நேற்று..இன்று..நாளை..!
நேற்று..
கொத்துகொத்தாய்ப் பூக்கள் தூவும்
தத்திவந்து தவளை பாயும்
கத்துகுயில் சிந்து பாடும்
சித்திரையில் கன்று துள்ளும்
அத்தான்மடி வஞ்சி துஞ்சும்
முத்துமாரி மணிகள் கொஞ்சும்
குத்துகுளிர் பனிகள் மேவும்
இத்தனையும் இயற்கை விஞ்சும்!
இன்று..
செத்துமடி யுதெங்கள் தேசம்
புத்தவகி டுவந்து மோதும்
யுத்தமகிந் தனவன் குண்டில்
சுத்தியெரிந்து நிலம் சாகும்
கத்திக்குழறும் பிஞ்சு மணிகள்
எத்திக்கருகும் புல்லர் தீயில்
பித்துபிடித்த சிங்க ஆட்சி
மொத்தியிறைக் குதடா சூழ்ச்சி!
நாளை..
விடியலெழு திநிற்பான் வேங்கை
குடிகளிணைந் துசொலும் வாழ்க்கை
மிடிகளக லுமெங்கள் தேசம்
கடியபகை மிரண்டு ஓடும்
அடிமைவிலங் கொடிந்து போகும்
நெடியசுதந் திரங்கள் மேவும்
படியமடிந் தவர்கள் மண்ணில்
புதியபர ணிசொல்லும் என்றும்!
நன்றி: சுந்தரபாண்டியன் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment