புத்தாண்டில் பிறக்கும் புதுநாடு!
பல்லவி
நாளை வருகுதடா புத்தாண்டு-ஈழ
நாடு இசைக்குதடா தெம்மாங்கு -நாளை
அனுபல்லவி
வேளை குறித்துவிட்டார் விறல்மறவர்-பகை
விரட்டத் தேதியிட்டார் நிலப்புதல்வர் -நாளை
சரணம்
எங்கள் நிலத்துயரம் இனியோடும்-புலி
எழுந்த தமிழீழ இனம்விடியும்
சிங்க எதிரிபடை சிதறிவிடும்-தமிழ்த்
தேசம் எழுந்தகதை நிதம்பரவும்! -நாளை
பாயப் பதுங்கியவர் பாய்ந்தெழுவார்-பகை
பட்ட அடியனைத்தும் மேய்ந்தெழுவார்
தாயின் சுதந்திரத்தை தானுரைப்பார்-வையத்
தமிழர் உளம்மகிழத் தேனுரைப்பார்! -நாளை
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !
ReplyDeleteதமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க
உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்