Wednesday, December 24, 2008

புதியபாரதி கவிதைகள்
தமிழவள் எந்தன் பராசக்தி..!

பல்லவி
செந்தமிழே பொன்தமிழே தேவி சக்தி –எந்தன்
சிந்தனையில் நீயெழுந்தால் தேரும் பக்தி.. -செந்தமிழே

அனுபல்லவி
அந்தமிலாச் செம்மொழியே ஆதி சக்தி-விடியல்
அருள்கொடுக்கும் திருமொழியே அருள்வாய் சக்தி -செந்தமிழே

சரணம்
நாடுவிட்டு நாடுவந்தும் நான்மறப்பனோ-எந்தன்
நாவிருக்கும் தேவியுன்னை நானிழப்பனோ?
கூடுவிட்டுக் கூடுபாயும் குரங்குவல்லவே-எந்தன்
கொஞ்சுதமிழ் நெஞ்சைவிட்டுக் போகுமல்லவே. -செந்தமிழே

தூவிவரும் இசைவடித்து தினமிருப்பேன்-உன்னைத்
திக்கெல்லாம் பாவெடுத்துக் கனிகொடுப்பேன்
ஆவியென நின்றுநிலம் ஆர்ப்பவளே-எங்கள்
அருந்தமிழே இரும்தமிழே அன்னை தமிழே.. -செந்தமிழே

No comments:

Post a Comment