விசங்களால் வீழ்த்தப்பட்ட லசங்கன்..
-----------------------------------
லசங்கா..
விசங்கள் இம்முறை வென்றதடா..
புசங்கள் உயர்த்திய ஊடக மனிதா-நீ
கசப்போக்கிலிக் காடையால் மடிந்தாய்..
புத்தனை இன்று யுத்தன் ஆக்கிய
மகிந்தன் கூட்டம்
பட்டியிலிருந்து அவிழ்க்கப்பட்ட
புடையன்களாய்..
லசங்கா.. லசங்கா...நீ
உசர ஏற்றிய உண்மை ஊடகம்
கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில்..
காடைகளின் ஆட்சியில் பாடைகளின்
ஊர்வலம் இன்னும் பவனிகளாய்..
போர் என்ற போதையில்
பக்;சாக்களின் வாதைகள்
காட்டுமிராண்டிகளாய்க்
காட்சி விடுப்பது என்னவாக இருக்கும்?
இராணுவ ஆட்சியொன்றின்
இரத்தவெறி ஆரம்பம்
சிங்களவனுக்கும் கொடுக்கப்படுகிறது..
உன்குருதி எடுத்த
இரத்தக் காட்டேரி..
நாற்பத்தியெட்டு மணிகளுக்கு
முந்தியதாய்
மகாராசா தொலைக்காட்சிக்கு
மரணம் கொடுத்தது..
மகிந்த சகோதரர்கள்
நாய்களும் பேய்களுமாய்..
மரணக்குழி கிண்டுவதை
நீ மார்தட்டி உரைத்தவன்..
காசுகளை கொள்ளையடித்த
ராஜபக்சாக்கள்
வீசிய அரிவாள்களில்
நீயும் விழுந்துவிட்டாய்..!
வன்னித் திடலில்
கன்னற் சிறுசுகளோடு
அன்னை தந்தை அயலோடும்
ஏவுகணை வெடியில்
இரத்தக் குளத்தில் கிடப்பதை
சமநேரம் பார்த்துத் துடிக்கிறேன்..
தமிழனின் விடுதலைக்கு நீயும்
தந்த உயிரைச் சேர்த்துக் கொள்ளுகிறோம்..
பொறுக்க முடியாத
பூகம்பமாய் தர்மம்
பொங்கி நிற்கிறது..
பீறும் நெருப்பு
வீறு பூக்கும் நேரம் பார்;க்கிறது..
நாளையல்ல
இன்றே விடைதெரியும்..லசந்தா
விக்கிரமசிங்கே
உண்மை ஊடகங்களின் கண்ணீர்
உன் பூவுடலின் மேலும்
பொழிந்தபடி..
உனக்கு விடை சொல்லுகிறோம்..
சென்றுவா தர்மம் வெல்லும்..!
சுந்தரபாண்டியன்..
Subscribe to:
Post Comments (Atom)
மனதைப் பாதித்த வலியை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteநான் காலை முதல் நினைத்துக் குமுறிக் கொண்டிருந்த எண்ணங்களை உங்கள் வரிகளில் காண முடிகிறது. உங்கள் துணிச்சல் மிகுந்த வரிகளைப் பாராட்டுகிறேன்.
இந்தத் துயரில் நானும் பங்குகொள்கிறேன்.
பஹீமாஜஹான்