Wednesday, January 14, 2009

புதிய ஆண்டில் பிறக்கும் ஈழம்

புதிய ஆண்டில் பிறக்கும் ஈழம்!



அடிடா அடிடா உறுமிமேளம்
அழகாய் உதிக்குது தமிழீழம்
அன்னை மண்ணின் எழிற்தேசம்
அடிமை போக்கி அகல்காட்டும் -அடிடா

குத்துப் பாட்டு குதிக்கப் பாடு
எத்திக் கோடும் இசையைப் போடு
நத்துப் புத்தன் நரியை ஓட்டி
நாடு காக்கும் புலியைக் கூட்டி -அடிடா

அக்கு வேறு ஆணி வேறு
அடித்து நின்றாள் புலிமாது
வெற்றி வெற்றி வெற்றி என்று
வேங்கை நின்றான் நிலம்மீது! -அடிடா

தங்கத் தலைவா தானைத் தலைவா
தமிழாய் உதித்த சேனைப் புதல்வா
பொங்கும் நாளில் புதிய ஆண்டில்
புதுமை ஈழம் பூக்கும் தோழா! –அடிடா

-வன்னிமாறன்.

2 comments:

  1. ஈழமும் மலரும்
    இன்னலும் தொலையும்

    ReplyDelete
  2. உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்!!!

    ReplyDelete