புத்தம் மகிந்தம் மரணம்..!
புத்தம் சரணம் அப்புகாமி
யுத்தம் மரணம் மகிந்தசாமி
கத்தும் சனங்கள் கணக்கு இல்லை
கருகி வெடிப்போர் உனக்கு இல்லை
நித்தம் சோறும் நிறைந்த வயிறும்
நினக்கு இருக்கு மகிந்தப்பா!
எத்தனை நாளைக்கு எங்களின் சனங்கள்
இரத்தம் இறைப்பார் கோத்தப்பா!
காந்தித் தாத்தா வாழ்ந்த தேசம்
கந்தகம் தந்தார் உனக்குஅடா
கடலின் மடியில் தமிழகம் எரிந்தும்
காணாத் தில்லி மணக்குதடா!
ஊரும் கருகுது உலகும் கதறுது
உனக்கும் சிறைநாள் இருக்கிறது
வேரும் விழுதாய் விளையும் தமிழனின்
விடியல் திருநாள் வருகிறது!
-நம்நாடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment