Sunday, February 8, 2009

கால்காசுக்கு உதவாத கருணாநிதி!

கால்காசுக்கு உதவாத கருணாநிதி!

விடுதலைக்குப் போராடுகின்ற ஒரு
இனத்தின் மொழி புனிதமானது..

அந்த இனத்தின் நாடு,பிரதேசம், பிரவாகம்,
அதன் பிரசவம் புனிதமானது..

அந்த மொழியின் பேனா நிரப்பியிருக்கும்
எழுத்தாணிகள் புனிதமானவை..

படைப்பாளிகள் புனிதமானவர்கள்..

தலைவர்கள், போராளிகள்..மக்கள்
புனிதமானவர்கள்..

போருக்கான பொருள், உண்டி, உடை,
கொடுத்தவர்கள் யாபேரும் புனிதமானவர்கள்..

எல்லோரும் புனிதமானவர்கள் என்றதினாலேதான்
யானும் புனிதமானவனாக..

ஆனாலும் கட்டபொம்மன் சரித்திரம்போல்
எல்லா சகாப்தமும் ஒரு எட்டப்பன் பிறக்கிறான்..

காக்கைக்குப்பின் கருணா என்ற
சரித்திரம் எழுதப்பட்டாயிற்று..

பொன்மனச்செம்மல் எம்ஜீயார் என
எல்லோரும் ஆகிவிட முடியுமா?

முக்குளித்தாலும் முத்தமிழில் எழுதினாலும்
கருணாநிதி என்ற காசுமனிதன்
இன்றுஒரு கால்வாசி மனிதனாக
நான் கணக்கிட்டுக் கொள்கின்றேன்..

ஆயிரம் கருணாநிதி அவதரித்தாலும்
ஒரு எம்ஜீயாரின் சுண்டுவிரல் ஆகிக்கொள்ள முடியாது..

ஈழத்தமிழனுக்குக் கிடைத்த ஒரு
வரலாற்றுப் பழி கருணாநிதி என்பது
இன்றைய-இதை எழுதுகின்ற
நாட்களின் பதிவுகள்..

இந்தியத்தின் காங்கிரசு ஆட்சியை
ஈழத்தின் தமிழர்களைக் கொன்ற,
சிங்களத்தின் மூலம் கொலையேவி நிற்கின்ற
சோனியா தலைமையிலான ஒரு
கேவலக் கூட்டமென இன்றைய
கோடுகளை நான்
சரித்திரமாக எழுதிவைக்க விரும்புகிறேன்..

சிங்கள ஆட்சியானது இன்றைய
மகிந்த தலைமையில் உருவாகிய
ஒரு மாமிச பிண்டம்..

இளம்வயதுத் பெண்களைக் கற்பழித்துக்
கொலைசெய்யக் கட்டளை பிறப்பித்திருக்கும்
ஒரு காட்டுமிராண்டிகள் கூட்டம்..

வெள்ளைக் கொடியுடன் இராணுவப் பகுதிக்குள் நுழைந்த
பல ஆயிரம் தமிழ்மக்கள் மீது,
வேவுவிமானம் மூலம், அவர்களைப் படம்பிடித்து,
அந்தப் படங்களின் நிலப்பகுதிகள் மீது
ஏவுகணை அடித்துக் கொன்ற செய்தி
இந்தப் பொழுதில் வந்திருக்கிறது..

இந்திரா காந்தியின் மார்புக் கவசம்
அணியாதவாறு ஏன்
சூடுபட்ட அன்று மட்டும் சென்றார்..?

யார்மேல் விசாரிக்க வேண்டுமோ? யாரை
விசாரிக்கச் சொன்னார்களோ அவருக்குப்
பதவி உயர்வு கொடுத்தார் ரசீவுகாந்தி!

ரசீவுகாந்தி இறந்தபோது எந்தக் காங்கிரசான்
உடன் இறந்தான்?

செயின் கமிசன் ஆணையைச்
சோனியா காந்தி பதிவிக்கு வந்தும்
எடுக்கவில்லையே ஏன்..?

அயினாவின் இரகசிய உறுப்பினர் சந்திப்பில்
மெக்சிக்கோ கொடுத்த சிறீலங்காவுக்கு எதிரான
புகாரை, இந்தியா ரசியாவைக்கொண்டு
வீட்டோ செய்திருப்பதானது என்ன?

தமிழனை இன்னும் கொல் என்று
சிங்களத்திற்குக் கொடுத்த
கட்டளை அல்லவா அது?

சிங்கள ஆட்சி தமிழின அழிப்பை
எடுத்திருக்கும் யுத்த இனம்..!

இந்தியா தமிழின அழிப்பு வருமென்று தெரிந்தும்
கச்சதீவைக் கொடுத்த கர்மவியாதி..

புலிகள் போய்விட்டார்கள் என
யாரும் நினைப்பதில் பயன்இல்லை..

அவர்கள் புனிதமானவர்கள்..

வட்டப் புள்ளியில் இருந்து
ஒரு உடைப்பு வரும்..

அந்த உடைப்பில்தான்
அக்கிரமக் காரர்களின் வீழ்ச்சி
கணக்கிடப்படும்..

தமிழீழத்தின் அரயணைத்
தாம்பாளம் அலங்கரிக்கப்படும்..

மானமுள்ள தமிழ் எழுத்தாளனே..
இந்தப் பதிவுகள் மரணிக்கப்படக் கூடாதவை.
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்
இதை எடுத்துச் செல்..

-சுந்தரபாண்டியன்
தமிழ்நாடு.

No comments:

Post a Comment