என்நெருப்பு
என்நிலத்தின் துடிப்பு!
எரியும் உடலில் விரியும் நெருப்பு
இனத்தின் துயரது தோழா!
புரியும் மொழியில் புகன்றும் தெரியார்
பூமியின் கொடியரே தோழா!
சிதறும் சனத்தை பதறும் மழலை
தெரியா திருக்குதே உலகம்!
கதறும் தமிழர் கருகித் துடிக்கக்
காணா திருக்குதே மனிதம்!
அயினா மருங்கில் எரிந்தேன் அதுதான்
அன்னைமண் எரிந்திடும் நெருப்பு
குயில்கள் பாடும் குலத்தெழில் மண்ணை
கொடியவன் கொன்றிடும் பதைப்பு!
அறிவாய் மனிதா அகிலப் பொறியாய்
அலறும் தமிழரைப் பாராய்!
நெறியாய் உலகே நீயிருந்தா யெனின்
நிசத்;தை உலுப்பியே வாராய்!
ஆண்ட பரம்பரை அழித்தவன் நீயடா
ஆதலால் உன்னகம் நானெரிந்தேன்!
நீண்டது எம்வதை நீதியே நீசொலாய்
நெடுந்தீ வளர்த்துமே நான்மலர்ந்தேன்!
எழுதியவர்: நம்நாடன்
Subscribe to:
Post Comments (Atom)
நெல்லைத்தமிழின் திரட்டியில் இணைக்க
ReplyDeletenellaitamil