எழுவோம்.. !
எத்தனை கோடி இடியுடன் கூடி
எரியுடன் குண்டுகள் வீழ்ந்தும்
எட்டபப் பருக்கை தொட்டிடக் கொழும்பில்
இந்தியக் கூட்டுகள் மலிந்தும்
புத்தரின் காவி போட்டவர் நின்று
போரபோர் என்றுமே பொலிந்தும்
புல்லராம் மகிந்தர் பொய்யுருக் கொண்டு
புவியைம றித்திடப் போந்தும்
செத்தும லிந்து தெருவெலாம் எங்கள்
தேகமும் சதையெலாம் கிடந்தும்
தேசமெல் லாமும் தேர்ந்திடா வகையில்
தினமொரு கதைகளாய்த் தெளித்தும்
யுத்தம லத்தார் உருக்கொள வாலை
உயர்த்தியே உரைத்துமே வந்தார்
இத்தனை பிறகும் இருப்பமோ மகனே
இனியுநாம் பொறுக்கிலோம் எழுவாய்!
மனிதவு ரிமைகள் அய்நாவ மைப்பும்
வாலைசு ருட்டியே வருவார்
பொடிமலைத் தேனீர் பருகிய பின்னர்
போகுவர் எங்களைக் காணார்
புனிதபா ரதமே போரினை நகர்த்தும்
புல்லராய் மாறியே வருவார்
பேயுருக் கொண்டு பொய்யுரை பகர்ந்து
பேயராய் ஆகியே போவார்
இனியொரு வாழ்வோ எரிந்திட வீழ்வோ
என்றுத மிழ்ழகம் உரைத்தும்
இளைஞரின் உயிர்கள் எரிந்திடக் கண்டும்
இந்திய வடக்கினார் மாறார்
மனிதமும் நீதி வகுத்தவர் தமிழர்
மணிநிலப் போரதாய் எழுவோம்
வையகத் தேசம் வாழ்ந்திடும் எல்லோர்
வரைவிலும் ஈழமண் காப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment