மாவீரனே.. மாவீரனே..
மாவீரனே மாவீரனே..
மாவீரனே.. மாவீரனே..
ஆவிதந்து ஈகம் செய்த
அன்னை மண்ணின் மறவனே! -மாவீரனே..
உன்னுயிரில் நீயெழுதி
உன்னினத்தை நீவழுதி
சென்றதுவுன் திருமுகமே
செங்களத்தின் புலிமகனே.. ஓ.. -மாவீரனே..
காலடி மண்ணைத் தேடுகிறேன்-என்
கடவுளாய் எண்ணிப் பூசுகிறேன்
போரடி வயலில் புதைகுழியில்-உந்தன்
பொன்னடி தொட்டுப் பேசுகிறேன்! -ஓ.. மாவீரனே
உன்னைப் பாடிடப் பாடல் இல்லை-உன்
உயிரைத் தொழுதிட மொழிகள் இல்லை
உன்னை எரித்திடத் தீயும் இல்லை-நீ
உறங்கும் சிதைவிடக் கோவில் இல்லை! -ஓ.. மாவீரனே..
-புதியபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment