ஒரு கனடிய இரவில்..
எங்கள் இளைஞர்கள் கையில்..
(சீயெம்மார் வானொலியில்
உரைத்த கவிதை இது)
பொருக்கென வெடிக்கப் பொசுங்கிட வைக்கும்
பெருங்குளிர் இடித்திடும் போதில்
உருக்கிடா திருக்கும் உறைபனிக் காற்று
உடுக்கடித் திருக்குமாம் இரவில்
குருத்துகள் எங்கள் குலத்தமிழ் இளையீர்
கூட்டமாய் நிற்பதைப் பார்த்தேன்
ஒருத்தரும் இல்லை ஓரினம் இல்லை
உங்களுக் கிணையெவர் உண்டோ?
திக்கெலாம் கூடித் செந்தமிழ் உறவார்
திரண்டனர் இலட்சமாய் என்றால்
கக்கிடும் விறைப்பில் கனடியத் திரவில்
கையிலே பிரசுரம் கொடுத்தீர்
எக்களத் தாட்சி இந்தியம் வந்துமென்
எழுகரம் எம்மதே என்றீர்
இக்கரை இளைஞீர் இரும்தமிழ் உறவீர்
இறைபணி இவற்குமேல் இல்லை!
இரும்பென இருந்த ஊடகம் உடைத்தீர்
இந்தமண் பரப்பிலே இடித்தீர்
முருக்கிலே ஏறி இந்தியம் வந்த
மோகமண் இழப்பினை யுரைத்தீர்
பருக்கையில் மகிழும் பாவியர் இருக்கப்
பாசமண் பிள்ளையாய் ஆனீர்
கருப்பிறை சுமக்கும் கண்மணித் தமிழீர்
காலமெல் லாமெலாம் வாழ்வீர்!
-புதியபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment