Saturday, March 14, 2009

சுதந்திரத் திருநாள்


சுதந்திரத் திருநாள் மலரும்...!


சாவின் மடியில் உருகும் உயிரே
சந்ததி சந்ததி தொழுவோம்!
கூவிக் கதறும் உங்களின் குரல்கள்
ஊழிகள் முழுவதும் பதிவோம!

நாளை மலரும் ஈழமெல் லாமும்
நாயகம் உம்நினை வாக்கும்!
சூளை யாக்கிய சிங்களத் தெறிப்புத்
தீண்டிய எம்முயிர் நிலைக்கும்!

பாளையின் சிரிப்பாம் பாலரை நீங்கள்
பகைவனின் தீயினில் கொடுத்தீர்!
கூழைக் கூட அருந்த விடாமல்
குடியாய் எரிந்திட விழுந்தீர்!

போரிடும் தமிழன் போர்ப்பகை தன்னை
பொடியாய் ஆக்கியே வருவான்!
வீறிடும் எங்கள் வேரின் கதறலை
விரட்டிய சுதந்திரம் தருவான்!

துட்டன் மகிந்தன் தூக்கிய கொலைவாள்
துடித்துமே அவனிடம் திரும்பும்
கெட்ட கெமுனுக்கள் கீழ்த்தரக் கூட்டம்
துடித்திடும் நாட்களே அரும்பும்!

பட்டமண் மீண்டும் பயிர்வேர் எடுக்கும்
பாரில்நம் நாடுதான் பிறக்கும்!
ஒட்டிய உறவுகள் உயிர்ப்பிடும் அந்த
உழைப்பின் சுருதிகள் திறக்கும்!

தேசப் பாவலன் துயர்ப்பா எல்லாம்
சுதந்திரப் பண்ணென விரியும்
பாச மைந்தர்கள் பண்பிடும் தலைவன்
பதிந்திடும் கொற்றமே தெரியும்!

நாளைய உலகம் தமிழனின் கையில்
நாடுகள் எல்லமும் வழுதும்!
தோளில் விழுந்திடும் மாலைகள் எல்லாம்
சுதந்திரம் சொல்லியே எழுதும்!

-புதியபாரதி

No comments:

Post a Comment