Saturday, March 7, 2009

எட்டப்பக் கொடுமை

எட்டப்பக் கொடுமை

எட்டப்பன் பற்றிச் சிவநேசன்
எட்டப்பன் காக்கை எனவுரைத்துப் பார்மன்றம்
துட்டப்பர் பற்றிச் சிவநேசன்-தொட்டுவைத்து
யாழ்ப்பாண மண்ணின் இயமன் எனக்காட்டி
ஊழ்ப்பேயைச் சொன்னார் உரைத்து

ஒட்டுக் கூட்டம்
கற்பழிப்பு கன்னக்கோல் காசுபணக் கப்பமொடு
விற்றுஇனம் சீவிக்கும் வீணரென்றார்;-முற்றும்
துரோகியே ஆகித் தினம்தமிழர் கொல்லும்
குரோதிகைக் காம்பென்றார் கொள்!

கிழக்கின் பதர்

புலியோ டிருந்து பிரிந்தான் கருணா
வலிய எதிரியொடு வாய்ப்பாய்-பலியானான்
சிங்களத்து வெங்கொடுமைச் சேரக் கிழக்கெல்லாம்
பங்கம் விளைத்த பதர்!

அரசியற் குட்டம்
காழ்ப்பு எரிப்போடும் கற்பழிப்புச் சூறையென
கூழ்ப்பானை யாக்கிநிதம் கொன்றாரே-தாழ்ப்பாளின்
உள்ளே குதிரை ஒளித்தோடு கின்றவர்கள்
குள்ளர் அரசியலார் குட்டம்!

பல்லோரைக் கொன்ற பழியர்
சிவராம்; ரவிராஜ் குமார்பொன் பரராஜ்
உவப்பாளர் என்றான விக்கி-சிவப்பாகி
பாராளும் கூட்டமைப்பார் பாரெழுதும் ஊடகத்தார்
ஏராளம் கொன்றாரிவ் எட்டர்!

அந்நிய நிழலின் அடிமை
அந்நியன் சோறாடி ஆட்சிப் படைநக்கி
இந்நாளும் வந்தானே எட்டப்பன்-அந்நாளில்
காக்கை பருக்கைக்காய் காட்டிக் கொடுத்ததுபோல்
ஈக்கள் மலமானார் இன்றும்!

பணம்தேடும் பழியர்
நாட்டுப்பற் றாளர்கள் நாடும் கலைவாணர்
பாட்டுக் கவிபுனைந்த பலபேரை-காட்டிக்
கொடுத்துக் கனித்தமிழைக் கொல்வாரின் காசில்
எடுத்தார் லட்சமாய் எட்டி!

சொந்த இனத்தை மாய்த்த தீயர்
புளொட்மோகன் ராசிக்குழு பீற்றர் கருணா
களடக்ளஸ் நெப்போலி யன்னாய்-நிலத்தாயின்
செந்தமிழ் ஊட்டுச் சிறப்பாளர் கொன்றாடி
சொந்தநிலம் தீய்த்தாரே சொல்!

சிங்களரும் ஒட்டரும் சேர்ந்த கொலைக்காடர்
புலனாய்வர் இக்குட்டப் பொல்லாதார் கூடி
வலிகாமம் வீடுடையோர் வாட்டி-களவாடிக்
கொள்ளை புரிந்த கொடும்காதை செய்திகளில்
அள்ளிவரக் கண்ட அசிங்கம்!

தொண்டரைக் கொன்ற சிந்துஜன்
புனர்வாழ்வு பூப்பாரைப் போட்டுவெலிக் கந்தை
தனிலாடிச் சிந்துஜன் சுட்டான்-மனிதமே
இல்லான் இவனோர் எரித்தாக்கிக் கொன்றாடும்
பொல்லான் கருணாப் பிரிவு!

வழிசொல்லும் பழியர்
புளொட்கும்பல் ஈப்பீடி ஈயென்ரி எல்எவ்
களக்கும்பல் ஆட்சியொடு கண்டு-வளநாடு
வாய்கால் இருட்காடு வந்தார் வழிசொன்னார்
நாய்க்கால் அருகாய் நடந்து!

எட்டப்பனால் இறந்தார் அதிகம்
எதிரி அழித்து இறந்தாரை விஞ்சும்
பதர்கள் அழிக்கவுயிர் பட்டார்-சிதையில்
துயிலாரும் மாவீரர் தேசத்து நெஞ்சின்
உயிராற்றை ஓருமோ ஒட்டம்!

இது இரண்டாயிரத்தேழின் இடர்
இரண்டாயி ரத்தேழு ஒக்ரோபர் துக்கார்
புரண்ட நிரைக்காடு போட்டேன்-அரக்காது
எட்டப்பன் காக்கை இதிகாசம் கொண்டாடும்
துட்டப்பர் சிங்களத் தோட்டி!

குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு வார்த்து

குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு வார்த்து
உளக்கிக் குவித்தார் ஒட்டர்-குளவியாய்
குத்துவார் கொல்லுவார் கொள்ளை பறிக்கும்
எத்துவார் ஆகினர் எத்தர்!

விரிவுரையாளரைக் கொன்றார்
விரிவுரை யாளர்கள் வித்துவம் கல்வி
புரிகுவர் பார்த்துமே கொன்றார்-நரியாய்
புலனாய்ப் படையொடு போந்தவர் தன்தாய்
நிலத்தையே தீயிட்டார் நாசர்!

பிரிவுகளான பித்தர்
இடக்ளஸ் ஒருபக்கம் பிள்ளையான் என்பான்
மடக்காய் கிழக்கோடும் மற்றோன்-குடக்கன்
கருணா ஒருபக்கக் கந்தலாய் பிய்த்துக்
குருதி குடித்தாரே குத்தர்!

காக்கைகள் காணும் யாக்கை
கோடியாயக்; கோடியாய்க்; கொண்டனர் காசுறும்
பேடியாய் ஆகினர் பெண்டர்கள்-மாடியாய்
மாளிகை யாக்கினர் மடியினிற் போட்டனர்
தூளியாய் அந்நியத் துத்தர்!

இனங்கள் பொருதும் இடர்
முசுலீம் படையிட்டு முத்தமிழ ரோடு
பிசிறைக் கிளப்பவகை பெய்தார்-அசலாய்
தமிழமொழி கொண்ட தண்ணார் இனங்கள்
அமிழவழி இட்டதே ஆட்சி!

தாடிமயிர் ஒட்டர்
கோடிபணம் அள்ளி குலத்தை எரித்தவர்கள்
தேடி யுலகனைத்தும் சென்றார்-தாடிமயிர்
காட்டித் தனித்துவங்கள் காட்சி ஒழுகவைத்த
கூட்டர் கொன்றாரெம் கூடு!

பினாமிகளில் சொத்து
எழுநூறு கோடி இலங்கைப் பணத்தை
கழுகாய்ப் பறித்திட்ட கள்ளன்-குழுவாய்ப்
பிரிந்து பினாமிப் பெயர்களிலே சொத்தை
உரித்தான் கருணா உமி!

கருணா-பிள்ளையான் கணக்கு
கிழக்கில் கருணாவும் பிள்ளையான் என்றும்
உழக்கும் குழுவாக உண்டானார்-முழக்கி
இராணுவப் பூட்டுக்குள் எல்லாமாய் வீரப்
புராணங்கள் பாடுகிற புல்லர்!

சிறையிருந்த சிங்கன்
பிரித்தானி யாச்சிறையில் பேடி கருணா
சிரிப்பாகி நிற்கின்றான் செப்பீர்-நரிலங்கா
வேங்கைப் பலத்தை விசுக்க வயமிட்டு
நீங்கினான் இன்றொன்றும் இல்லை!

செய்தி: கொலையிடும் கருணா கூட்டம்

பிள்ளையான் கூட்டம் பிடித்தார் கருணாவின்
உள்ளக் குழுக்கள் உடையோரை-குள்ளக்
கருணா கொடிகட்டிக் காட்டேரி யாகவே
பெருத்தகொலை யாக்கினான் பேய்!

காலம்முழுதும் பழியார் வடுபேசும்

எட்டப்பர் கூட்டம் இடித்தாக மண்ணின்
கெட்டப்பர் என்றெழுதிக் கொண்டாரை-துட்டப்பர்
என்றேதான் தூற்றும் இனத்து வரலாறு
என்றென்றும் தானென்று எண்ணு!

ஈழப்போர்: கூட்டமாய் வந்த எட்டப்பர்
கட்டபொம்ம னுக்கொருவன் காக்கையவன் வன்னிக்கு
எட்டப்பர் கூட்டமெங்கும் ஓரானே-கெட்டவர்கள்
ஈழப்போர் தன்மட்டும் எட்டாகி எட்டப்பன்
சீழாகி வந்தானே செப்பு!

இந்தப்போர் மட்டும் ஏராளம் எட்டப்பர்!
கற்பழித்தான் சிங்களவன் காரிகை செத்தாளே
விற்றவனோ ஆட்சியை வேதமென்றான்-கற்றறியான்
கெட்ட கருணா கிளக்கனாய்ப் பிள்ளையான்
டக்ளசான் என்றாம் இடாப்பு!

தாய்மண் சிதற நீமட்டும் சிங்களத்திலா?
சிங்களவன் குண்டு சிதறடிக்கும் போதிலே
எங்களவன் எட்டப்பன் ஆவதோ-வெங்களத்தில்
வேங்கை மணிப்புதல்வர் வீழ்கின்ற போதிலே
நீங்கியே சிங்களத்தை நீக்கு

-சோலைக்குயில்

No comments:

Post a Comment