்சாரல் வகுத்த மணித்தமிழீர்
கையில் இருக்;குதெங்கள் காப்பு!
(written in 2008 By Solaikkuyil)