சுயமுயற்சி சொல்லும் வெற்றி:01
காம்பென ஆகிப் பார்த்தால்
கனமலர்த் தோட்டம் பூக்கும்!
சூதிலே போன பிள்ளை
சூதிலே சாதல் ஆவான்
வாதிலே போன பிள்ளை
வழியிலே சாவிற் போவான்
கூதியைக் கண்ட பிள்ளை
கொடும்பிணி கண்டே மாள்வான்
போதையிற் போனான் என்றால்
பெண்ணவள் தானும் போவாள்!
நல்லதைச் செய்தால் மட்டும்
நல்லதே பிறக்கும் பாரி
முல்லையிற் தேரைத் தந்த
முடிவதும் மனிதம் பாரும்
கல்விக்குக் காலம் இட்ட
கணக்கிலும் முயற்சி என்ற
சொல்லுக்கே வெற்றி உண்டு
சுயமெதோ விடையும் அஃதே!
உள்ளத்திற் புனிதம் வேண்டும்
உழைப்பிலும் கணிதம் வேண்டும்
பள்ளத்தில் தோட்டம் செய்யப்;
பார்த்திடில் நீர்தான் அள்ளும்
முள்ளிலே நடந்தாற் கூட
மிதியடி உரமாய் வேண்டும்
தௌ;ளிய அறிவும் தேர்ச்ச்சித்
திட்டமும் முதலில் வேண்டும்!
காற்றிலே மாவைக் கொட்டி
கணக்கிடப் போதல் நன்றோ?
தூற்றிடும் மழைநீர் கொட்ட
தெருவிலே உப்பா விற்கும்?
நாற்றது முன்னும் பின்னும்
நல்வயல் மாட்டே உண்டு
தோற்றிடும் முயற்சி என்ற
தெளிவது இல்லாத் தேடல்!
தேம்பிநீ அழுதால் உள்ள
திரவியம் கூடப் போகும்
கூம்பிநீ அம்பாய் ஆகிக்
குதித்திடில் மலையே தூளாம்
சாம்பிணம் கூடத் தேறிச்
சரித்திரம் படைக்கக் கூடும்
காம்பென ஆகிப் பாராய்
கனமலர்த் தோட்டம் பூக்கும்!
-புதியபாரதி.
நன்றி: வானமே எல்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment