Friday, December 26, 2008

கோளைக்குக் கால்கள் இல்லை!
சுயமுயற்சி சொல்லும் வெற்றி:03

கோளைக்குக் கால்கள் இல்லை!


சுனாமிகள் வருமே பின்னர்
சுருங்கிய வாலாய்ப் போகும்
கனாவுகள் உருளும் பின்னர்
காலையிற் பறந்து போகும்
வினாவுதல் போதும் என்றால்
விடைகளும் பறந்து போகும்
அனாதியாம் மலையும் ஆறும்
அழியாத பதில்கள் சொல்லும்!

அழுந்திடும் மனித வட்டம்
அழுதிடும் கால முற்றம்
முழங்கையில் பூமி விட்டம்
முழுவதும் அளக்க லாமோ?
எழுந்துவா இளைய ஏறே
இளஞ்சுடர் வானைப் பாராய்
அழிந்திடாச் சிகரம் உச்சி
அண்டத்தின் மடியைப் பாராய்!

மூளையிற் கீறல் போடு
முளைவரச் சாரல் போடு!
வேளையில் உதிக்கும் அந்த
வெற்றிக்கு நடையே போடு!
கோளைக்குக் கால்கள் இல்லை
குருடனும் முயற்சி கண்டால்
நாளைக்கு அவன்தான் மன்னன்
நம்;புநீ ஏறு ஏறு!

சறுக்கினால் சறுக்கும் பாதைச்
சரிவுகள் முறிக்கும் மீண்டும்
நொறுக்கிநீ துணிந்து ஏறு
நிலத்திற்கு வெற்றி கூறு
குறுக்கிடும் தடைகள் வெட்டிக்
குதித்திடு அற்றைப் போது
உறுத்;;திடும் உலகுக் கெல்லாம்
உயர்வுண்டு குறிக்கும் தேதி!

சிகரத்தைத் தொடவே எண்ணித்
தூண்டிலைப் போடு லாப
நிகரங்கள் முதலில் எண்ணாய்
நீதரும் முயற்;சி ஒன்றே
அகரங்கள் தொட்டு உந்தன்
அகலக்கால் அளவே காட்டும்
முகருங்கள் வெற்றிக் கோடு
முழுவதும் செயலே சொல்லும்!
-புதியபாரதி
நன்றி: வானமே எல்லை

No comments:

Post a Comment