இத்தனை கொடுமையா?
இயேசு பிறந்த நாளதனில்
இலங்கா இட்ட கொடுமையில்
இயேசு பிறந்த தொழுவத்தில்
இறந்த பசுக்கள் பாருங்கடா
இயேசு வணக்க நேரத்தில்
இன்னும் உலகம் உறக்கத்தில்
இயேசு உதித்தார் மீட்புக்காய்
எங்கள் தமிழர் இறப்புக்காய்..!
கொத்தாய் வீழும் குண்டெறியும்
கொடியர் மகிந்தக் கூட்டத்தார்
நத்தார் பார்த்துக் கொலையெறியும்
நரியர் செயல்கள் போகவில்லை
புத்தி மாந்தன் யோசப்பை
போட்டார் முன்னர் இந்நாளில்
யுத்த ராச பக்சாக்கள்
உமிழும் கொடுமை நீண்டதுவோ?
இலங்கக் கொடுமை நீளுவதோ?
இராச பக்சர் ஆளுவதோ?
கலங்க அடிக்கத் தமிழர்கள்
கதறி நாளும் வீழுவதோ?
மலங்க மலங்க இழுக்கின்றார்
மதத்த படியே கொல்கின்றார்
மலத்தை உண்ணும் தமிழர்கள்
மடியில் வைத்துக் கொல்கின்றார்!
உலகம் எதுவும் வருவதுவாய்
இறந்த பசுவும் காண்கலையே
கலத்தில் இந்தி(ய)க் காட்டெருமை
கக்கம் இருந்தே உசுப்பிவிடும்
பலத்தில் யுத்த பகவானும்
பார்த்துப் பார்த்துக் கொல்லுகிறான்
குலமாய்த் தமிழன் எழுவதொன்றே
கூற்றம் வெல்ல நாளிருக்கும்!
No comments:
Post a Comment