Monday, February 23, 2009

ஓ..கருணாநிதியே..!

ஓ..கருணாநிதியே..!

கருணா நிதியே கவிஞா கலைஞா
காலம் கொடுத்தது தீர்ப்பு-துரோகி
கருணா வுக்கும் கழிவென உனக்கும்
கணக்கது ஒன்றுதான் மதிப்பு!

பொன்மனச் செம்மல் தன்மனம் கொடுத்த
பூம்பொழில் அல்லவா ஈழம்-அந்த
இன்மனம் உனக்கு என்றுமிலை யப்பா
எங்கும்நீ சோரத்தின் கோலம்!

துண்டு துண்டாகச் சிதறிடும் பிஞ்சு
சோனியா அன்னையின் பரிசா?-அட
கண்டு கண்டுமே கந்தகம் அனுப்பக்
கருணா நிதிநீ உடன்பாடா?

ஆயிர மாயிரம் கோடிகள் வரித்த
அற்பமாய் அரசியல் ஆச்சு-உந்தன்
பாயிரம் எல்லமும் பற்றி எரிந்தவன்
பாடையில் துப்பலாய்ப் போச்சு!

ஈழம் எரிகையில் இந்திய வாந்திக்கு
இன்னுமா நீதரும் இருப்பு-அட
சூழ இருந்துநீ செலுத்தித் தமிழகம்
சொல்லுவ தெல்லமும் பழிப்பு!
-நம்நாடன்
(யாரும் எவரும் எங்கும் பதியலாம்-நம்நாடன்)

No comments:

Post a Comment