Thursday, April 30, 2009

பரமேஸ்வரா..


உண்ணாது மண்ணை
உயிரோடு எழுதும் பரமேஸ்வரா..

சுப்பிரமணியன் பெற்றெடுத்த சுந்தரனே..!

உன்னை எனக்கு அல்ல.. அல்ல..
எமக்குத் தெரிகிறது..

ஒரு திலீபனாக..

ஒரு பூபதி அன்னையாக..

காந்தியத்தை வாந்தியெடுத்த
காந்தி குடும்பம் காணாத கர்மவீரன் நீ..

சென்னியில் இருந்து வன்னியைக் காட்டும்
உனது உயிரின் வரைபடத்தை
இப்பொழுது உலகம் பார்க்கிறது..

உனது முகத்தின் ஒளி இன்னமும் இருக்கும்..
அந்த இருபத்தி நான்காவது நாள் இது..

சீனாவின் வீட்டோவினால் அய்நாவில்
உன்சரித்திரம் அடங்கிவிட்டது..

உனது மக்களைக் கொன்று புதைக்கும்
சிங்களக் கூடாரத்தை இந்த
உலகிற்குக் காட்டுகிறாய் நீ..

குன்றாய் விரியும் சடலக் குவியல்
இன்றும் வருகிறது..

ஆழக்கடலில் நீளம் புதைந்த
சிங்களக் காட்டுமிராண்டிகள்..
பிராண்டி எடுக்கும் பேய்களாய்..

சோனியா தன்பிள்ளைகளுக்குக்
கூனியாய் எழுதும் கதையில்
வாழ்நாள் முழுதும் பழியைச் சுமக்கும்
பரதேசி ஆகிறாள்..

கழிஞன் கதையாய் கருணாநிதியின்
கபட நாடகங்கள்..

உலகம் இன்னமும் உன் உயிரின்
விலையை உணரவில்லை..

உன்னை எமக்குத் தெரிகிறது..

இந்த வரலாறு உன்னை
இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும்..

நீயொரு பிரபா மண்ணின்
பிம்பம்..

உன் பாதார விந்தங்களில்
பாப்புனைகிறோம்..

நாளைமட்டும் அல்ல
இன்றும் உனதே..
-புதியபாரதி

Tuesday, April 28, 2009

ஒபாமாவுக்கான வேண்டுகோள்.
83இல் காடையர்களை கொலைசெய்ய அனுப்பிவிட்டு
யேயார் தூங்கியதால்தான் தமிழன் நாட்டை விட்டுப்
புறப்பட்டான்.
58இல் கொன்றார்கள்.
பாணந்துறையில் ஐயரைக் கொழுத்தியது முதல் எத்தனை
மதகுருமார்களைச் சுட்டும் எரித்தும் சிறீலங்கா கொன்றகதைகள் உலகில் யாருக்கும் தெரியாது..
இப்பொழுது தமிழ்ப்பெண்களை இராணுவமே சாப்பிடு என்று
கோத்தபாயா சொன்னானே யாருக்கும் தெரியுமா?

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு என்று கொள்ளையடித்த
நகைகளை அனுரதபுரத்தில் ஆமி விற்கிறானே
யாருக்கும் தெரிகிறதா?

ஊடகக்காரர்கள் என்ற கோதாவில் வந்து
கொம்பியூட்டர்கள் கொள்ளை அடித்துப் போகிறார்களே
யாருக்கும் தெரிகிறதா?

அல்லை, கந்தளாய், மணலாறு என தமிழன்பூமி முழுவதும்
பறித்த சிங்களவனை தமிழ் எழுத்தில் இங்கே
பதில் உரைக்கிறான்.

சிங்கள இராணுவம் பஞ்சமா பாதகத்தின் முழுவடிவம்.
புலிகள் அப்படியா?
எங்களுக்குத் தெரியும் அவர்கள் புனிதமானவர்கள்.
-சுந்தரா

மானுடம் உள்ள அமெரிக்கர்களால்தான் ஒபாமா நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்.
மானுடம் அல்லாத சிங்கள வெறியர்கள் குஞ்சும் குழந்தையுமாய் கொன்று தள்ளுகிறார்களே, உந்தன் மானுடத்தைக் காப்பாற்று..மனிதாபிமானத்தைக் காப்பாற்று.. தமிழன் மீதான இனப்படுகொலையில் இருந்து காப்பாற்று.. சில நக்குண்ணிகளுக்கு ஒரு இனத்தின் மீதான கொலைவெறி தெரியாது. ஒபாமா நீயும் தெரியாமல் இருந்தால்.. எல்லாம் புச்சுப்போல் ஆகிவிடும்..
-எல்லாளன்

Monday, April 27, 2009

புதைகுழி எங்களுக்கு மட்டும் அல்ல..


ஈழத்தமிழன் தலைகளில்
பந்தா அடிக்கின்றீர்கள்.

சோனியா ஒருகதை.

ராகுல் ஒரு கதை.

பிரியங்கா ஒருகதை.

மேனனும் நாராயணனும் தில்லியில் ஒருகதை
பேரரக்கன் இராசபக்சாவோடு இன்னொரு கதை.

கருணாநிதி எங்கள் கண்ணீரோடு
இன்னொரு கதைவசனம்..

முகர்சி இன்னொரு முகர்சிங் வாசிப்பு.

ப.சிதம்பரம் இன்னொரு பகிடி.

மகிந்தன் சொல்லுவதெல்லாம் பொய்.
சொல்லாத அத்தனையும் மெய்.

போர் வெல்லவெல்ல அவன் பேச்சு.
ஊர் இல்லாமல் தமிழனைக் கொல்லுவதே
அவன் மூச்சு.

ஈழத்தமிழன் மரணம் நீடித்தால்
கூனியாளை இத்தாலி அறுப்பாள் என
இந்த வரலாறு எழுதும்..

கருணாநிதிக்கு தமிழகத்தின்
கழிஞர் எனப்படுவார்..

ஈழத்தமிழன் வீரபரம்பரை.

எங்கள் மரணங்களில்
இன்னும் எழுவோம்.

சதியாளர்களே புதைகுழிகளை
எங்களுக்காகத் தோண்டாதீர்கள்..

அது உங்களுக்கும்தான்!

-சுந்தரபாண்டியன்..

Saturday, April 25, 2009

அறமே எழுந்துவா!
அறம்பாடு கின்றேனே அறத்தாளே எழுந்துவா
அசுரமடி கிழித்தெறிய ஆரோக ணித்துவா
திறம்பாடு கின்றேனே தீயூழித் தாயேவா
தீயர்பொய் சொல்லுகிறார் துரந்தரிநீ துடித்தெழடி
இறக்காடு நடத்துபவன் இராசபக்ச பாரடிநீ
இரசாய னக்குண்டை ஏவுகிறான் பாரடிநீ
மறக்காட்டுச் செந்தணலே மாகாளி துடித்துவா
மண்சாம்பல் ஆக்கிவரும் மகிந்தபடை அழித்துவா!

அன்றிந்திப் பேயரக்கம் அமைதிபடை என்றுவந்தார்
இரசீவின் கொடுமையிலே இனத்தமிழன் அழிந்தாரே
இன்றவளாம் சோனியாப்பேய் ஈழமண் அழிக்கின்றாள்
ஊழித்தீ அறம்காட்டு இவள்குணத்தை அழிக்காயோ?
சென்றவர்கள் தில்லிநகர்த் தேசத்தார் தீக்குணத்தால்
சிறீலங்காப் பொய்யருக்காய்த் தூதிட்டார் அழிக்காயோ?
கொன்றுபுதை ஆக்கிவரும் கூட்டாரைக் கண்டுவா
குஞ்சுகளே கருகுதடி குதித்துவா மறத்தாளே!

கருணாநி தியானே காசுமடி படுத்துறங்கும்
கழிவுபொய் சொல்லுகிறான் கண்டுவா செந்தணலே
பிரபாக ரன்தம்பி பிணமாக்கச் செய்வதற்காய்
பேசியவொப் பந்தமாய்ச் சோனியாக் கூட்டமொடு
கரம்கோர்த்துச் செல்லுமந்தக் காட்டாரைக் கொண்டுவா!
கணமொருபொய்க் கஞ்சலரைக் காணாயோ செந்தழலே
இரையாக்கி வாலயரை இறைஞ்சியள்ளி வல்லுறவில்
இராசபக்ச கோத்தபடை ஏவுகிறான் அழித்துவா!

ஈழத்தமிழ் உயிர்கள் இவர்களுக்கு விளையாட்டு
ஏழிலங்கைத் தீயாளே இறைஞ்சுகிறேன் எழுந்துவா
ஊழித்தீ யானவளே உத்தமியே குதித்துவா
இரசீவின் உயிருக்காய் இன்தமிழர் அழிப்பதுவோ?
ஆழிக்க டல்மகளே அதிரமண் இறங்காயோ?
அன்னைதந்தை சிறார்களென அலறுதடி பார்க்காயோ?
வாழியெனத் தமிழர்கை வந்துநீ வாழ்த்துகையில்
வதைகொடுக்கும் மகிந்தபடை வாலறுந்து போகுமடி!

சீதையவள் தொடுத்தாளே செந்தணலே எழுந்துவா!
திரபதை யம்மநகர்த் சுடுநெருப்பே எழுந்துவா!
பாதைத வறியதால் பாண்டியனை நீறாக்கிப்
பார்த்தகண் ணகியாளின் பண்புத்தீ எழுந்துவா!
நீதிக்கோ டழித்தவரை நீறாக்கு நீறாக்கு
நின்றுபார்மே னன்முகர்சி நாராய ணக்கும்பல்
கூதிப்பேய்ப் பொய்யரிடும் கூற்றங்கள் அழித்துவா
குடிலுயிர்கள் காத்திடவே கொழுந்தாளே எழுந்துவா!

-அக்கினிக்குஞ்சு
(Pray in every temple)

Wednesday, April 22, 2009

பிரபா என்னும் பரணித் தலைவன்!வெண்பா
வாராது வந்த மனிதப் பெரும்தலைவன்
தேராது நிற்பவர்க்குத் தேசமில்லை-கூராட்சி
தின்று உயிர்கருக்கும் தீக்கொடுமைப் பேய்நாட்டை
என்றும் அறியாதோர் இத்தர்!

நீதி வழுவான் நெறிபிசகான் பின்னெண்ணி
மாதுக்கள் காணும் மனதுஇலான்-பூதசிங்கர்ப்
போந்தானும் கூடப் பொரியள்ளச் சென்றவரும்
மாந்தித் திளைத்தாரே மாது!

நற்குணங்கள் வாய்த்தவனாய் நற்றமிழைப் போற்றிவரும்
பொற்குணங்கள் கொண்டவொரு பேதமிலான்-அற்புதமாய்
மூன்று தசப்தங்கள் முன்னேற்றுப் பேருலகம்
ஒன்றாய்த் தமிழனிட்டார் ஓர்!

நாளைவரான் இன்னோர் நற்தலைவன் மண்மீதில்
தோளில் இவன்போலே தீரமுளான்-வேளையிது
ஒன்றே விடியல் உறுமண்ணில் வேராக்கும்
என்றே இந்நாள் எடு!
காப்பியக் கலித்துறை
பொல்லார் அசிங்கர் பொரியாரிடும் தீது கண்டே
எல்லா யுகமும் இழிவாரிலே இத்த ழிந்தோம்
கல்லார் மனமாய்க் கறையாகிய கொன்ற ழிப்பை
வெல்வோம் எனவாய்ப் பிரபாவெனும் வீர னுற்றான்!
விருத்தம்
செத்து அழிந்து சிதறினோமே
சிங்கப் புதரில் பதறினோமே
மொத்தி மொத்த முடிந்தோமே
மோடர் வதையால் அழிந்தோமே
இத்தால் இனியும் அழிவதுவோ?
என்றே உதித்தான் பிரபாவே
வித்தே விடியல் என்றிட்டான்
வீரன் வந்தான் தமிழ்நிலத்தே!
எண்சீர் விருத்தம்
தாழ்ந்தகுடி தாழ்வதுவோ தருக்கன் வாளில்
தமிழ்நிலமே அழிவதுவோ தானை ஏற்று
மூழ்கும்போர் தனையாடி முத்துக் கொள்வோம்
மோகமண்ணைக் காத்திடவே வித்துக் கொள்வோம்
ஆழ்ந்துறக்கம் கொள்ளாதே அன்னை நாடே
ஆண்டவினம் துயின்றாலே அழியும் கூடே
வீழ்ந்தநிலம் வெல்லவென்றே பிரபா வந்தான்
வீதிமுற்றும் மங்கைவந்து வேங்கை என்றாள்!
கலித்துறை
தம்பி தாங்கிய தானையின் போர்ப்பறை தன்னில்
எம்பி வந்ததே ஈடிணை அற்றதோர் ஏற்றம்
அம்பி நோக்கிய அன்னைமண் விடியலின் அறமாய்
நம்பி யார்த்ததே நானிலம் முற்றிலும் நன்றாய்!
வஞ்சி விருத்தம்
வாழிய தலைவன் தேசம்
வாழிய வேங்கைப் போதம்
வாழிய புலியின் படையே
வாழிய உறவின் நிலமே
வாழிய பிரபாத் தம்பி
வாழிய பரணித் தலைவா
வாழிய தளபதி யோரே
வாழிய அரசிய லோரே
வாழிய மக்கள்கூடே
வாழிய வாழிவாழி!

Sunday, April 19, 2009

தமிழா எழுந்து வா!
எங்களின் கூடுகள் இடிந்து நொருங்கின
எங்களின் குருதிகள் நிலத்தில் இறைத்தன
சிங்களச் செருக்கன் தீக்கிரை யாக்கினன்
எங்குமே ஓலமாய் இறக்க முடித்தனன்
தங்கும டங்களாய் தரணி இருக்கவோ?
பொங்கும னங்களே பூட்டிக் கிடக்குமோ?
இங்குபே ரிந்தியம் ஈழம் துடைக்குதே
சங்கிடும் தமிழகம் தாழ்ந்து கிடப்பதோ?

எங்குநீ என்னின ஈழ மைந்தனே
எங்குநீ தமிழகத் தீர இளைஞனே
கங்கையில் குளிக்கவா காலம் எடுக்கின்றாய்
நொங்கென அறுபடும் நிலத்தை மறக்கின்றாய்
எங்குநீ எங்குநீ இதயத் தமிழனே
எங்களின் மாந்தரே இதயம் துடித்துவா
சிங்களம் சோனியா சேர்ந்த அறுவடை
இங்குநீ பார்ப்பதா இன்றே எழுந்துவா!

-புதியபாரதி

Friday, April 17, 2009

அறத்தின் வெற்றி!
செந்தணல் ஏந்தி சுதந்திரம் எண்ணி
செங்களம் வந்தனை புலியே
சுகக்களம் எதுவும் சுகந்தமாய் வார்த்துச்
சுயநலம் கண்டிலாய் புலியே
சிந்துகள் பாடிச் செறிபகை ஊர்ந்து
சிந்தினை தற்கொடை புலியே
சுழலிடும் பூமிச் சுற்றிலும் தமிழர்
சொந்தமாய் நின்றனை புலியே
வந்தனர் கொடியர் வல்லரக் கங்கள்
மகிந்தனைப் பிணைத்தனர் எனினும்
வன்மையெம் எதிரி வகைதொகை இன்றி
மடித்தனன் மக்களை ஆயின்
இந்தவோர் பொழுதும் ஏந்திய நாட்கள்
இன்றுனக் கானது யுகமே
எங்களின் தேச எழிற்கொடி அசைந்து
எங்கெலாம் பறக்குது புலியே!

எத்தனை வருடம் எத்தனை அரசு
எல்லமும் வென்றனை புலியே!
வெள்ளையர் நாடும் வீறிடும் அய்நா
வீதியெல் லாமதும் விளைந்தார்
எங்களின் மாந்தர் இன்றிடும் புயலே
இனப்படு கொலையதைப் பகர்ந்தார்
உள்ளமும் பற்றி உறவுகள் பற்றி
உயர்ந்தனர் தமிழகத் தோரே
உதிரங்கள் மாயும் உண்மைகள் காட்டி
உண்ணாதி ருக்கிறார் தாயர்
குள்ளம கிந்தன் குவலயம் முழுதும்
குதர்க்கமாய் பொய்யுரை தந்தான்
கொடுமையைக் கண்டு கொதித்தது உலகம்
கொடுத்தமுற் தடையினால் நொந்தார்
தௌ;ளிய தலைவன் செறிகளம் காணும்
சிறப்பினில் நின்றதெம் நிலமே
தியாகமாய்த் தலைவன் துருவிய வேட்கை
தேசெலாம் வென்றது அறமே!
-புதியபாரதி

Thursday, April 16, 2009

எழுந்து நிற்கும் புலத்தமிழர்பாகிஸ்தான் சீனா ரஷ்யா
பாரதச் சோன்யா கூட்டம்
ஏகித்தான் வரித்தார் லங்கா
இராசபக் சாவின் பக்கம்
மோகித்து ஆயு தங்கள்
மூடையாய்க் கொடுத்தார் யுத்தப்
போகியோ தமிழன் சாவில்
பொரித்துமே எடுக்கின் றானே!

இனப்படு கொலையே என்று
இன்றுபே ருலகம் கண்டார்
கனத்துரு வாண்டா மண்ணில்
கக்கிய சரிதம் போலே
மனத்திலே பேயாய் ஆடும்
மகிந்தனும் இரண்டு நூறாய்
தினம்தினம் கொல்லு கின்றான்
தேசெலாம் கேட்டா ரில்லை!

சுனாமியாய்த் தமிழன் மட்டும்
திரண்டனன் உலக முற்றும்
அனாதைகள் இல்லை மண்ணின்
அறுகம்புல் உறவே என்று
வினாடிக்கு வினாடி பொங்கி
வேதனை உகுத்து கின்றான்
கனாவிலும் காணாக் காட்சி
கண்டது உலகம் தானே!

உண்ணாது உலக மன்றை
உலுக்கிய தமிழன் கண்டேன்
எண்ணாது இருந்த வெள்ளை
ஏடெலாம் எழுதக் கண்டேன்
புண்ணாக மனது எற்றும்
பொங்கிய மக்கள் கண்டேன்
விண்ணாகப் பரந்த சேதி
விறைப்பிலும் ஒலிக்கக் கண்டேன்

தமிழனே புலிகள் என்றார்
புலிகளே தமிழன் என்றார்
இமயமாய்த் திரண்ட சுற்றம்
இடித்திடும் பலமாய் நின்றார்
அமைதிதான் வேண்டும் என்றார்
அன்னைமண் காப்பீர் என்றார்
இமையொடும் கண்ணே போல்வர்
எங்களின் உறவே என்றார்!

மன்றெலாம் இலட்சம் மக்கள்
மகுடமாய்த் தமிழாய் நின்றார்
கொன்றொழிக் கின்ற சிங்கக்
கொடியரைக் காண வைத்தார்
இன்றெலாம் அய்நா மன்றம்
இனவழிப் பதனை நேரிற்
சென்றுமே பகுக்கா விட்டால்
சொந்தமண் இறக்கும் என்றார்!

உலகமெல் லாமும் ஈழம்
உரைத்ததெம் உறவீர் எங்கள்
நிலமது எரியும் போது
நிரையெனக் குவிந்தீர் மண்ணின்
குலமென வேற்று நாட்டில்
கொடியுடன் வந்தீர் எங்கள்
புலித்தமிழ் மண்ணை இந்தப்
புவியெலாம் வரைந்தீர் வாழ்க!

-புதியபாரதி

Wednesday, April 15, 2009

அழியாது நீதி..

ஓ..ஓ...

என்பூமி எரிகிறதே..

கூவித் திரியும் நரபலிச் சிங்கம்
கூட்டித் தின்னக்
குதித்தது காணடா..!

மான மண்ணை
ஈனனின் அரக்கம்..
இன்னுமா?

இன்னும் இன்னுமா..?

அது முடியாது..
அது முடியாது...

சாம்பல் பூத்த வியட்நாம்
வயல்களே..

ஆயிரம் மைல்நீள
எரித்தியச் செங்கடலே..

கிழக்குத் தீமோரில்
எரிந்த காடுகளே..

நீங்கள் உயிர்த்ததுபோல்
நாங்களும் எழுவோம்..

இந்த வரலாறு எரிந்ததாய் இல்லை..

எங்கள் மண்ணின் அறுகம்புல்
மீண்டும் வளரும்..

உயிரை இறைத்த எம்தமிழ் உறவே
நீவிர் பதிந்த சுவடுகள்
நிமிர்ந்து நடக்கும்..

புதியபாரதி.

Tuesday, April 14, 2009

நோன்பிருக்கும் தமிழர்களே

நோன்பிருக்கும் தமிழர்களே
உங்கள் பாதாரவிந்தங்களில்..


உண்ணா விரதம் இருந்தே உலகை
உசுப்பும் தமிழா வணங்குகிறோம்..எங்கும் -உண்ணா

கண்ணாய் எமது கனிநிலம் சிதறும்
காட்சியைத் தந்தீர் கலங்குகிறோம்.. ஐயா... –உண்ணா

எழுபத்தி நான்கு வயதிலும் சாயி
அண்ணா இருக்கான் பாருங்களே..இன்னும்
இருபத்துக் கொண்ட வயதிலும் நோன்பில்
இறக்கத் துணிந்தார் இளைஞர்களே..!இங்கே -உண்ணா

மனிதமே இல்லா மகிந்தன் அரக்கன்
வடிவமாய் அழித்த வாதைதந்தீர்-எந்தப்
புனிதமும் இல்லான் பொறுக்கும் சதையில்
புரிந்த கொடுமைக் காதைதந்தீர்..நீர் -உண்ணா

உடல்கள் சிதற உயிர்மண் அலற
உடன்பிறப் புக்கள் பிரிகின்றார்-இந்தக்
கடல்கடந் தும்நாம் காண்பதோ என்றே
காருல கெல்லாம் நோன்பிருந்தீர்..அம்மா -உண்ணா

(இசையமைத்து எங்கள் ஆருயிர் உடன்பிறப்புக்களின்
பாதங்களில் அர்ச்சனை செய்யுங்கள்)
-புதியபாரதி

Monday, April 13, 2009

தேசம்தந்த திருத்தலைவன்!

தேசம்தந்த திருத்தலைவன்!

பிரபாகரன் எங்கள் தலைவன் ஈழப்
பிரபஞ்சம் தந்த முதல்வன்
கரிகாலன் அவன் பேராம் தமிழன்
காணுமுல கெல்லாம் அவனூராம்!

தூங்கிக் கிடந்த இனத்தில் வந்த
தூரன் இவனே வழிகாட்டி
வீங்கிக் கிடக்கும் சிங்க ளத்தை
வீழ்த்த வந்த தேரோட்டி!

வேலிக் குள்ளே வாழ்ந்த மங்கை
விடியல் மண்ணில் போர்நங்கை
தாலி நஞ்சாய் அணிந்து வந்தாள்
தானை கொண்டு அவள்நிமிர்ந்தாள்!

கண்ணில் தோன்றும் வண்ண ஒளியே
களத்தை நிமிர்த்தி வரும்புலியே!
அண்ணன் போதம் ஆர்த்திடும் வேதம்
அணங்காய்த் தருமே கரும்புலியே!

இந்திய வஞ்சர் இலங்கா நஞ்சர்த்
திசைகள் அனைத்தும் இவனுடைப்பான்!
சிந்தும் சுதந்திரப் பண்கொண்டு வருவான்
தேசம் தந்த திருத்தலைவன்!

(பிரபாகரன் எங்கள் தலைவன் என்ற எனது
முன்னைய பாட்டின் முதல் வரிகளில் எழுதப்;பெற்றது)
-புதியபாரதி

Sunday, April 12, 2009

கோளைக்குக் கால்கள் இல்லை!

வானமே எல்லை

கோளைக்குக் கால்கள் இல்லை!

சுனாமிகள் வருமே பின்னர்
சுருங்கிய வாலாய்ப் போகும்
கனாவுகள் உருளும் பின்னர்
காலையிற் பறந்து போகும்
வினாவுதல் போதும் என்றால்
விடைகளும் பறந்து போகும்
அனாதியாம் மலையும் ஆறும்
அழியாத பதில்கள் சொல்லும்!

அழுந்திடும் மனித வட்டம்
அழுதிடும் கால முற்றம்
முழங்கையில் பூமி விட்டம்
முழுவதும் அளக்க லாமோ?
எழுந்துவா இளைய ஏறே
இளஞ்சுடர் வானைப் பாராய்
அழிந்திடாச் சிகரம் உச்சி
அண்டத்தின் மடியைப் பாராய்!

மூளையிற் கீறல் போடு
முளைவரச் சாரல் போடு!
வேளையில் உதிக்கும் அந்த
வெற்றிக்கு நடையே போடு!
கோளைக்குக் கால்கள் இல்லை
குருடனும் முயற்சி கண்டால்
நாளைக்கு அவன்தான் மன்னன்
நம்புநீ ஏறு ஏறு!

சறுக்கினால் சறுக்கும் பாதைச்
சரிவுகள் முறிக்கும் மீண்டும்
நொறுக்கிநீ துணிந்து ஏறு
நிலத்திற்கு வெற்றி கூறு
குறுக்கிடும் தடைகள் வெட்டிக்
குதித்திடு அற்றைப் போது
உறுத்திடும் உலகுக் கெல்லாம்
உயர்வுண்டு குறிக்கும் தேதி!

சிகரத்தைத் தொடவே எண்ணித்
தூண்டிலைப் போடு லாப
நிகரங்கள் முதலில் எண்ணாய்
நீதரும் முயற்சி ஒன்றே
அகரங்கள் தொட்டு உந்தன்
அகலக்கால் அளவே காட்டும்
முகருங்கள் வெற்றிக் கோடு
முழுவதும் செயலே சொல்லும்!
-புதியபாரதி

தமிழகத் தமிழா!

உன்வெற்றிக்கான கணக்கு இது!

இந்திய வஞ்ச கத்தால்
இன்றுசிங் களவன் வந்து
எந்தையின் எழிலாம் பூமி
எல்லமும் பற்றி விட்டான்
குந்தவோர் இடமும் இன்றி
குலமெலாம் குண்டில் செத்தார்
சந்ததி உறவே சென்னைத்
தமிழகத் தோரே எண்ணீர்!

முந்தியும் அமைதி என்ற
முகத்திலே வந்த போதும்
சந்தியில் தமிழர் கொன்ற
சரித்திரத் தோடே சென்றார்
இந்தியில் இருப்பா ளுக்கு
எம்தமிழ் தெரியும் தானோ?
அந்தியாய் அவளே இட்ட
அடியிருள் விலக வைப்பீர்!

எழுகநீ எழுக வெந்த
ஈழமா வேங்கை மண்ணை
தொழுதுநீ எழுக வண்ணத்
தோகையே தமிழி னூற்றே
அழுதமண் உறங்கா தப்பா
அவலத்தைத் தோளில் ஏற்றுப்
பழுதிலாப் புதிய ஏட்டை
பாரினில் ஏற்று வாயே!

புதுக்குடி யிருப்பில் மண்ணின்
புலிகளே செத்தார் என்று
வெதுப்பகப் பாண்கள் போலே
விளையுடல் காட்டி னார்கள்
அதுவெலாம் புலிகள் இல்லை
அதற்குளே இராணு வத்தின்
செதுக்கலென் றரூசன் சொன்ன
சேதியும் கண்டேன் அப்பா!

புலிகளின் காலம் போனால்
பின்னொரு தமிழன் இல்லை
வலிமைதான் இன்றே உண்டு
வடிவம்போய்த் பதரே வந்தால்
எலிகளே ஆளும் மண்ணின்
எட்டப்பன் சிங்க நாட்டின்
முலையிலே பாலை நக்கி
முகத்தமிழ் அழிப்பான் கண்டீர்!

இந்திய நாட்டின் கண்ணே
இன்றொரு கடமை யுண்டு
சந்ததி யெங்கள் மண்ணின்
சாதனை எல்லாம் வெட்டி
குந்தகம் செய்த தாலே
கொற்றவத் தமிழன் பூமி
நொந்துநொந் தெழுகு தம்மா
நினைப்பநீ தமிழின் நாடே!

புலிகதோற் றாரே இல்லை
புல்லர்தான் எல்லைக் கூண்டில்
வலியதற் காப்பு வைக்கும்
வடிவமாய்ப் போயே விட்டார்
அலையிலே ஆயி ரம்மாய்
அடித்துமே தீயர் தம்மை
உலையிலே வைத்த தீரம்
இன்னுமுண் டெழுவீர் தானே!

-புதியபாரதி

Saturday, April 11, 2009

இனவுணர்வு வெற்றியாகட்டும்..!


இனவுணர்வு வெற்றியாகட்டும்..!

என்னரும் தமிழா விஞ்சி
எழுகநீ தமிழா வட்டப்
பின்னறை போட்டு எங்கள்
பேடிகள் முகத்தைக் காண்பாய்
மன்னனாம் பிரபா என்றே
மகிந்தனே வைப்பாய் என்று
சொன்னவன் கருணா நிதிச்
சொறியவன் குணத்தைப் பாராய்!

தின்னவே பிரபா கத்தைப்
திருடர்கள் இருக்கார் என்ற
பின்னலை அவிட்டு வைத்த
பொய்மகன் கலைஞர் கூட்டின்
துன்னலைச் சோனி யாத்தாள்
திருடனாம் மகிந்தன் எல்லாம்
என்னவாய் இருக்கின் றார்பார்
எத்தனை கொடியர் அம்மா!

தமிழகத் தமிழா ஊற்றின்
தங்கத்தேர் மனித ஏடே
அமிழ்தினும் இனிய செந்தேன்
அன்னையாம் தமிழின் நாடே
கமழ்தரும் பிரபா ஏட்டைக்
கரியிடத் திட்டம் போட்டார்
சுமைதரும் சிங்க ளத்தின்
சீழ்க்கரம் நக்கு கின்றார்!

இந்திய காங்கி ரஸ்சார்
இந்தியம் முழுதும் துப்பும்
மந்தமா மலத்தை நக்கும்
வாலைநாய்ப் புடையர் எல்லாம்
சொந்தமாய் அடுக்க வோடா
துடைத்துநீ எறியாய் இந்தக்
கந்தல்கள் இருக்கும் நேரம்
கழிசடைக் காலம் கண்டோம்!

தீக்குளம் ஆகி நிற்கும்
தேசமாம் வன்னி காண்பாய்
நோக்குளம் கொண்டார் ஈழ
நெஞ்சுளார் வெற்றி வைப்பாய்
ஆக்கிடும் சமுதா யத்தை
ஆக்குநீ இல்லை என்றால்
ஈக்கள்தான் மொய்க்கும் எங்கள்
இனமெலாம் இன்னும் சாகும்!

எத்தனை நாட கங்கள்
இந்திய ஆட்சி செய்ய
மொத்தமாய் இருக்கும் கட்சி
முடிச்சுமா றிகளாய் வந்தார்
செத்திடும் சவங்கள் பார்த்தும்
சிங்களப் படைகள் பக்கம்
அத்திரம் கொடுக்கும் கூட்டம்
அடுக்குவை தானோ மாந்தீர்!

கலைஞரின் நாட கத்தில்
கண்ணீரைக் கொட்டா தீர்கள்
கொலையிடச் சோனிக் கூத்தாள்
கொண்டவாள் கொடுவாள் ஆகும்
அலையென முத்தான் தீயில்
அவிந்தவன் சொன்ன மூலம்
நிலையெடு வெற்றி யாக்கு
நின்கையில் இனத்தின் வாக்கு!

முத்தான்-முத்துக்குமரன்
-புதியபாரதி

Friday, April 10, 2009

நவீன பூராயணம்..!


எத்தனை காலம்தான்..?-06

இந்த நேரம்முதல்..
நவீன பூராயணம்..!


நவீன பூராயணம் ஒன்று
புதுசாய்ப் பிறக்கிறது..

இங்கே கூனிக்குப் பதிலாய்ச்
சோனியா..

பாராளுமன்றப் பலகணி இல்லாமல்..

மாநிலம் சார்ந்த
மடக்கைகள் இன்றி..

இந்திய நாட்டின் இன்றைய ஆட்சி
இலங்கா நாட்டுக்கு
இராணுவத்தை அனுப்ப முடியுமா?

வான்புலிகள் வவுனியாவில்
வெளுத்த முகாம்களில் இருந்து
இந்த இந்தியத்தின் முதல்
முகமூடி கிழிந்தது..

பொட்டு வைத்த இராணுவன்களை
சிங்கள மகிந்தங்களுக்கு
இந்த இந்தியம்தான் விற்றுக் கொண்டிருக்கிறது..

கூனிக்குக் கொடுக்கும்
காணிக்கையாக
அப்பாவித் தமிழனின் சடலங்கள்
அடுக்கப்படுகின்றன..

வீட்டை எரித்து மூட்டைச் பூச்சியை
அழித்தவன் போல்
தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கும்
மகிந்தன் ஹிட்லரை மிஞ்சிய
ஹிட்லர் ஆக..

பெரிய வெள்ளி தினத்தில்
கனடியத் தலைநகர் ஒட்டாவா
பாராளுமன்றத்தின் முன்பதாக..

ஒரு ஐம்பதினாயிரம்
தமிழர்களின் எழுகுரல்
அகிலத்தை அசைத்தது..

தமிழனின் அச்சாணியைக் கழற்றி
அரசாணியைச் சிங்களன் கையில் கொடுத்த
பிரித்தானியாவில் இரண்டு இளைஞர்களின்
சாகும்வரை உண்ணா விரதம்...

இதில் ஒருவனின் குடும்பத்தில் தாயும் சகோதரங்களும்
சிங்களத்தின் எறிகுண்டில் வன்னியில், கடந்தவாரம்
மரணக்குழியில் விதைக்கப்பட்டார்கள்..

இந்தியத்தை எதிர்த்து காந்தீயம் கொடுத்த
திலீபன் சாவைப் போல்
வெள்ளை மனிதங்;களுக்கு முன்னால்
உண்ணா நோன்பு கொண்ட
ஈழத் தமிழர்களைக் கண்டு
வெள்ளை உள்ளங்கள் விக்கித்து நிற்கின்றன..

மேற்குலகின் பதினான்கு நகரங்களுக்கு
மேலாக சமநேரத்தில் ஈழத்தின்
தமிழினச் சந்ததியின்
ஏகோபித்த அசைகுரல்களைச் சுமந்தபடி..

காலத்தின்பழி கருணாநிதி மட்டும்..?

இந்த வரலாற்றின் செல்லாக் காசாக..

சோனியாத் தாயே ஈழத்தவனைக் கொல்லாதே என்று
ஈனக் குரலில் இந்தக் கலைஞன் ஏன் கத்தவேண்டும்..

ஈழத்தமிழனைக் காப்பாற்றும் முதற்சுட்டு விரல்
இந்தத் தமிழக முதல் அமைச்சனிடம்
அல்லவா இருக்கிறது...

தமிழ் முதலமைச்சன் கையில்
என்ன தாம்பூலமா இருக்கிறது..?

ஆட்சிக்குக் காவு கொடுத்தபடியே
ஆச்சியை ஏன் கெஞ்ச வேண்டும்...

ஏழு கோடித் தமிழராலும்
இன்று ஏற்கப்பட்ட தலைவன் யார்..?

உலகப் பந்தில் ஐம்பத்தாறு நாடுகளில்
அலகுக் தமிழனாக இருக்கின்ற
பிரபாகரன் எங்கே..?

ஒரு குப்பைக் கடுதாசியைக் கூட இந்தக்
கருணாநிதிக்குக் கையில் எடுக்காத-
எடுத்துக் காட்ட முனையாத-
உலகத் தமிழினமாக
இந்த முதலமைச்சன் மரியாதைகள்...
போகப் போகின்றனவா..?

சரித்திரத்தை எழுதக் கூடியவன்
எம்.ஜீ.ஆர் ஒருவனே என்று
இந்தக் கருணாநிதியின்
கவச வாகனம் மட்டுமே காட்டுகிறது அல்லவா?

இராணுவ மாமேதை பிரபாகரனைப்
பொறுக்காத கருணாநிதி..
சோனியாவோடு சேர்ந்து இயங்கும் சதி
இரண்டுமாக..
இன்றைய வன்னிக் குருதியின்
வடிவங்கள் தோழர்களே..

தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின்
ஒரு அழைப்பைக் கனிணிக்
கோப்பில் இன்று கண்டேன்..

மனிதம் சுமக்கின்ற தமிழ்நாட்டு
அமைப்புக்களுக்கெல்லாம்
வன்னித் தமிழனைக் காப்பாற்றும்படி-
உடனே எழுச்சி கொள்ளும்படி,
அழைப்பு அனுப்ப அறைகூவல்
விடுக்கும்படி கேட்கப்படுகிறது...

இதை வாசிக்கின்ற பெரியவெள்ளித் தினமான
இன்று ஈழச் சிலுவை சுமக்கும்
எமது உறவுகளே இந்த நேரம்முதல்
வீதிக்கு வாருங்கள்..

கருணாநிதியும் சோனியாவும் ஒருசேரச்
சாக்காடு எடுக்கும் ஈழத்து வீதியைக்
காப்பாற்ற எழுந்து கொள்ளுங்கள் ...

இன்னமும் ஒரு சில மணித்தியாலங்கள்
உங்கள் கரங்கள் உலகை
அசைக்காவிட்டால்..?

தொப்புள்கொடி உறவுகளின் சாம்பல் மேடுதான்
உங்கள் பார்வைக்கு வரப்போகிறது..

போதாக்குறைக்குப் புலிகளைக் கவனிக்க
இந்த ஏப்ரல் இருபதாம் திகதி
சோனியாச் செய்மதி விண்ணுக்குப் போகிறதாக
இன்றைய செய்தியை எங்களுக்காய்..
இந்தியா அனுப்பியிருக்கிறது..

தமிழ்கொண்டு எழுதுகின்ற
கரங்களே..
இந்தநேரம் முதல் வன்னியின்
மனித அழிவைக் காப்பாற்ற
மன்றுக்கு வாருங்களே..

எத்தனை காலம்தான் எங்கள் மண்ணில்
அந்நியன் காலடிகள்..

-எல்லாளன்..

(பிந்தியசெய்தி: தமிழகத்து மனித இதயங்களை எரிகின்ற வன்னியைக் காப்பாற்ற அரசியல்-மக்கள் எழுச்சிக்கு அறைகூவல் விடுத்து இளையவர்களின் அழைப்பு அகிலமெங்கும் பரவுகிறது)

Thursday, April 9, 2009

கார்நிலம் நோகுதே!


கருணா கண்டு கார்நிலம் நோகுதே!

கிழக்கை உழக்கிய கீழான் கருணா
பழிக்குப் பிறந்த பிள்ளையன் பதரன்
கக்கிய அரவின் நச்சுகள்
திக்கெலாம் அதிரத்; தீயர்வந் தனரே!

திருமலை வர்சாச் சின்னப் பிஞ்சை
உருவிய இவர்களின் ஊத்தைகள் கூட்டம்
வலையில் விழுந்த போதினில்
கொலையில் முடித்துக் கொடியர்தப் பினரே!

அரசியல் தீர்வு அளவெதும் வேண்டாம்
உரசும் தமிழர்க் கொன்றுமே வேண்டாம்
பதின்மூன் றாம்பிரி வுமதுவாய்
எதுவும் ஏனெனக் கேட்கிறான் கருணவே!

நக்கிற நாய்க்குச் செக்கெது வென்றே
குக்கலே அறியுமா குலத்துக் துரோகி
அடுப்படி தன்வால் ஆட்டியே
உடுக்கடிக் கின்றான் உயிர்நிலப் பதரே!

வீரமா மண்ணில் விளைந்ததிப் பதர்கள்
சோரம் போனவர் துத்தலை நாகங்கள்
மட்டு மண்ணும் வருவதோ?
கட்டுக் கரும்புக் கார்நிலம் வேகுதே!
-மட்டுக்கவி

Wednesday, April 8, 2009

இந்தியப் பரிசு(கேடு)


எத்தனை காலம்தான்..?-05
இந்தியப் பரிசு(கேடு)

அமைதிப்படையில் இருந்து
ஆரம்பிக்கப்படுகிறது.

கற்பிணி உட்பட அறுபத்திநான்கு பேரை
தெருவில் நிரையாகக் கிடத்தி
கனரக வாகனத்தை மேலேற்றிக்
கொன்ற ஒரு படைக்குப் பேர்தான்
அமைதிப்படை.

ஆறு இயக்கங்களை அரவணைத்துப்
புலிகளைக் கொல்ல ஏவிய இரசீவின்;
செயலுக்காகவே எழுதப்பட்டது
இலங்கை-இந்திய ஒப்பந்தம்.

மிருசுவில் அகதிமுகாமல் ஒரு
பாதிரியாருக்கு முன்னால் இந்தியப்படையால்
மாதர்மேல் நடத்தப்பட்ட பாலியல் இம்சையைப்பார்த்து
மயங்கினார் அந்தப் பாதிரியார்.

அன்றைய வீரகேசரியில் இதற்குப் பதிவுண்டு.

ஏழாயிரம் தமிழர், எண்ணற்ற புலிகள்,
சோறு கொடுத்தவன்-வீறு படைத்தவர் என்று
நூறு நூறாகக் கொன்றது இரசீவின் அமைதிப்படை!

பேச்சுக்கு அழைத்துப் பிரபாகரனைக் கொல்லென்றார் தீக்சித்.

ஜொனி என்ற புலிவீரனைப் பேச்சுக்கு
போகும் வழியில் மறைந்திருந்து
கொன்றது அமைதிப்படை.

திருமலையை தமிழன் பூமியாக நிலை நிறுத்திய
புலேந்திரன், குமரப்பா போன்ற பன்னிருவேங்கைகள்
சமாதான காலத்தில் பிடிக்கப்பட்டபோது-
ஆயுதத்தைக் கையளிக்கக் கேட்டுக் கொடுத்தபின்னால்
கைது செய்யப்பட்ட இந்த வேங்கைகளை
விடுதலை செய்யாமல் கொழும்பிடம் கொடுத்தபோது
இந்தப் பன்னிருவரும் நஞ்சுவில்லை அருந்திச்
சாகவிட்டது இந்தியம்..

காந்தீய தத்துவத்தில் உண்ணாது இறந்த
திலீபன், பூபதி அன்னை, போன்றவர்களது
தியாகத்திற்குப் பதில் சொல்லாது இறக்க வைத்தது இந்தியம்..

இந்துக் கடலில், கிட்டு முதலான ஒன்பது
வேங்கைகளைச் சுற்றி வளைத்துக்கொண்ட
இந்தியத்தால் ஒன்பது வேங்கைகள்
தங்களைத் தாங்களே நீரில் எரித்தார்கள்..

ஆலாலு, தர்மரைக் கொன்றார்கள்.

பழிகளைப் புலிகள்மேல் போட
நடத்தப்பட்ட நாடகம் இது.

இன்றைய நாட்கள்..

வான்புலிகள் வவுனியாவில் அடித்தபோதுதான்
இந்திய வலைப் பின்னணியின்
ஆட்கள் பிரசன்னம் காட்சிக்கு வந்தது..

கொழும்பில்-இன்னமும் கொழும்பின் சுற்றுத் தளம் எங்கும்
இந்திய ராடர்கள்..

சமாதானம் பேச வருவதுபோல் வந்து
பிரபாவைக் கொல்லும் திட்டத்தை
வகுத்துச் சென்றது இந்தியம்..

கல்மடுக்குளம் உடைக்கப்பட்டபோது,
இறந்தவர்கள் ஏராளம் இந்திய இராணுவம் என
ஊடகங்களில் பதிவு இருக்கிறது..

புலிகளின் படகுகள் வராதபடி இன்று
முற்றிலுமான இந்தியப் படைப் பின்னணியில்
முல்லைத்தீவில் ஏவுகணைத் தளம்..

மக்களுக்கு வைத்தியம் என்ற பெயரில்
புல்மோட்டையில் இந்திய இராணுவ முகாம்..

புலிகளால் முடிக்கப்பட்ட இலங்காவின்
ஐம்பத்தியேழு-ஐம்பத்தியெட்டு இராணுவக்
கலங்களின் பின்னால் இந்தியப்படை
இன்றாகி நிற்கிறது..

நுங்கப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்
நூற்றி இருபத்திஐந்து இந்திய இராணுவச்
சடலங்கள் இருப்பதாக தமிழகச் செய்திகள்..

போர்செய்வது யார்?

புலிகளை அழிக்க ரசீவான் போட்ட திட்டம்
இன்று இத்தாலி அறுப்பாளின்
பின்னாலும் தொடர்கிறதே..

பதவிக் குளிப்பில் உதவிக் களிக்கும் கருணாநிதி
ஈழச் சடலங்களின் மீது நின்று
எத்தனை நாடகங்கள்..

பராசக்தி கதைவசனத்திற்குப் பிறகு
ஈழசக்திக்கு இழிவுவசனம் அல்லவா கருணாநிதி
எழுதியபடி..

பதவி விலகுவோம் என வாங்கப்பட்ட
கடிதங்களுக்குப் பிறகு எத்தனை நாடகம்..?

சொன்னதைச் செய்தவன் எம்.ஜி.ஆர் ஒருவன்தான்
என்பதே இதுவரை சரித்திரம்..

சோனியா பேயாட்டம், இன்றைய
ஈழத்தமிழ்மண் மயானபூமி ஆக்கப்படுகிறது..

புலிகளால் துடைத்தெறியப்படுகின்ற போதில்
சிங்களர் துணைக்கு இந்தியம் போனதால்
ஈழத்தமிழன் பிணங்கள் அடுக்கப்படுகின்றன..

ஈழப்போர் வரலாற்றில் இல்லாத போர்!

இந்திய வல்லாதிக்க வரலாறு காலப்பழியாய்
சொந்தம் கொண்டாடப் போகிறது சோனியாக் குடுமி..

சிதம்பரம், தங்கபாலு, சோ, சு.சாமி போன்ற ஆசாமிகள்
தமிழன் வரலாற்றுப் பழியர்களாக
சுமையைக் கொடுக்கிறது சரித்திரம்..

கடத்திக் கடத்திச் தமிழ்ச் சிறுவர்களை அழிக்கிறது
காட்டாற்றுச் சிங்களம்..

தமிழன் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக்
கூடாது என்பதற்காக..
இளம்பெண்கள் வதைமுகாம்களில்
வல்லுறுவுக் கொடுமை..

ஆதரவுக் கரங்கள்போல் அகிலத்திற்கு அளந்து
நம்பி வருகின்ற இளையவர்களை
நாசுக்கா அழிக்கிறது சிங்களம்..

இந்தனைக்கும் யார் காரணம்..?

சோனியா.. சோனியா..

இத்தாலியில் இருந்து வந்தவளுக்கு
ஈழத்துத் தொப்புள் உறவு
எப்படித் தெரியும்..?

எத்தனை காலம்தான் இந்தக்
கொடுமைகள்..
-எல்லாளன்..

Tuesday, April 7, 2009

வீழமாட்டோம்..!
ஒருக்காலும் வீழமாட்டோம்..!

ஐயகோ ஈது என்ன
அரக்கமா வெறியா எங்கள்
தையல்கள் மான பங்கம்
தந்ததே மகிந்தச் சேனை
மையலாய்த் தவழும் சின்ன
மழலையை நிரையாய்க் கொன்றார்
ஐயவென் தமிழீர் தொப்புள்
அன்னைமண் எழுந்து வாடா!

எரிகுண்டு கொத்துக் குண்டாய்
இரசாய னத்துக் குண்டாய்
கரிக்குண்டு எகிறும் சிங்கக்
கந்தகம் எரிக்கு தந்தோ!
நரிக்குண்டு சோனி யாத்தாள்
நம்மீழக் கூனி யானாள்
மரிக்கின்ற சனத்தைப் பாராள்
மனிதமே இல்லாக் கூராள்!

மருத்துவச் சேவை என்று
வார்ப்படை அனுப்பி வைத்தாள்
கருத்தொடு பிரபா தன்னைக்
கண்டுகொல் லென்று விட்டாள்
பொருத்தியே வுக்க ணையை
பூட்டியே முல்லை விட்டாள்
பருத்தபூ தம்மாய் வந்து
பத்திர காளி யானாள்!

இந்தியா இல்லை என்றால்
எம்மினம் சாகா தம்மா
பந்;தியாய்ப் பிணத்தை வைத்துப்
பார்க்குதே; வேகு தம்மா
முந்திரச் சீவான் வந்தும்
முடித்தனெம் இனத்தை; வான
அந்தியே பொழுதே இந்த
அழித்தவள் வாழ மாட்டாள்!

இரசீவான் இறந்தான் என்றால்
ஈழமா அழிய வேண்டும்
முரசெனும் இந்தி ராவை
முடித்தமண் அழித்தா விட்டார்
நரபலி யாடும் இந்த
நாசரால் தமிழன் சாகும்
வரகதை இவட்கே உண்டு
வரலாறு சொல்லும் பாராய்!

ஒருகாலும் வீழ மாட்டோம்
இருப்போம்நாம் வெல்வோம் இந்தத்
தெருநாய்கள் தங்கப் பாலு
சிதம்பரம் சோக்கள் கூட்டம்
பெருச்சாளிக் கருணா நெற்றிப்
பேருக்கு அறிஞன் பட்டம்
உருத்தான பொய்யர் எல்லாம்
ஒழித்தோடிப் பிடிக்கின் றாரே!

அறுபதாண் டுகாலம் எங்கள்
அன்னையைக் கொன்றார் முற்றும்
நிறையென இலங்கை மண்ணை
நின்றதெம் புகலைச் சொத்தைக்
கறையெனக் கொன்ற காடைக்
கந்தலுக் குதவு கின்றீர்
மறையென எழுவோம் எங்கள்
மானமண் வெற்றி காண்போம்!

-புதியபாரதி

Saturday, April 4, 2009


எத்தனை காலம்தான்..?-04
--------------------------------
தமிழர்மட்டும்
மந்திகளாக இருப்போம்..!
----------------------------

பித்தலாட்டக் காரன்
சத்தியம் செய்கின்ற நேரம்.!

உரத்துக் கதைத்தவன்
மரத்துப் போகும் காலம்!

உண்மைவாதி
கண்பிடுங்கப்படுவான்..!

அறிவித்தல்கள்
ஆள்மாறிப் பிறக்கும்!

குறிவைத்துப் பரப்பக்
கொழுந்தன் வருவான்!

ஈழத் தமிழர் கொலைகளில்
எழுந்து நடந்த-
இணைந்து அழுத அரசியல்வாதிகள்
ஒன்றா(க்)க முடியாத உப்பரிகைகள்..!

கன்னற் சிறுவர்களின்
ஈழக் கொலைகளில்,
கறிவைத்தபடி உறிவைத்த
இந்திய அரசியல் வாதிகள்
இந்த நேரத்தில்
போர்நிறுத்தம் கேட்பார்கள்..

ஈழத்துயரில் இணைந்த தமிழகத்தை
சேர அணைக்க மறந்தது
செந்தமிழர் வியூகம்!

இப்படியாக.. மப்படி செப்படி
வித்தைகளில் தமிழகத்திலும்
மறுபக்கங்கள்..

பிரபாகரனைப் பிடி..அவன்
கொடியவன் என்று
அலறிய காங்கிரசுக் கட்சியினரோடு..,
பிரபாகரன் என் அண்ணன்..அவன்
உலகத் தமிழர் தலைவன்..இன்றைய
ஈழத் தமிழர் கொலைகளுக்கு இன்றைய
காங்கிரசு ஆட்சியே காரணம் என்ற..
திருமாவளவன் கூடுகட்ட வந்த குருவியாக..

ஈழத் தமிழர்களைக் காப்பாற்று..இல்லையேல்
பதவி துறுப்போம் என்ற கலைஞர் கட்சி,
உதறித்தள்ள நாங்கள் என்ன
ஒன்றுமில்லாதவர்களா? என்று
இலங்கைப் போரின் இயக்கமான இந்திய
ஆட்சிக் காங்கிரசை இறுக்கிப் பிடித்தபடி..

தமிழகத்திலும், இந்தியத் தலைநகரிலும்
ஆட்சிக் கூடுகண்ட
தி.மு.க என்னும்
திருத்த முடியாத கழுதைகள்..
போலிக் கடிதங்கள் வாங்கிய
பொழுதைப் பார்க்கிறோம்..

மனிதச் சங்கிலி நடத்திய
புனிதங்களில் என்ன
பொதிந்திருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்..!


மதிமுக-அதிமுக-பாமக-
இ.க.க(கம்யூனிஸ்ற்) என்ற
க(h)வில் முடியும் கட்சிகள்,
இன்றை ஈழமக்கள் இறப்பிற்குக்
காரணமான இந்திரா காங்கிரசுக்கு
எதிரான-உரத்துக் கதைக்கும்
ஒருகுழு என்ற அளவில்
கொஞ்சம் நிறுத்தி வாசிக்க-
நின்று (சு)வாசிக்க முடிகிறது..

செயலலிதா, பாண்டியன், கோபாலசாமி,
இராமதாஸ் என்ற ஓங்கிய குரல்கள்
தமிழகத்தை உசுப்பி விட்டால்
ஈழத் தமிழீழத்தின் உதிரங்கள் இறைப்பு
நிறுத்தக் கூடிய நிகழ்வு ஒன்று
நிதர்சனமாகலாம்..

இல்லையேல்..?

ஆயிரம் குழந்தைகள் வரை இறக்கவும்,
பல்லாயிரம் மக்கள் உயிர்பறக்கவம்,
அங்கம் துறக்கவும் காரணமாகிய
இந்திய காங்கிரசின் தலைவி
இந்தத் தேர்தல் களத்தில் நின்றுதான்-
வந்தபின்புதான்..
இலங்கையில் போர்நிறுத்தம் கேட்கிறார்..

பேயாட்டக்காரி சடலங்களைத்
தீனியாகக் கேட்டுவிட்டு..மேடைக்குவந்து
சாமியாட சந்திக்கு வந்திருக்கும் சன்னதம்
அல்லதில்லையா இது?

அன்றிலைப் பிரிந்த அசுரத்தில்,
பிணக்குவியலைப் பார்த்து இரசித்த
இந்திய இரத்தம் இல்லாத இவரால்,
ஈழத்தைச் சொந்தம் கொண்டாட
எப்படி முடியும்..?என்ற கேள்விக்கு
விடைகாட்டியபடி இந்தச் சோனியா என்ற...

பிரணாப் முகர்சி, சிவ்சங்கர் மேனன்
என்றவர்கள் போர்நிறுத்தப் போகிறார்
என்று அறிவித்துப் போய்நின்று
இராசபக்சாக் கரங்களைக் குலுக்கியபின்..
ஒரு இரண்டு கிழமை தருகிறோம்..அதற்கிடையில்
பிரபாவைக் கொன்றுவிடுங்கள் என்று கூறிவந்த
வாய்ப்பாடுகள்.. பொய்வாய்ப்பாடுகளாக ஆகிய பின்னும்..

ஐ.நா.மனித உரிமை அதிகாரி ஹொல்ம்ஸ்,
நோர்விய எரிக் சொல்கைம்
விடுதலைப் புலிகளோடு நிலைமைகளை
ஆராயக் கூடுமென்றால்..?

ஐ.நா.மனித உரிமை அமைப்புகள்,
சர்வதேச நிவாரணத் தொண்டு நிறுவனங்கள்
பார்வையிடத் தடை விதிக்கக் கூடாது என்ற-
போர்நிறுத்தம் வேண்டுமென்ற-
பிரித்தானிய, அமெரிக்க, ஐரோப்பிய யூனியன்
அரசுகள் கேட்பதை தமிழீழத்தின் அருகுநாடான
இந்தியம் கேட்க முடியாது என்றால்..?

இரசிய-சீன கூட்டு முகங்களின்
பின்னால் நின்று
ஐ.நா.வில் இலங்கை மனித அவலம்
விசாரிக்கப்பட
முடியாதவாறு தடுத்து நிறுத்தும்
முகமூடியை இந்தியா
போட்டிருக்கிறது என்றால்...?

அய்நாவின் நிலக்கீழ் அறையில் நடத்திய
அமெரிக்க-பிரிட்டன்-அய்நா-சிறீலங்கா
அலசலுக்கு எதிராக
இந்தியா இருப்பதாகத்தானே
இருக்கும் என்ற
இன்றைய நிலைகளுக்கு அப்பால்..?

புல்மோட்டைக்கு அனுப்பிய
வைத்திய குழுவில்
அமைதிப்படை காலத்து அதிகாரிகள்-
றோவின் அரூபங்கள், இந்திய இராணுவ
வைத்தியர்கள் ஆகியோரை அனுப்பி,
ஓடும் இரத்தத்தோடு வருபவர்களிடம்,
பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்வியை
முதலில் கேட்டு பிறகு
வைத்தியம் செய்கின்றார்கள் என்றால்..?

எதற்கு இந்தியம் இருக்கிறது என்பதைத்
தெரிந்து கொள்ள முடியாது என்றால்...?

இனிநடக்கப் போவதும்.. யாரால்? எவரால்?
என்ன நடக்கப் போகிறது என்பதும் ...
இனிமேல் தெரியாது
இருந்துவிடப் போகிறான் தமிழன்..!

றோவின் பரப்புரை இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது..

என்ன அது?

கருணாநிதியைக் கொல்ல
புலிகள் திட்டமிட்டார்கள் என்ற
பரப்புரை ஆரம்பமாகிவிட்டது....

இனிமேல்..

எங்காவது யாராவது கொலைவிழலாம்..?

அது புலிகளின் தலையில் போடப்படலாம்?

இந்திய றோ எதையும் செய்யும்!

தமிழர் மட்டும்..
மந்திகளாக இருப்போம்..!

-எல்லாளன்..