Thursday, February 19, 2009

சோதனையும் வேதனையும்....

சோதனையும் வேதனையும்
சாதனைக்காகவே..!

இந்தநூல் உங்கள் கையில்
இடுகின்ற நேரம் மண்ணில்
சிந்திய குருதி கண்டேன்
சிங்களக் காடர் குண்டில்
கந்தலாய்ச் சடலம் கொட்டும்
காட்சியைக் கண்டேன், சிங்க
மந்திபோல் மகிந்தன் நின்று
மரணமாய் இறைத்தான் அம்மா!

நாளெலாம் குண்டு கொட்டி
நடுத்தெரு மக்கள் செத்து
சூளையாய் எரியக் கண்டு
செகமெலாம் கதறு தம்மா
ஊளைநாய் போல வாட்சி
இராசபக் சாக்கள் வந்து
கோளையாய்க் கொல்லு கின்ற
கொடும்கதை பெருகு தம்மா!

இளையவள் தமிழ்ப்பெண் ணாளை
இறைச்சியாய் ஆக்கிக் காமக்
குளத்திலே இட்டுக் கொன்று
குழிதோண்டிப் புதைக்கச் செய்து
அளைக்குகை அகதிக் கூண்டாய்
இராணுவ ஏவல் இட்டான்
முளையிலே கருப்பை தீய்க்க
முத்தமிழ் இனத்தைத் தீர்த்தான்!

இராணுவப் பூமி எங்கும்
இளைஞரைச் சுட்டான், மாற்றான்
புராணங்கள் பாடும் காக்கைப்
புல்லர்கள் அரசைச் சேர்ந்து
கிராணங்கள் போலச் சொந்தக்
கேள்நில இருட்டாய் வந்தார்
அராசகச் சேனை யாலே
அழிகுதே தமிழச் சாதி!

இந்திய நாடு கொண்ட
இழிவது தமிழன் சாக
தந்திரம் செய்த தாலே
தசையெலாம் சிதற மக்கள்
நொந்துமே கதறி வீழ்ந்தார்
சோனியா காந்தி அக்கா
கந்தகம் கொடுத்துச் சிங்கக்
காட்டருக் குதவி செய்தாள்!

அமைதியாம் படையாம் என்று
இந்திய ரசீவார் வந்தார்
மமதையாய் நிலத்துள் நின்று
மரணத்தை விதைத்தார், செத்துச்
சமைஞ்சது கற்புக் கூட்டம்
சகதியாய் இரத்தக் காட்டை
சுமையிட்டார் சென்றார், இன்றோ
சிங்களப் பேயாய் வந்தார்!

காலங்கள் மறக்கா தம்மா
கயவர்கள் நிலைக்க மாட்டார்
ஓலங்கள் நெடுநாள் இல்லை
ஓநாய்கள் மாய்வர், கொல்லச்
சாலங்கள் போடும் இந்தச்
சதிகாரர் வீழ்வர், சுற்றும்
ஞாலத்தில் தமிழன் நின்றே
நாடெலாம் எழுவான் காணீர்!

முத்துகுமார் எரிந்தான் ஈழ
முருகதாஸ் எரிந்தான் இன்னும்
சொத்தெனத் தமிழ மாந்தன்
செகமெலாம் எரிந்தான், இந்த
வித்தென நிற்கும் சாதி
வீழார்பார் நரியீர் கேளீர்
எத்தனை பேய்வந் தாலும்
எழுந்திடும் பீனிக்ஸ் சாதி!
-நம்நாடன்

No comments:

Post a Comment