தேசியத் தலைவன்
தேசார் தலைவன்
தேசார் தலைவனென தேவனுருக் கொண்டதுபோல்
ஆசிபெற் றாண்டவனாய் ஆளவந்தான்-வாசமண்ணில்
எல்லை யொடித்துவந்து கொல்;லும் அரசபடைத்
தொல்லை முடிக்கவந்தான் தீரன்!
முகாம்கள் கொடுத்த முகம்
ஆனையிற வாகுவழி ஆர்கிழக்குக் கேகுவழி
கூனை யுடைத்தபடைக் கேடுகண்டான்-தானைசிங்கப்
பூனைநரி யானதிமிர்ப் பொல்லார் தெருச்சதிரில்
மானமகன் நோகநின்றான் மண்!
அவலக்கதை அறிந்த அம்பி
காலவரை யின்றிவதைக் காட்டு மிராண்டிகளாய்
சாலையெலாம் இட்டார் சவக்கிடங்கே-பாலனாய்க்
கண்ணில் அவலக் கலவரங்க ளிட்டகதை
எண்ணி யொடிந்தான் இதயம்!
தமிழ்மன்னர் சரித்திரம்
தேசம் தமிழெடுக்கத் தேர்ந்த அரசாட்சி
வீசும் முரசார்க்கும் வேந்தனென-ஆசையொடு
சங்கிலியன் பண்டாரன் சாற்றும்இ ராவணனார்
தங்கநிலம் கற்றானே தான்!
தமிழீழ அரன்வகுத்த தம்பி
ஆட்சி அமைச்சர் அரசாட்சி போர்ப்படைகள்
காட்சி கொடுக்கக் கனிந்ததமிழ்-மாட்சிமையாய்
வன்னித் தலமுறையும் வண்ணத் தமிழீழம்
சென்னியெலாம் வந்த சிறப்பு!
நான்குபடை கண்ட நாயகன்
மரபுப் படையோடும் வான்படையும் நீரார்
சுரமாய்க் கடற்படையும் சேர்த்தான்-கரும்புலியாய்
தன்னாவி எற்றித் தடைகள் உடைத்தெறியும்
பொன்னார் படையுமிட்டான் பேசு!
பிரபாவின் சிறப்புப் பெயர்கள்
சூரியன்; பிள்ளை சுடரோன் கரிகாலன்
சேரனொடு பாண்டியனும் சோழனென-வீரமொடு
தமிழீழம் மீண்டுமிட்ட தம்பிபெருங் கூட்டம்
கமழும் பலபெயர்கள் காட்டும்!
காந்தக் கண்கள்
காந்தம் அவன்கண்கள் கண்டுண்ட நாகமென
ஏந்தும் உரையாடல் இன்னமுதம்-பூந்தமிழர்
வீரியங்கள் போர்த்தநிலம் வித்தாய்ப் புலிகளிட்ட
போர்வயங்கள் யாவுமிவன் போதம் !
போரென்றால் போர்
போரென்றால் போரென்றான் தீர்வென்றால் தீர்வென்றான்
போரிட்ட சிங்களத்தைப் புட்டுவைத்தான்-நேரிட்டு
மாவீரன் என்க மகிந்தவதை மண்காக்கத்
தேவாரக் கோடுவைத்தான் தீரன்!
மசியாத மானவீரன்
வீரங்கொள் வேங்கை விளைந்துவரும் தத்துவத்தே
ஆரமுதம் ஆக்கியதோர் ஆசிரியன்-பேரங்கள்
போட்டும் மசியான் பெருங்காசு காட்சிவைத்துக்
கேட்டதுவே இந்தியத்துக் கேடு!
சொல்லிற் சூரியன்
மாவீரன் எண்ணி மனதுப் பெருங்காதல்
கோவிலாய் ஆக்கும் குலவேந்தன்-நாவாய்ந்து
சொன்னா லதுவேதம் சொல்லிற் துளிதவறி
நின்றாலு மேரான் நிசம்!
தேசப்பெண்
அடுப்படியி லாக்கியவள் ஆர்தோளி லேவும்
துடுப்பெடுத்துக் காக்கின்றாள் தேசம்-கொடும்வாதைக்
காட்டேறி மண்வந்து கற்புக் குலமாதர்
வாட்டும் கதைமுடிப்பாள் வஞ்சி!
அண்ணனின் அமுத வாக்கு
அண்ணன் சொலும்வேதம் ஆரமுதம் உள்வாங்கி
கண்ணிமைக்கும் போதே களமெடுப்பாள்-மண்ணில்
புலிப்படையும் மாதர் பெரும்படையும் கண்டு
எலிப்படையாய் ஓடுவான் எத்தன்!
வாராது வந்த மாமணி
வாராது வந்தவொரு மாமணியே தம்பியொரு
நேராக வந்த நிலவேந்தன்-கூராக
ஈட்டிவதை போட்டு எரித்தவர்கள் காட்டிலெதிர்
மூட்டியதே நீதிப்போர் மீட்சி!
முடிந்த ஒப்பந்தம்
சுதுமலையில் தம்பி அதிருமுரை தந்து
எதிரொலிகள் வைத்ததொரு எண்ணம்-அதுபோலே
இந்தியமும் லங்கா இணையிட்ட வொப்பந்தப்
பந்தி முடிந்ததடா பார்!
இந்தியம் காணாத இனத்தலைவன்
இந்தித் தளபதிகள் இப்படியோர் போர்த்தலைவன்
சந்தித்த தில்லையெனச் சாற்றினரே-இந்தியத்து
வல்லரசுக் காட்டினிலே மாறன் பிரபாபோல்
இல்லையொரு வீரனென்றார் ஏர்!
நீதிப்படை
புலிப்படையாய் நீதிநெறிப் போதமெனக் காணும்
நிலப்படையாய் ஆர்க்கின்றார் நித்தம்-எலியான
எட்டப்பர் ஒட்டர் இனத்துப் பதர்வந்தும்
கட்டுக் குலையாக் கணக்கு!
பிரபா பதிகம்
பிரபாகை நோக்கிப் பிறக்கும் திசையில்
சுரமாகி ஏவுகணை செல்லும்-கரிகாலன்
கட்டளையில் நின்று கனிநிலத்தைக் காப்போரின்
பட்டுப் பதிகமிது பார்!
பொதுவுடமைப் பிரபா
பொதுவுடமைப் பாட்டாளிப் புத்தகமாய்ப் பேணும்
மதியுடைமை யாக்கினான் மண்ணில்-நதியார்ந்து
வண்ணம் பொருண்மியம் வாருழவம் விஞ்ஞான
எண்ணமெலாம் ஆவான் இவன்!
மூத்த கலைஞர் போற்றுதல்
தொடர்பாடல் ஊடகம் தேசக் கலைகள்
நடம்பாட்டு வாத்தியமே நன்றாய்-புடம்போட்டு
மூத்தோர் அறிவோர் முழுநேரத் தூரிகையர்
ஏத்தும் பிரபாவென் றேர்!
பெண்வீரம் நிலம் வெல்லும்
விடியலிலே பெண்கள் விளையும் நிலமே
மிடிமையிருள் போக்கிநலம் மீளும்-அடிமையென
வாழும் இனமென்றும் வாழாது வெங்கொடுமைச்
சூழும் இனம்வீழும் செத்து
பலமே இனம்வெல்லும்
பலம்கொண்ட நாடொன்றே பார்க்கக் கணிப்புக்
கலம்கொண்டு நிற்பதாய்க் காணும்-நிலம்மேவி
வல்லமை நீடுயர்ந்த வண்ணமே தற்காக்கும்
துல்லியங்க ளாக்கும் தெரி!
ஒற்றுமையே பலம்
நாடொன்று தோன்றுமெனில் நற்புயங்க ளார்க்குமெனில்
கூடொன்றாய் ஆகிக் குதிக்குமெனில்-தேடொன்றாய்
மக்கள் அருகணைந்து மண்விடிய லாகவரும்
பக்கமெலாம் ஒற்றுமையே பார்!
உரிமையொடு வினவும் பிரபா
மண்ணின் துயரில் மான நெடும்போரில்
கண்ணாய்ப் பணியாற்றும் காரிளையாய்-எண்ணீர்
உரிமையொடு கேட்கின்றேன் ஏற்றபெரும் பாதைச்
சரிதமொடு நின்றுலகிற் சாற்று!
எட்டில் எடுத்த உறுதி
தாய்மண்ணும் கொப்பாட்டன் தந்த பெருமண்ணும்
பேய்வந்து தாலாட்டப் போகோம்நாம்-ஓய்வின்றி
மீட்சிப் பெரும்போரை வேராக்கிப் போர்வெல்லும்
காட்சியினி ஒன்றே கணக்கு!
பிரபா கூறும் போர்யுக்தி
கொன்று இனமழிக்கும் கூற்றப் பெரும்போரை
வென்று நாமெழுதும் வேளைவரும்-இன்றுநாம்
போரை இலாவகமாய்ப் போடும் வரைபடத்தே
ஆரை வடித்ததென்றே ஆர்!
கார்த்திகை உரையில் கரிகாலன்
புலத்தீர் கிறுங்காதீர் போர்வேங்கை தொய்விற்
துலங்குவதாய் எண்ணாதீர் தோளீர்-கலங்காமல்
வையப் பெருஞ்சாரல் வகுத்த மணித்தமிழீர்
கையில் இருக்;குதெங்கள் காப்பு!
(written in 2008 By Solaikkuyil)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment