மகிந்த -இந்திய இராணுவ தளபதிகளின் பேச்சை நம்பி
புலியின் வாலைப் பிடித்த சோனியா
செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009
இந்தியா உதவி செய்தால் புலிகளை எப்படியும் ஒழித்து விடுவோம் என்ற மகிந்தவின் பேச்சையும் இந்தியா இராணுவ தளபதிகளின் பேச்சையும் நம்பி புலியின் வாலை பிடித்திருக்கிறார் சோனியா. பிரபாகரனை நெருங்கி விட்டோம்இ இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்றெல்லாம் சொல்லி பல மாதங்கள் ஒடி விட்டன.
ஆட்சி முடிவதற்குள் எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வந்து புலிகளை அழித்து விட வேண்டுமென்று சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு வேண்டிய உதவிகளையும் செய்கிறார். போர் முடிவுக்கு வராமல் எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு போவது? அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தனக்கும்இ பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுப்பார்களா? இனிமேல் தமிழகத்திற்கு செல்ல முடியுமா? ராகுல்இ பிரியங்காவை எப்படி பாதுகாப்பது? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் அவரை துளைத்தெடுக்கின்றன.
ராஜிவ் காந்தி செய்த தவறு அவருக்கு தெரியாமலா இருக்கும்? இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம். அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா? சமாதானம் செய்து வைக்காமல் ராஜிவ் காந்தி இலங்கைக்கு ஒரு இலட்சம் பேர் கொண்ட படையை அனுப்பினார்.
அவர்கள் அங்கு 10,000 தமிழ்ர்களை கொன்று குவித்தார்கள். பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து கற்பழித்து வெறியாட்டம் ஆடினார்கள். புலிகளிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்று குவித்தார்கள். பெண்களும் குழ்ந்தைகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது ராஜிவ் காந்தி தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே? படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்கு படை நடவடிக்கையை எடுக்க வேண்டும்?
உண்ணாவிரதம் இருந்த திலீபன் 5 சாதாரண கோரிக்கைகளைத்தான் முன் வைத்து அறப்போராட்டம் நடத்தினார். தனி ஈழ கோரிக்கை கூட அவர் அப்போது வலியுறுத்தவில்லை. சிங்களவர்களை தமிழர் பகுதியில் குடியேற்ற வேண்டாம்இ தமிழர்களை சிங்கள காவலர்கள் துன்புறுத்தக் கூடாது என்பனவற்றைதான் கேட்டார். இந்திய அரசு நினைத்திருந்தால் ஒரு நொடிப்பொழுதில் அவற்றை நிறைவேற்றி திலீபனை காப்பாற்றி இருக்கலாம். கண்டு கொள்ளாமல் இருந்து அவரை சாகடித்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த புலித் தளபதிகளை இலங்கை அரசு பிடித்து வைத்த போது காப்பாற்றச் சொல்லி இந்திய அரசை கெஞ்சிய போதும் காப்பாற்ற முன்வரவில்லை. 12 தளபதிகள் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்தார்கள்.
சீனாவும்இ அமெரிக்காவும் இலங்கையில் கால் பதிக்க கூடாது என்பதற்காக தமிழர்களை இந்திரா காந்தியும்இ ராஜிவ் காந்தியும்இ சோனியாவும் பலியிடுகிறார்கள். அறப்போராட்டம் செய்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்திரா ஒரு பக்கம் ஆயுத உதவி செய்தார். மறுபக்கம் கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தார். இரட்டை நிலையை கடைப்பிடித்தார். பிறகு ராஜிவ் காந்தி எற்கனவே கொடுத்த ஆயுதத்தை புலிகளிடமிருந்து திரும்ப பிடுங்கினார். நோர்வே அரசு சமாதானம் செய்வது போல நடுநிலைமை வகிக்காமல் அமைதிப்படை என்ற பேரில் அட்டகாசப் படையை அனுப்பி வெறியாட்டம் ஆடினால் பாதிக்கப்பட்டவன் சும்மா விடுவானா? திரும்ப அடித்து விட்டான்?
சிங்களர்கள் மேற்கு வங்காளத்திலிருந்து இலங்கைக்கு சென்று குடியேறியவர்கள். அதனால்தான் என்னவோ வட இந்தியர்கள் சிங்களர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லும்போது கூட தட்டிக் கேட்பதில்லை. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் ஒரே ஒரு சரப்ஜித் சிங்கிற்காக மத்திய அரசு எத்தனை தடவை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தியது? அப்பாவி ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு நியாயப்படுத்தி பேசுகிறது.
நேரு குடும்பத்திற்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட இனத்தை பகைத்துக்கொள்வதே வேலையாகப் போய் விட்டது. இந்திரா காந்தி சீக்கிய இனத்தை பகைத்தார். மீண்டும் சோனியா ஒரு இனத்தை பகைக்க தொடங்கி விட்டார்? இதன் விளைவு என்னாகுமோ?. ராஜிவ் காந்தி செய்த தவறுக்கு சோனியாஇ ராகுல்இ பிரியங்கா ஆகியோர் பிராயசித்தம் தேடியிருக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து பழி வாங்க நினைக்கிறார்கள்.
ஒரு வேளை கடைசி ஈழப் போரில் புலித்தலைவர் கொல்லப்பட்டாலும்இ அவரது ஆபத்துதவிகள் மனித வெடிகுண்டுகளாக மாறி பாய்வார்கள். அடிபட்ட புலி சும்மா இருக்குமா? எதிரியை குறைவாக மதிப்பிட்டு பழி வாங்கும் உணர்ச்சியால் புலி வாலைப்பிடித்த சோனியா இனிவரும் காலங்களில் புலியின் வாய்க்குள் போகாமல் இருந்தால் சரி...
Tamilwin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment