Saturday, February 21, 2009

குண்டில் எரிந்தது தேசம்!

குண்டில் எரிந்தது தேசம்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

காயும் சிதறுது கனியும் சிதறுது
காற்றும் சிதறுது காணாய்-அட
தாயும் சிதறுது தந்தை சிதறுது
தளிரும் சிதறுது பாராய்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!


குழியின் மத்தியில் குந்தி இருந்தவன்
குண்டு வெடியிலே இறந்தான்-வந்த
வழியின் தெருக்களில் வாழ்ந்த குடும்பமே
வகைதொகை இன்றி மடிந்தார்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

நல்லூர் தேரிலே நடந்த மக்களாய்
நாலா பக்கமும் ஊர்கள்-அந்தக்
கூட்டம் பார்த்துமே கொழும்பு ஏவிய
குண்டில் மடிந்தன வேர்கள்!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

இந்தி(ய)ப் பேய்களும் இலங்கை நாய்களும்
எடுத்த நெருப்பிது அல்லவா? எங்கள்
சொந்தப் பிறப்புகள் செத்து மடிவதா
சிவந்த தேசமே சொல்லடா!

குண்டில் எரிந்தது தேசம்-தமிழ்
மண்ணே கருகிய கோலம்!

-நம்நாடன்

No comments:

Post a Comment