Friday, February 20, 2009

வெடித்தெழடா!

ஆபத்தில் மீட்க வெடித்தெழடா!

எழுவாய் எழுவாய் எழுவாய் மண்ணில்
இடிக்கும் துயரம் பார்தோழா!
கழிவாய்ப் படைஞன் கற்பழிக் கின்ற
கனித்தமிழ்க் குலத்தைப் பார்தோழா!

கோத்தன் மதத்துக் கூறிய வார்த்தை
குலத்தமிழ் அழிக்கும் கொடுமையடா
பாத்திருந் தாலெங்கள் பண்தமிழ்ப் பூமி
பாடையில் உடலாய் எடுக்குமடா!

இந்து சமுத்திரம் எங்கும் தமிழனின்
இரத்தத்தால் நிரப்ப ஆணையிட்டான்!
இந்தக் கொடியவன் எங்களின் பெண்ணை
இராணுவம் பார்க்கட்டும் என்றுரைத்தான்!

எத்தனை நாள்வரை இனித்தமிழ்ப் பூமி
இருக்கும் எழியவர் கொடுமையடா!
சொத்து சுகமெலாம் இழந்தோம் ஆயினும்
சுதந்திரம் இழப்ப இருப்பதொடா!

பெற்றவள் அன்னை பெண்தமிழ் மங்கை
போற்றிய இனமே துடித்தெழடா!
அற்பப் பக்சர்கள் அழிக்கும் தமிழரை
ஆபத்தில் மீட்க வெடித்தெழடா!

இந்திரா வாலர்கள் எங்களின் பூமியை
இடுகா டாக்க இசைந்துவிட்டார்!
தந்திர மகிந்தன் தமிழரை அழிக்கத்
தங்களின் ஆயுதம் பிசைந்துவிட்டார்!

ஞாலத் தமிழா எழும்பு அதனால்
இந்த உலகம் அதிரட்டும்!
சூல வைரவன் சேர்த்த கரங்கள்
சுதந்திரம் வரைந்து முழங்கட்டும்!

-நம்நாடன் கவிதைகள்

No comments:

Post a Comment