Thursday, March 12, 2009
வீரவணக்கம் தருகின்றோம்..!
வீரவணக்கம் தருகின்றோம்..!
வேள்வித்தீயின் மடியினிலே விழுந்தவெங்கள் உறவுகளே
வேரிற்பதித்த உயிர்களே வீரவணக்கம் தருகின்றோம்!
-வேள்வித்தீயின்
அவலம்தந்த வன்படையான் ஆட்சியீது தானடா
கவளம்சோறும் இன்றியந்தக் காடைபறிக்கக் காணடா!
-வேள்வித்தீயின்
பிஞ்சுவெந்து சாகிறான் பேடிகொன்று முடிக்கிறான்
வஞ்சனையார் கையிலே வஞ்சிசெத்துப் போகிறாள்
நெஞ்சுவெடி ஆகுதடா நிலத்துறவு சாகுதடா
அஞ்சியஞ்சி இன்னுமந்த அரக்கமடி சாவதோடா!
-வேள்வித்தீயின்
இஞ்சிதின்ற குரங்குபோல் இராசபக்சம் ஆனதடா
ஏழுலகம் வாழுகின்ற இனத்தமிழா எழுந்திடடா
துஞ்சவொரு நாழியில்லை தேசமெங்கும் அசைத்திடடா
தேன்தமிழ் ஈழமண்ணைத் திக்கெல்லாம் பதித்திடடா!
-வேள்வித்தீயின்
-சோலைக்குயில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment