கருணா அவர்களுக்கு,
காட்டிக் கொடுத்தாலும் கொடுத்தீங்க..
களங்கமில்லாத ஒரு பழி
காக்கை வன்னியனுக்குப் பின்னால்
எழுதப்படுகிறது..
கருணா அம்மான்..!
கிளிநொச்சி கைப்பற்றியதிற்கு ஒரு
தமிழனின் உதவி
பின்னால் இருக்கிறதென
மகிந்தக் கூற்று மடியிறக்கிக் கொண்டது..
ஆனால் என்ன..?
சிங்களப் படையின் வெற்றிக்குப் பின்னால்
ஒரு தமிழனா?
யார் சொன்னது?
இருநூறு பேருடன் வந்த கருணாவினால்
எதுவும் நடந்துவிடவில்லை என்கிறார்
சரத் பொன்சேகா..!
போக முடியாத இடமெல்லாம்
போகும்வழி நீங்கள்தான் காட்டியதாக
இருக்கும் தடயங்கள் எல்லாவற்றையும்
பொன்சேகா போட்டு உடைத்துவிட்டார்
போலத் தெரிகிறதா..?
உப்பாற்றக்குப் பின்பக்க வழிசொல்லியது
நீங்கள்தான் என்கிறார்களே..!
உங்கள் காட்டிக் கொடுப்புக்குப் பின்னாலேதான்
சிங்களக் காட்டேரிகளின் சீற்றம் தொடங்கியதாக
ரணில் மாத்தயா இரண்டறக் கலந்துரைத்தவையும்
இந்த நாட்களில்தான் வந்திருக்கிறது..
மகிந்த மெத்தையில் படுத்துறங்கும்
நாய்க்குட்டி அல்லவா நீங்கள்?
பிரபாகரன் சரித்திரம் முடிந்துவிட்டதாக அல்லவா
உரமேறிய உங்கள் பேச்சு உலுப்பிவிட்டிருக்கிறது..
போனாலும் போனீங்க..
எட்டப்பன் கோட்டுக்கு மேலாக
எம்புகிறதே உங்கள் குரல்..
ஓடுகிற கட்டபொம்மன் இல்லை
கரிகாலன் என்கின்ற பிரபாகரன்..
இன்னும் சிலநாட்கள்..
சிங்களத்திற்கும் உனக்கும்
சேதிவரும் என்கிறார்களே..!
நானும் பார்த்திருக்கிறேன்..
நீயும் பார்த்திரு..
தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
பின் அந்தத் தர்மம் வெல்லும்...
இப்படிக்குச்
சுந்தரபாண்டியன் எழுதுவது..
-நன்றி சுந்தரபாண்டியன் இணையத்தளம்.
Subscribe to:
Post Comments (Atom)
நிச்சயம் சரித்திரம் திரும்பும் சுந்தரபாண்டியன். பிரபாகரன், புலிகள் என்று முடித்துவிட்டு சிங்கள ராணுவம் அடுத்து கருணா, பிள்ளையான், டக்ளஸ் என்றுதான் திரும்பும். அப்போது இவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யார் முன் வருவார்கள் என்று தெரியவில்லை..
ReplyDeleteஈழத்தில் பாலுக்கு கூட வழியில்லாமல் அழும் குழந்தைகளை விட
ReplyDeleteபாபர் மசூதி ஒன்றும் பெரிதில்லை.
கவிதையில் கண்ணீர் வடிப்பவரை விட
துடைத்திட கை கொடுக்கலாம் என்று நினைப்பவர்களை ஆதரிப்பதில் தவறில்லை.
இலங்கைத்தீவில் ஈழம் மலரட்டும்
தமிழ்நாட்டில் தானாக தாமரை மலரும்.
பிஜேபி தான் முதலில் LTTE தடையை நீக்க கோரிக்கை வைத்தவர்கள். திமுக தலைவர் அதை இதுவரை சொன்னாரா? அவர்தான் ஆட்சியை காக்க துடிக்கும் சந்தர்பவாதி. விடுதலை புலிகளையும் , ஈழ விடுதலையும் யார் ஆதரிகிரார்களோ அவர்களுக்கு தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும். தமிழர்களை பொறுத்தவரை காங்கிரஸ் , திமுக வாய் விட பிஜேபி ஆயிரம் மடங்கு நல்லவர்கள்
ஓடுகிற கட்டபொம்மன் இல்லை
ReplyDeleteகரிகாலன் என்கின்ற பிரபாகரன்..
எட்டப்பன் கூட்டமெல்லாம் நாட்டை விட்டு ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை