Saturday, September 26, 2009

திலீபா..



(திலீபன் நினைவுநாள் சிந்தனை)

நேற்று உன் நினைவோடு மீண்டும்
கருக்கள் கட்டின..

அந்த
ஆற்றின் முளையோரம் உன் ஆவி
அசைந்து கொண்டது..

பார்த்துத்தான் கதைத்தேன்.. நீசேர்த்த
ஊர்த்திவலை எல்லாம் உவங்கள்தான்..

படலைக்குப் படலை எல்லாம்
சுடலை ஆச்சுதடா..!

இராசபக்சா இந்த நூற்றாண்டின்
இராட்சதன் ஆகினான்..

மானம் ஒருகையில்
மகிழ்ச்சி மறுகையில்
தானம் கொடுத்த தமிழ்வாழ்வு..
ஈனரின் கையில்
இறைச்சி ஆனதடா..!

சத்திய வேட்கைக் குஞ்சுகள் எல்லாம்
சருகாய் எரிந்தன..

விடலைத் தமிழிச்சிக் குடலை எடுத்தான்
கோத்தபாயா..

வெள்ளைக் கொடியொன்றும்
விசரனுக்குத் தெரியவில்லை..

முள்ளிவாய்க் காலெல்லாம்
முழுமணலும் எரிந்ததடா..!

முட்கிடங்குக் குள்ளே ..
மூன்று இலட்சம் மக்கள்...

மழைநீரும் மலமும்..
மகிந்தா கொடுத்தான் காண்..!

நீ எரிந்த பின்னாலும்
இந்திநிலம் விடவில்லை..

சோனியளாய் வந்தீழக்
கூனியளாய் ஆனதினால்
பேத்தை மகிந்தனுக்கு
ஊத்தை மலிந்ததுபார்..!

சாத்திடலாய் நாளெல்லாம்
சவக்கிடங்கு போடுதடா..!

உன்னை நினைந்து
கங்கை விழியருவிக்
கண்ணை உடைத்தோராய்ச்
சென்னி எல்லாம்
சிறந்தோக்கக் கண்டேன் யான்..!

மூசு பனிக்குள்ளும்
காசு சேர்த்தவர்கள்
பேசும் தலைவனுக்குப்
பின்புலமாய் நின்றார்கள்..

இன்றும் அப்படித்தான்..
இளைஞன் கையில்
எங்கள் இனம் இருக்குதடா..

சுட்டுவிரலில்; சூரியன்கீழ்
இருந்தோம் நாம்..

இன்று..
கட்டுக் குலைந்த
காட்சியும் தெரிகிறது..

வன்னி செயல்கொடுத்த
வாய்க்காலில் மீன்பிடித்து
தன்னை வளர்த்தவர்கள்-
தலைவன் விசாரணைக்குள்
அலைக்கப் பறந்தவரும்
இன்று வருகின்றார்..

விசாரணைகள் பின்னாலே
விலத்திப் போனவரும்
உலவி வருகின்றார்..

கேபி கொடுத்தவரம்
கேளென்று ஒவ்வொருத்தர்
சூப்பி பிடித்துச் செருக வருகின்றார்..

குளிர்தெரியாக் கனவான்கள்
பலர் வந்து போகின்றார்..

இயக்கம் எனநுழைந்து
பலஇலட்சம் பார்த்தவரும்
மயக்கம் தெளிந்து
மறுபடியும் வருகின்றார்..

கடைவைத்த காசைக்
கணக்கெடுத்த பின்னாலும்
குடைவைத்துக் கொண்டு
கோமான்கள் வருகின்றார்..

என்றாலும் நாங்கள்
இயக்கத்தைப் பார்த்தவர்கள்..

இயக்கம் வளர்த்த
வணிகப் புரவலர்கள்
செயலிற்றான் இன்னும்
செந்தமிழன் இருக்கின்றான்..

குளிருக்கும் பனிக்கும்
குலைநடுக்கத் துள்ளேயும்..
வளர்த்த இயக்கத்தை
வந்தவழி விடமாட்டோம்..

உண்ணா விரதம் இருக்கின்றார்
இளைஞரெலாம்..

உன்னை நினைந்து
கண்ணில் நீர்பெருக்கி
நீ வளர்த்த மண்ணை
நினைந்து தவமுருகி
நிலத்தில் பிறவாமல்
புலத்தில் பிறந்தவர்கள்..
குலமாய் மலர்ந்து
கூடாரமாய் நின்றார்..

மறுபக்கம்...
பகைவர்கள் எல்லாம்
பதாகையொடு வருகின்றார்..

விட்டில்கள் போலே
விழுந்த நிலத்தின்மேல்
கட்டில்கள் போடக்
கனபேர் வருகின்றார்..

சுட்டுவிரலில் சூரியன்கை நின்று
கட்டுப்பட்ட காலம்போய்..
கனக்கக் கதைக்கின்றார்..

மேதையென்றும் பட்டம் என்றும்
மேல்விலாசம் காட்டுதற்கு
வேலுப்பிள்ளை மைந்தனுக்கு
வில்லங்கம் போடுகின்றார்..

நாங்கள் இருந்தநிலம்
நாங்கள் எரிந்தநிலம்..
தாங்கி இருப்பெடுக்கத்
தப்பர்கள் தேவையில்லை..

இயக்கம் அதுவின்னும்
இருக்கிறது..
தலைவன் ஒருநாள்
தலைசிலிர்த்து வருவான் பார்..!

என்றாலும் எங்களுக்குள்
இருப்பெடுக்க வருகின்ற
ஒன்றும் வேண்டாம்..

நீ கனவிற் சொல்லிவை..

'தென்னைபனை தெரியாமல்..
திருத்தலைவன் பாராமல்..
இன்னும் பிறக்கின்ற
எங்கள் பரம்பரைகள்
வேரூன்றி விதைக்கின்ற
வேள்விகளைச் சிதையாதீர்..'

என்றே பகர்வாய்..
இருந்தவிடம் தோண்டிப்
பிரிந்தவர்கள் எல்லோரும்
மறந்தும் வரவேண்டாம்..

உருத்திர குமாரனும்..
உலகத் தமிழினமும்
ஒன்றுபட்டாலே
இருக்கிறது வெற்றியென்பேன்..

சென்றுவா.. திலீபா..
செகமெல்லாம் ஒன்றாக..
உன்நினைவு கொண்டு
உருக்கொடுக்கச் செய்துவிடு..

உயிர் உருக்கும் விரதத்தை
ஊருலகம் படைத்தவனே..
பயிர் விளைக்கும் விடியலிலே
பாதை வகுத்துவிடு..
-புதியபாரதி

Friday, September 25, 2009

ஈரமண்ணின் இதயச் சிறகுகள்!



(கலிவெண்பா)

கதவம் திறக்கமுன் கார்மண்ணில் எங்கள்
பதறும் நிலைகாட்டும் பார்வை இதுபாரீர்!
மாற்றான் வலிக்காடு வந்துற்ற வேளையிலும்
கூற்றாய் அவன்விரித்த கொட்டும் விசக்கோடு
ஊற்றுநிலம் மீதேறி ஊறணிகள் தேன்சுவடுக்
காற்றுத் திசையெங்கும் காமாறி யாய்வந்தும்,
போற்றும் தலைவன் புறமுதுகு காட்டாமல்
நேற்று அவன்வாயில் நின்றென்ன சொன்னானோ
கீற்றும் பிசகானாய்க் கேளங்கே நின்றான்காண்!
மக்களுக் கென்ன வாதையோ தான்பெற்ற
மக்களுக்கும் என்றே மறப்போரைக் கண்டானே!
வீராதி வீரன் விடிவுப் பெருவெள்ளி
போராடும் தீரன், பிரியமகன் சாள்ஸ்சைத்தன்
நேரோடு போர்க்களத்தில் நெஞ்சுரத்தைக் கண்டானே!
சீரோடு போர்த்தமகள் துர்க்காப் பசுங்கிளியைப்
போராடு என்றே புலிமகளாய் ஆக்கியவன்!
மக்கள் உடைத்தான வாதையிலே தான்மட்டும்
திக்கில் பறக்கத் திருத்தலைவன் எண்ணாணாய்
முள்ளிவாய்க் காலென்றும் முல்லை நகரென்றும்
பிள்ளைப் பிரபா பிரிய நிலப்போரில்
வெந்து மணற்காடு வீறிட்டுத் தீயாகும்
நந்திக் கடலெங்கும் நாயகனாய் நின்றான்காண்!
பல்லாயி ரத்தோராய்ப் பாடம் எடுத்துவந்த
சொல்லாரும் வல்புலிகள் தேசார் தளபதிகள்
எல்லோரும் நின்றே ஏறுபோர் கண்டானே!
கல்லு வெடிப்பதுபோல் காடுறையும் வாய்க்காலும்
இந்தியம் வந்து இனவழிப்புக் கூற்றுவனைச்
சொந்தம் எனத்தழுவிச் சேரீழம் நின்றதினால்
நச்சு வெடிப்புகைகள் நாச விசக்குண்டுக்
கச்சைகள் சேர்த்துக் கயவனொடு கூடியதால்
வேழாதி வேழம் விறல்மறவர் போராடும்
ஈழம் எனவொருத்தர் இல்லை எனச்செருகக்
கூழாய் எடுத்துவந்த கூத்தாடி இந்தியத்துள்
பாழாகி என்தமிழர் பல்லாயி ரம்செத்தார்!
தேசப் பிரபா செருக்களத்தில் ஆடுகளம்
வீசி எறிந்தானா? வெங்களத்தில் ஊடறுத்துக்
கால மணிச்சுவடு கண்டறியப் பார்த்தானாய்க்
கோல முகவடிவன் கொண்டுகளம் வருவானா?
ஏதும் அறியாராய் இன்றுலகக் காண்தமிழன்
வாதும் வருத்தமுமாய் வண்ணமுகம் தேடுகிறார்!
சூதின் அரசாங்கம் சொல்லரிய துன்பத்தைப்
பேதியாய் ஊற்றும் பெருங்கொடுமை தன்னில்
அறுபதுகள் தொட்டு இனவழிப்புச் செய்யும்
உறுவதைகள் எல்லாமும் இன்னும் நெடுக்கிறதே!
முட்கம்பிக் குள்ளே முழுநீர் மலங்களுமாய்
உட்கிடத்தி எங்கள் இனத்தை அழிக்கின்றான்!
புதுவை, கரிகாலன், பாலகுமார், யோகி
நதிபோல வாய்த்த நறுந்தமிழர் காவியத்தை
கொல்லும் விசத்தரசு கொன்று புதைகுழியைக்
கெல்லி எடுத்ததடம் இன்றிணையம் தந்ததம்மா!
போர்வேண்டாம் எங்கள் பிடிமண்ணில் மக்களெலாம்
சீர்செய்ய வேண்டும்மெனச் செய்த குமரனெனும்
பத்மநாதன் தன்னை பழியாய்க் கடத்திவிட்டார்!
செத்தவினம் மீண்டும் செரித்துச் சரிந்ததடா!
கல்வித் தமிழ்மாந்தர், காட்டும் இளங்குருத்தர்
வல்லோர் கணினியிலே வாய்பாடு கொண்டவர்கள்
எல்லோர்க்கும் இந்த இராசபக்ச கூற்றுவனாய்க்
கொல்லும் சிறுமைக் கொடியவனாய்க் கண்ணுற்றோம்!
இத்தனைக்கும் மேற்துன்பம் ஏதும் இருக்கிறதா?
நத்துக் கரையும் நடுமிரவாய் ஆய்ச்சுதடா!
அறுபது ஆண்டுகளாய் ஆய்க்கினையும் கொல்லும்
உறுவதையும் ஆக உரிஞ்சு விழுகிறதே!
முந்தைப் புராணமதை மொய்த்த அரக்கர்போல்
இந்தப் புராண இராசபக்சா வந்தான்காண்!
அய்ம்பதி னாயிரம் ஆர்தமிழர் சாகவென
வெய்ம்குண்டு போட்டு விழுத்தியவன் கோத்தனெனும்
தம்பி இரசாபக்கா, தக்கரினப் பொன்சேகா
கும்பரெலாம் அந்தக் குலமே, அரக்கரென
அன்றைக்குச் சொன்ன அடுக்கில் முளைத்தவரே!
இற்றை அரக்கம் இராசபக்சா கொல்குடும்பப்
புற்றை எழுதிடுவாய் பேய்இந்தி யர்நாடு
சோனியளே வந்து செகத்தீழம் தானழிக்க
கூனியளாய் நின்றாள்பார்! இத்தாலி யூர்ப்பாளின்
சாதிக்கு எங்கள் சரித்திரங்கள் தேராதே!
மோதி அழித்துவிட்டு மேடாக்கிப் போனாரே!
ஈழப்போர் மண்ணில் இடர்பெற்ற தாயின்எம்
ஆழமன தெங்கள் அறம்தர்மம் வீழாதே!
சாகாத தேசச் சரித்திரத்தின் சூரியனாம்
பாகாக நிற்பான், பரிதவிக்கும் எம்மினத்தின்
தேசாக நிற்பான், திருத்தமிழர் பட்டமரம்
ஆகாரே என்பதினால் அண்ணன் கரிகாலன்
வேகாத தெய்வன் வீற்றிருந்து, பாருலகில்
போரும் மணிநிலமும் போற்றிவைத்த ஆட்சியாய்
யாரும்கா ணாதவொரு யாப்பைஉரு வாக்கியவன்!
சேரும் திருவினையும் சேர்த்தெழுதும் வெண்பாக்கள்
காரும், விசும்பினொடு, கார்வளியும் காத்திருக்கும்!
எட்டப்பம் வந்து இனத்தை அழித்தகதை
கெட்டப்பர் கொட்டம், கொடியர் அந்நியனுள்
வட்டம்பம் சுட்ட வரலாறும் இன்றிருக்கும்
அட்டியிலே அந்நியரின் ஆட்சியிலே வீற்றிருக்கும்
சொந்த இனமெரித்த செல்லருக்கும் உண்டேயாம்!
இந்த வரலாறும் எம்மினத்தின் சாவினிலே
நொந்த வரலாற்றின் நெடும்பக்கம் தானறிவீர்!
இந்த வகையாக ஈற்றில் தமிழ்மண்ணை
சந்தியிலே வைத்துச் சவக்கிடங்கு ஆக்கியவன்
எந்த உலகத்தும் இல்லாத காரணத்தால்
இந்தப் பொழுது இவரே அரக்கரடா!
மானமொரு கையில் மறுகையில் தன்முயற்சி
ஆன இனச்சிறகை அகிலத்தின் கண்முன்னே
ஈனப் பிறவி இராசபக்ச அழித்தான்காண்!
அய்நாவின் பான்கிமூன் அச்சச்சோ என்றுசென்று
பொய்முகத்தைக் காட்டிப் புழுதியிலே நீர்வார்த்து
மூன்று இலட்சம் முகாமில் இறந்தோரைப்
போன்று இருந்தோரைப் பேன்பார்த்து விட்டதுபோல்
பத்து நிமிடத்தில் பான்கி திரும்பினர்காண்!
செத்த உலகத்தைச் சீருலகம் என்றார்காண்!
வெள்ளைக் கொடியோடு வெளியே புகுந்தவரை
தள்ளிச் சவக்கிடங்காய்ச் சரித்தவரைக் கூட்டாக
அய்நாவும் பொய்நாவும் அச்சுவெல்லம் என்கின்ற
செய்வினைகள் தன்னாலே செத்ததுபார் மானுடங்கள்!
அகிம்சை தொடங்கி அறுபதாண் டீறாக
மகிந்தக் குகைவரைக்கும் வாதையிலே மாய்ந்தோம்நாம்!
காலப் பெரும்புதரில் கட்டவிழ்ந்தோம், பல்நாடு
மூலம் வெடித்துவிழ மூச்சாகி வந்ததினால்
தர்மப் பெரும்போர்த் தமிழரே சாவடைந்தார்!
வர்மப் பகைவன் வடித்தழித்தான் இற்றைக்கும்
இந்தியமும் எங்கள் இனம்கொடுத்த எட்டப்பர்
பந்தியிலே சிங்கப் பகைவன்கால் நக்கியதால்
நாடாகக் கோடிட்ட நம்மீழச் சக்கரங்கள்
கூடாக வீழ்ந்த குலப்பரணி ஆனாலும்
ஞாலக் கருவிளக்கும் நற்பணியும் மாஞ்சிறகின்
ஈழக்கதை ஆர்த்து எழும்முரசு கேட்குதடா!
நாடு கடந்து நலத்தமிழர் நல்லரசைக்
கூடும் வகையாகக் கோடிட்ட போதுவரை
மேன்மைப் புலிவெண்பா மேவி வருகுதுபார்!
கோன்மை மனிதவளம் கொண்ட நிலச்சிறகை
ஏழுலகும் வாழ்தமிழர் ஏற்றுப் புதுயுகத்தைச்
சூழும் அரசமைப்பார் சொல்!


(புலிவெண்பா முன்னுரை)

Friday, August 28, 2009

சாகவோ இன்னும்..இன்னும்!




இந்தநூற் றாண்டின் கெட்ட
இராட்சதன் இவனே என்க
வந்திடும் செய்தி காட்டும்
வடிவத்தைப் பார்த்தோம்! அந்தோ
கந்தகத் தீயில் ஈழக்
கனிநிலம் எரித்த பின்னும்
குந்தகன் நின்றா னில்லைக்
கொடியவன் அரக்கம் பாரீர்!

வெற்றுடல் ஆக்கிக் காலால்
வீழ்த்திய பின்னாற் சுட்டுப்
புற்றிலே சடலம் போடும்
புல்லரைப் பாரும் அம்மா!
கற்றிலா மூடர் அற்பக்
கயவரை நம்பிப் பாம்புப்
பற்றையான் கூட்டுக் குள்ளே
பாய்ந்ததாய் முடிந்து போச்சே!

நரகாசு ரன்கள் என்க
நர்த்தனம் போடும் ஆட்சிப்
பரதேசிக் கயவர் எம்மைப்
பாகுபா டின்றி வைத்த
வரலாறு என்றும் உண்டா?
வடிவமே கொலையும் கொள்ளைக்
கரமேதான் உடையார் இந்தக்
காலமும் அழித்தே விட்டார்!

பாணந்து றையி லன்றப்
பார்ப்பன ஐயர் கொன்றார்
நாணமே யில்லா ரிந்த
நாள்வரை தொடரு கின்றார்
மாணறி வுள்ளார் சில்லோர்
மதியுரை பகர்ந்தும் என்ன?
பேணறி வில்லார் ஆட்சிப்
பேயரே வெறியாய் நின்றார்!

இந்திய நாடு செய்த
இழிசெயல் தன்னிற் றானே
வெந்துசாம் புகையாய்ப் போக
வீழ்ந்தது தமிழன் பூமி!
குந்தகம் செய்தார் இந்திக்
கொடியர்காங் கிரசுக் கும்பல்
சிந்தையில் இல்லார் சிங்கச்
சேனைக்குள் நுழைந்து வந்தார்!

கன்னியர் தாமும் வல்ல
கனித்தமிழ் இளையோர் பிஞ்சுச்
சின்னரும் பாலர் மூத்தோர்
சீரிய அறிஞர் எல்லாம்
பின்னிய வரக்க னாலே
போயினர் சடல மாகச்
சென்னியை உசுப்பா விட்டால்
சாகுமெம் சாதி தானே!
-புதியபாரதி

Saturday, August 15, 2009

கதவம் திறக்கமுன்...

கதவம் திறக்கமுன்...
(புலிவெண்பா மனமும்-கனமும்)


கதவம் திறக்குமுன் கண்மணிகாள் எங்கள்
பதறும் நிலைகண்டும் பாடல் திறக்கின்றேன்!
மாற்றான் வரித்தநிலை வந்துற்ற வேளையிலும்
கூற்றாய் அவன்விரித்த கொட்டும் விசக்கோடு
ஊற்றுநிலம் மீதேறி ஊறணிகள் தேன்சுவடுக்
காற்றுத் திசையெங்கும் காடேறி யாய்வந்தும்,
போற்றும் தலைவன் புறமுதுகு காட்டாமல்
நேற்று அவன்வாயில் நின்றென்ன சொன்னானோ
கீற்றும் பிசகானாய்க் கேளங்கே நின்றான்காண்!
மக்களுக் கென்ன வாதையோ தான்பெற்ற
மக்களுக்கும் என்றே மறப்போரைக் கண்டானே!
வீராதி வீரன் விடிவுப் பெருவெள்ளி
போராடும் தீரன், பிரியமகன் சாள்ஸ்சைத்தன்
நேரோடு போர்க்களத்தில் நெஞ்சுரத்தைக் கண்டும்தன்
சீரோடு போர்த்தமகள் துர்க்காப் பசுங்கிளியைப்
போராடு என்றே புலிமகளாய் ஆக்கியவன்
மக்கள் உடைத்தான வாதையிலே தான்மட்டும்
திக்கில் பறக்கத் திருத்தலைவன் எண்ணாணாய்
முள்ளிவாய்க் காலென்றும் முல்லை நகரென்றும்
பிள்ளைப் பிரபா பிரிய நிலப்போரில்
வெந்து மணற்காடு வீறிட்டுத் தீயாகும்
நந்திக் கடலெங்கும் நாயகனாய் நின்றான்காண்!
பல்லாயி ரத்தோராய்ப் பாடம் எடுத்துவந்த
சொல்லாரும் வல்புலிகள் தேசார் தளபதிகள்
எல்லோரும் நின்றே ஏறுபோர் கண்டானே!
கல்லு வெடிப்பதுபோல் காடுறையும் வாய்க்காலும்
இந்தியம் வந்து இனவழிப்புக் கூற்றுவனைத்
சொந்தம் எனத்தழுவிச் சேரீழம் நின்றதினால்
நச்சு வெடிப்புகைகள் நாச விசக்குண்டுக்
கச்சைக்குள் வைத்துக் கயவனொடு நின்றார்காண்!
வேழாதி வேழம் விறல்மறவர் போராடும்
ஈழம் எனவொருத்தர் இல்லாமல் செய்வதற்காய்
கூழாய் மலிந்ததொரு இந்தியத்தின் கூடாத
பாழாகி என்தமிழர் பல்லாயி ரம்செத்தார்!
தேசப் பிரபா செருக்களத்தில் ஆடுகளம்
வீசி எறிந்தானா? வெங்களத்தில் ஊடறுத்துக்
கால மணிச்சுவடு கண்டறியப் பார்த்தானாய்
கோல முகவடிவன் கொண்டுகளம் வருவானா?
ஏதும் அறியாராய் இன்றுலகம் காண்தமிழன்
வாதும் வருத்தமுமாய் வண்ணமுகம் தேடுகிறார்!
சூதின் அரசாங்கம் சொல்லரிய துன்பத்தைப்
பேதியாய் ஊதும் பெருங்கொடுமை தன்னில்
அறுபதுகள் தொட்டு இனவழிப்புப் காட்டும்
உறுவதைகள் எல்லாமும் இன்னும் நெடுக்கிறதே!
முட்கம்பிக் குள்ளே மழையும் மலங்களுமாய்
உட்கிடத்தி எங்கள் இனத்தை அழிக்கின்றான்!
புதுவை, கரிகாலன், பாலகுமார், யோகி
நதிபோல வாய்த்த நறுந்தமிழர் காவியத்தை
கொல்லும் விசத்தரசு கொன்று புதைகுழியைக்
கெல்லி எடுத்ததடம் இன்றிணையம் தந்ததம்மா!
போர்வேண்டாம் எங்கள் பிடிமண்ணில் மக்களெலாம்
சீர்செய்ய வேண்டும்மெனச் செய்த குமரனெனும்
பத்மநாதன் தன்னை பழியாய்க் கடத்திவிட்டார்
இத்தனைக்கும் மேற்துன்பம் எங்கும் இருக்கிறதா?
அறுபது ஆண்டுகளாய் ஆய்க்கினையும் கொல்லும்
உறுவதைகள் இப்போதும் ஊத்தையாய் வீழ்கிறதே!
முந்தைப் புராணங்கள் மொய்த்த அரக்கர்போல்
இந்தப் புராணத்தும் ராசபக்சா வந்தான்காண்!
அய்ம்பதி னாயிரமாய் ஆருயிர்த் தேசத்தில்
வெய்ம்குண்டு போட்டு விழுத்தியவன் கோத்தனெனும்
தம்பி இரசாபக்கா, தக்கரினப் பொன்சேகா
கும்பரெலாம் அந்தக் குலமே, அரக்கரென
அன்றைக்குச் சொன்ன அடுக்கெல்லாம் கொன்றொழிக்கும்
இன்றை அரக்கம் இராசபக்சா கொல்குடும்பம்
என்றே எழுதிடுவாய் இந்தியத்துப் பேய்க்குடும்பம்
சோனியளே வந்து சுகத்தீழம் தானழிக்க
கூனியளாய் வந்தாள்காண்! இத்தாலி யூர்ப்பாளின்
சாதிக்கு எங்கள் சரித்திரங்கள் தேராதே!
மோதி அழித்தவர்கள் மேடாக்கிப் போனாரே!
ஈழப்போர் ஒன்று இடர்கண்ட காரணத்தால்
ஆழமன தெங்கள் அறம்தர்மம் வீழாதே!
சாகாத தேசச் சரித்திரத்தின் சூரியனாம்
பாகாக நிற்பான், பரிதவிக்கும் எம்மினத்தின்
தேசாக நிற்பான், திருத்தமிழர் பட்டமரம்
ஆகாரே என்பதினால் அண்ணன் கரிகாலன்
வேகாத தெய்வன் வீற்றிருப்பான், என்றே
போரும் மணிநிலமும் போற்றிவைத்த ஆட்சியாய்
யாரும்கா ணாதவொரு யாப்பைஉரு வாக்கியவன்!
சேரும் புகழும் செறித்தெழுதும் வெண்பாக்கள்
காரும், விசும்பினொடு, கார்வளியும் காத்திருக்கும்!
எட்டப்பம் வந்து இனத்தை அழித்தகதை
கெட்டப்பர் கொட்டம், கொடியர் அந்நியனுள்
வட்டம்பம் சுட்ட வரலாறும் இன்றிருக்கும்
அட்டியிலே அந்நியரின் ஆட்சியிலே வீற்றிருக்கும்
இந்த வரலாறும் எம்மினத்தின் சாவினிலே
நொந்த வரலாற்றின் நெடும்பக்கம் தானறிவீர்!
சொந்த இனமெரித்த செல்லருக்கும் உண்டேயாம்!
காலப் பெரும்புதரில் கட்டவிழ்த்துப் போகாமல்
ஞாலம் படைக்கவந்த நல்வெண்பா ஈதறிவீர்!
(புலிவெண்பா முன்னுரை)
-புதியபாரதி

Saturday, August 8, 2009

இந்தநாட்கள்...


இந்தநாட்கள்...

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கா
எனவும் இன்னும் இருபது நாடுகளும்
தொடுத்த தமிழின அழிப்பால்,
ஐம்பதினாயிரம் முதல் ஒரு இலட்சம்
வரையான ஈழத் தமிழ்
மக்களைக் காவு கொண்டபின்,
மூன்று இலட்சம் தமிழர்களை
முட்கம்பிக்கு உள்ளே
அடைக்கப்பட்டிருக்கும் இன்றைய நாளில்..
இன்னொரு அவலம்
நடந்தேறியிருக்கிறது..

நாட்டுக்கு வெளியேயான தமிழீழ அரசொன்றை
அமைப்பதற்காக நடவடிக்கை ஒன்றை
எடுப்பதற்கான ஒழுக்காற்று வரைமுறைகளை
மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நாளில்,
அதன் பொறுப்பாளராகச்
செயற்பட்ட-கே.பி என அழைக்கப்படுபடும்
செல்வராசா பத்மநாதன் அவர்கள்
சிறீலங்கா அரசால் கடத்தப்பட்டிருக்கின்ற
சமநேரத்தில் இந்தப் பக்கம் உங்கள்முன்
வருகிறது.

மலேசியாவில் இருந்தே கடத்தப்பட்டார் என்ற
செய்தியே இதுவரைக்கும் சரியாக இருக்கிறது..

நூறுவரையான புலிகள் அமைப்பின்
நுண்ணறிவாளர்கள் முதல், போராளித்
தலைவர்கள்வரையில் கொன்றொழிக்கப்பட்ட
செய்திகள் இணையத்தளங்களில் வந்து
ஓரிரு கிழமைகள் ஆனபின்
இந்தச் செய்தி இப்போது..

உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்
வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும்
நடத்தப்படுகின்ற நாள் இது..

ஆகமொத்தம் தமிழனின் வாழ்வோடு
விளையாடுகின்ற சகல விடயங்களும்
சகட்டு மேனியாய் சந்திக்கின்ற நேரம்..

தமிழன் வாழும் கிழக்கு மாகாணத்தின்
அரைவாசிக்கு மேற்பட்ட காணிகள்
அரசாங்கத்திற்குத்தான் சொந்தம் என
பாராளுமன்றத்தில் ஒரு அறிவிப்பு வருகிறது..

வடமாகாணத்தின் எண்பத்தியேழு சதவீதமான
பூமியும் அரசாங்கத்திற்குச் சொந்தமெனவும்
அதே அறிவிப்பு வருகிறது..

இந்த அறிவிப்புகள் வருகின்ற சபையிலே
அரசாங்கத்தின் சார்பாக இருக்கும்
கருணா என்ற முரளீதரனும்..
டக்ளஸ் என்ற வடக்கின் வசந்தமும்
சிறீலங்காச் சுதந்திரக்கட்சியின்
சிங்கவால்களாகச் சுருட்டி அள்ள
வந்திருக்கும் சமநேரம்...

குட்டியைத் தாய் யானையிடம் இருந்து பிரித்தால்,
சட்டம் மிருகவதை என்று வருகின்ற நாட்டில்
மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளுக்கு இடையில்
அடக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற
மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்
மனோ கணேசன் கூறியதும் கூடத்
துடித்து வந்ததும் நேற்றுத்தான்..

சராசரியாக இந்த மனிதத்துவக்
குரலின் கடைசி எழுத்துக்களாகக் கூட
வாய்திறக்காத டக்ளசும் கருணாவும்
இராசபக்சா மடியில்...இருந்தபடி
இனத்தை அழிகும் இராட்சதருக்கு
இனத்தை விற்கும் தமிழர்களாக..
இருந்தபடி எத்தனை காட்சிகள்..

முற்றிலுமாகத் தமிழனைத் தமிழன்
காட்டிக் கொடுத்த வரலாற்றினைச்
சுமந்தபடி வடக்கின் வசந்தம் என்ற
டக்ளஸ் தேவானந்தாவும்,
கிழக்கின் உதயம் என்ற
காட்டிக் கொடுத்த கர்மவியாதி என்ற
பட்டத்தைக் கழுத்தில் சுமக்கும்
கருணா என்ற முரளீதரனும்,
சிறீலங்காச் சுதந்திரக்கட்சியில்
தேர்தல் களத்தில்
ஊருக்குள் வந்துவிட்ட 'உறுமயா'க்கள்..

தேர்தலுக்காக யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும்
காசும், அடக்குமுறையுமாக
வீசுகின்ற தேர்தலில்
எத்தனை அடாவடிகள்..

தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவர் தன்கணவன் என
முரளீதரனின் மனைவி பேட்டிகொடுத்தவைகள்
இன்னமும் காற்றில் இருந்து
கரைந்துவிடவில்லை..

இன்னும் ஒருமாதம் வரையில் கருணா திருந்தாதவரையில்
என்னால் பொறுக்க முடியாது என்ற அவரது மனைவியும்,
மூன்று குழந்தைகளும் மேற்குலகு ஒன்றில்
வாழ்ந்தபடி..கருணா என்ற இந்தக் கர்ம விசத்தின்
கொழும்புக் காட்சிகளைப் பார்த்தபடி இருக்கும்
நாட்களும் இதுதான்..

அய்க்கிய நாடுகளின் அமைப்பு வைத்திருக்கும்
மனித சாசனத்தின் மீதான சத்தியத்தின்
மறுபக்கமாகப் புத்த சாசனத்தைத் திருத்தியிருக்கும்
இராட்சதர் இராசபக்சவின் கைகளில்
இன்னமும் தமிழினம் அழிகிறது..

வெள்ளைக் கொடியுடன் சென்றவர்களைச்
சுட்டு வீழ்த்தினார்கள்..

அடைக்கலம் என்று வந்தவர்களை
படைக்கலம் போட்டுப் பிடித்து அழித்தார்கள்..

வீரமும் அறிவும் பெற்ற தமிழ்ச்சாதியை
ஊறணி இன்றி அழிப்பதே இந்தியம் எடுத்த
இன்றைய மந்திரம்..

இந்துக் கோவில்களின் அடித்தளமே இல்லாமல்
எத்தனையோ கோவில்கள்
அழிக்கப்பட்டாயிற்று..

இராமர் பாதம்பட்ட சேது சமுத்திரத்திற்கு
இந்துமதம் சார்ப்பில் எத்தனை கூச்சல்கள்..

இந்துக் கோவில்கள்..இந்துக் குருவானவர்கள்
சுடப்பட்ட அநாகரிகங்கள்.. எல்லாமும்
பார்த்தபடி ஒரு இந்துக்கள் சார்பில் ஒரு..
இந்திய நாடு..

நஞ்சையும் விழுங்கவல்ல தமிழ்நாடு
இருக்கும் வரையில்..வடக்கு இந்தியாவின்
வாலில்தான் தமிழ்நாடு இருக்கும்.

திருவள்ளுவர் சிலைக்கு எதிராக
இலட்சம் கன்னடர்கள் தெருக்களில் திரண்டார்கள்..

ஈழத்தமிழன் சாகக் காரணமான
சோனியாவையும் கருணாநிதியையும்
தேர்தல் கல்யாணத்தில் சேர்த்திருக்கிறது
தமிழ்நாடு..

தமிழ்மொழி சிதைக்கப்படும் முதல்நிலம்
சென்னைதான்..

சென்னைத் தமிழுக்கு புதுமொழியாக
அறிவிக்கும் காலம் அருகில் இருக்கிறது..

நூறு சொற்கள் பேசினால் எழுபது சொற்கள்
ஆங்கிலத்தில் அல்லவா வருகிறது..

சோறா.. அதுஎன்னா அது..றைஸ்என்று
சொல்லுசாமி.. என்கும் தமிழகத்தானிடம்
எங்கே இருக்கிறது தமிழ்..

நேர்காணலையும், பேட்டியையும் தமிழகச்
சினிமாக் களத்தில் எடுத்துப்பாருங்கள்..

அடேங்கப்பா ஆங்கிலத்தில் பிச்சுப்புடுறாங்கள்..பிச்சு..

அதேநேரம் ஆங்கிலம் தெரியாத விசயகாந்துக்கு
முப்பத்திஐந்து இலட்சம் வாக்குகள்..

தமிழீழத்தை எரித்த வாக்குகளும் இதுதான்..

மொத்தத்தில் பொன்மனச் செம்மலுக்குப் பின்னாலே
தன்நிலையை இழந்தது தமிழ்நாடு..

உச்ச-உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கூட தமிழில்
இருக்கக் கூடாது என்பது சட்டம் என்பதாகப்
படித்தேன்..

அரசாங்கப் பெயர்ப்பலகைகளில், நெடுவீதிகளில்
இந்திதான் முதலில் இருக்க வேண்டுமெனவும்-
இருக்கிறது எனவும் இணையங்களில்
படித்துக் கொண்டேன்..

வக்கற்ற தமிழன் அதிகாரங்களில்..
திக்கற்ற தமிழினம் தேசங்களில்..

காலப்பழி.. மீண்டும் கடுகதியில்..
-எல்லாளன்..

Tuesday, August 4, 2009

அரசொன்று செய்வீர்!

நாடுகள் கடந்த நாடு
நமக்குளே வேண்டும் போடு
ஆடுகள் ஒருமேய்ப் பன்கீழ்
ஆக்கிய தமிழர் ஈழம்
கூடுகள் கலைந்த தாகக்
குலவுமண் சாம்பல் ஆன
பாடுகள் பட்ட பின்னால்
பார்த்திருப் போமா சொல்வீர்?

துருக்கியக் கரையில் யூதர்
துளைத்துமே பசுமை செய்த
பொருப்பிலே ஆற்றை ஏற்றிப்
பொழிலெனப் பசுமை கண்டார்
கருக்கொடு எதிரி வந்து
கஞ்சலாய் எரித்த பின்னும்
நெருப்பிலே இஸ்ரேல் பூத்த
நிகழ்வதை நெஞ்சில் அள்ளாய்!

வயலெலாம் எரிந்த பின்னும்
வளமெலாம் புகைந்த பின்னும்
அயலெலாம் மக்கள் தீயில்
அவலமாய் எரிந்த பின்னும்
வியட்னமின் பூமி என்ன
வீழ்ந்ததா? தமிழா சொல்வாய்!
அயற்சிகொள் ளாதீர் ஈழ
அரசதைப் புலத்திற் செய்வீர்!

இராட்சதன் என்கப் போட்டு
இயமனாய் எரித்த காட்சி
இராசபக் சாவின் காலம்
எழுதிய தாயின் வையம்
தராசிலே இட்ட தாமோ?
தரணியின் அயினா! எம்மைக்
குரோதமாய்த் தானே பக்சக்
கொடியரைக் காத்தார் கொள்வீர்!

இந்தியப் பருக்கை நாடு
ஈழத்தை எரித்து விட்டு
மந்திரிப் பதவி கண்டு
மசக்கையில் கிடப்பார் எங்கள்
வெந்தவோர் பிஞ்சைப், பெண்கள்
வேதனைக் குரலைக் கேளார்!
அந்தகர் பின்னால் நின்று
ஆவதொன் றில்லைக் காணீர்!

அரசொன்று போடு! இந்த
அகிலமெல் லாமும் கூடு!
முரசென்று கூவு! லங்கா
முடித்ததை எங்கும் கூறு!
அரசியல் பாதை யோடு
அகிலத்தை ஆக்கு! வையப்
பரம்பினிற் தமிழீ ழத்தைப்
பரப்பிடு! வெல்லும் நாடு!

-புதியபாரதி

Friday, July 31, 2009

உதித்தவேர் சாகாது..!




இது இருபத்தியோராம் நூற்றாண்டு.

இராட்சதர்கள் இல்லாத இந்த நூற்றாண்டில்
இராசபக்ச வந்து ஈழத்தில் விழுந்தான்..!

கூனி இல்லாக் குறையைச்
சோனியா நிரப்பினாள்..

துச்சாதனர்கள் கூட்டங்கள்
சிதம்பரம், சோ, இந்து ராம், என்றவாறு..
குதங்களாய் விரிந்தன..

சகுனிக்காக வந்து முழுநரியாகினான் மூத்த
கருணாநிதி..

எட்டப்பன், காக்கை இல்லாக் குறையை
டக்ளஸ், கருணாவால் நிரம்பியது
களச்சரிதம்..!

மூட்டைப் பூச்சி என்று
வீட்டைக் கொழுத்திய இந்த
வீரவாகுகள் எழுதிய சரித்திரம் இந்த
நூற்றாண்டின் இரத்தப்பழி..

புதிய இட்லருக்குத் தீனிபோட்டன இந்த
அநியாயங்கள்..

பச்சைப்பசேல் நிலங்களை
இச்சைப்படியே எரித்தார்கள்..

ஈழத்தை முற்று முழுதாக எரித்தாவது
ஒரு தமிழினத்தின் எழுச்சியை
முடிக்கத் துடித்தவர்கள் இவர்கள்..

முல்லைப் போரில் பல்லாயிரம் மக்களை
ஒருசேரக் கொன்று குவிக்க, இந்திய
புலனாய்வுத்துறை அதிகாரிகள்
ஐம்பதுபேர் வவுனியாவில்
அடுக்காக நின்றகதை இப்பொழுது
ஆலாபரணம் எடுக்கிறது..!

சீனா, பாகிஸ்தான், உருசியா, இந்தியா..
புடுங்கப்பாடுகள் எல்லாம் மலங்கக் கிடத்திவிட்டு
ஈனக்கழிவுகளாய் இறங்கிக்கொண்டன..

இளைய யுவதிகளை இழுத்துக்
குடித்தன இராசபக்சன் படைகள்..

போருக்கு முந்தியும் பிந்தியும்
நாளுக்குநாள் மறையும்
நம்மவர்கள்..

போர் முடிந்தாலும் கடத்தல்
முடியவில்லை..

ஆணாகவும் பெண்ணாகவும்
காணாமல் முடிக்கின்றன
கறுத்தப் பூனைகள்..

போர் முடிந்துவிட்டதாகப்
போப்பாண்டவர்வரைக்கும் சொல்லியது
இந்தச் சிங்கள தேசம்..

ஆனாலும் இன்னமும் மீன்பிடித்தடை..

நல்லூரான் வேளையிலும்
மல்லுக்கு நிற்கிறது ஊரடங்கு..

மூன்று இலட்சம் மக்கள் முகாமுக்குள்
பட்டினி..

கொழும்பில் பூஞ்சணவனோடு
வணங்காமண் பொருட்கள்..

இந்த நேரத்திலாவது
ம(கி)ந்தபுத்தி மாறவில்லை..

நல்லகாரியம் செய்ய இந்தச்
செல்லரித்தவனுக்குச் சிரசு விடவில்லை..

தமிழனைக் கையேந்த வைக்கும்
எழியவனாகவே..இவனும், இந்த நாடுகளும்..
இலங்காவும்..

இராசபக்சவுக்கு இந்தியாவின்
எத்தனை எத்தனை வளைகாப்புகள்..

நரகாசுரனுக்கு அய்நா மன்றத்தில்
ஆபத்தைத் தடுத்தது முதல்
ஆதரவுக் கடன்களுக்கு
அகிலத்தை வரித்தது இந்தியா..

சிரட்டை எடுத்துக் கூனிக்குறுகும்
ஒரேஒரு மாநிலம் தமிழ்நாடு..

ஈழம் பிறந்தால் தமிழனுக்கு மானம்
பிறக்கும் என்ற காரணத்தால்
மலையாள ம(h)ந்திரிகளால்
ஈழமண்ணை எரித்து தமிழகம்
அமிழப் புதைக்கப்பட்டது..

எல்லாமும் ஏன்?

வீரம்செறிந்த தமிழினம்
வீழ்த்தப்பட விரும்பியது இந்தியம்..

இன்னொரு இசப்பான்..இன்னொரு இசுரேல்..
இன்னொரு வல்லரசு இனிமேலுமா..

பிரபாகரனுக்குப் பயந்தது
பேய்பிடித்த உலகம்..

சாதிகளில்லாச் சமுதாயம்..
பிணக்குகள் இல்லாப் பேராட்சி..
கலையும், பண்பாடும் கண்காட்சிகள்..
சுத்தத் தமிழில் மனிதப்பெயரும்
வணிகப் பெயருமாய்...
அற்புத உலகத்தை எப்படி இவனால்
சமைக்க முடிந்தது..

உயிரைக்கொடு என்றால்
பயிர்களும் அல்லவா படை
சமைக்கின்றன..

கரும்புலிக்கு விரும்பியவாறு
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இந்தக்
கண்மணிகள்..

ஓ..இந்தச் சமுதாயம்..
கரிகாலன் மட்டுமே கருத்தரிக்க முடியும்..

எரிக்க நினைத்தார்கள்..

இருபது நாடுகள் கைகோர்த்தன..

பாகிஸ்தான் விமானிகளுக்கு அம்பாந்தோட்டையில்
காணிகள் கொடுக்கப்பட்டன..

சிறிலங்காக் கடவுச்சீட்டுகள்
இவர்களுக்கு..

இந்த விமானிகளை சிறீலங்காவின்
சொந்தமாக்கினான்.. இராசபக்ச..

ஈழத்தை எரித்து வேழத்தைப் புதைத்தது
இந்தக் கேடுகெட்ட உலகம்..

ஈழம் சாகுமா?

இசுரேல் செத்ததில்லை..

வியட்னாம் விழுந்ததில்லை..

கிட்லர்தான் செத்தான்..

யூதன்வேர் முடிந்ததா?

ஈழம் ஒருநாள் எடுத்தவேர் தளைக்கும்..

இலட்சமாய் முடிந்தோம்..ஆனாலும்
இலட்சியம் சாகாது...!

-எல்லாளன்..

Friday, July 24, 2009


முதலாவது ஆண்டு நினைவும் திதி வணங்கலும்!

தாயாகிப் பொன்மடியில்
தாங்கி வளர்த்தவளே!
தீயாக உருக்கித்
தெளிந்துபுடம் போட்டவளே
தூயவளாய் யாவருக்கும்
துதிக்கமனம் வைத்தவளே
ஏய ஒளிவடிவாய்
இறையடிக்குச் சென்றவளே
காய மனம்பரப்பிக்
கவலைகளில் மூழ்காமல்
நேய மணித்தாயை
நெஞ்சமெலாம் சுமந்தபடி
ஆயப் பொழுதுகண்டோம்
அகிலிறைவன் தாளிணையில்
சாயப் பொழுதுகண்ட
தாயே வணங்குகின்றோம்!

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சுற்றம்
06-08-2009

Monday, July 20, 2009

கலைந்த என் தேசம்.!



கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்
நிலா தந்து போன வானம் - தினம்
பிணம் பெய்து போகக்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்...!

நிறைந்த வெளிகள் தோண்டி - என்
உறவுமறைந்த குழிகள் மூடிப் - பல
திறந்த முகாம்கள் வந்த பின்பு
கலைந்துபோய்க் கிடக்கிறது என் தேசம்..!

நீதி தவறிய அரசும் - இந்தியச்
சூது நிரப்பிய வஞ்சமும் - கலக
வாது ஏற்றிய சங்கங்களும் - எமக்கு
முக அரிதாரம் அப்பிப் போனதனால்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.

சிதறிய அங்கமும் உடலும் - மணக்கும்
குதறிய காயமும் வடுவும் - நெடுக்கும்
கதறிய தாயும் சேயும் உறவும் -மேலும்
,தயம் பிளக்கும் நினைவும்
சேர கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்!

சூழ்ந்த கடல் என் கடல் - அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் - ,தைச்
சேர்ந்த புலம் என் குலம் - நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் - என விண்ணைக்
கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!

ஆக மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்..
மரித்த தாய் மார்புறிஞ்சி - தன்னுயிர்
தரித்த சேய் கண்டபின்பு
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்!

கல்லறை நீளும் வயல் வெளிகள் - நெல்
புதைந்து எலும்பு செழிக்கும் குழிகள் - செல்
பொழிந்து தளும்பிக் கொடுக்கும் நர பலிகள் -கல் உம்
கனிந்து உருகும் கண்ணீர்க் கதைகள் - எல்லாம் கண்டு
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

விளைந்து காலெடுக்கும் வெடிகள் - பல
பறந்து வால்வெடுக்கும் குண்டுகள் - சில
கழிந்து கற்ப்பெடுக்கும் அரக்கர்கள் - நில
அளந்து சூறையாடும் குண்டர்கள் - என்று
நின்று நீளும் பட்டியல் தாளாது
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

-துர்க்கா
(ஒரு இளம்கவியின் நெஞ்சக் குமுறல்)

Saturday, July 18, 2009

ஒரு காட்சி உரைகல்..


புலிவெண்பா..

கடைசி நிமிடச் சாட்சியின்
ஒரு காட்சி உரைகல்..


ஒரு சாட்சியின் வசனம்..
பூதா கரம்போலே பேயாம் நெருப்புக்குள்
சாதாழை போல்விழுந்த சங்கடத்தில்-நேதாஜி
போல்வன் பிரபாவான் பொய்யுமிழாச் சத்தியவான்
கால்கோளைச் சொல்லுகிறேன் காண்மின்!

கடைசி நெருக்கடி..
இரணுவன்கள் எல்லா இடர்ப்புறமும் சூழக்
கிரகணங்கள் போலானார் கேடர்-உரமனைத்தும்
கட்டி அரணமைத்து கால்போலே நின்றமக்கள்
விட்டு நடந்தாரே வேர்!

எங்கும் பிணம்..
திரும்பிய பக்கமெலாம் தீயான ஓலம்
குரும்பையும் பிஞ்சுமாய்க் கொட்ட-முருக்கான
வேதாளக் கிந்தன் விசவாயு எனப்பொழிய
பாதாளம் எங்கும் பிணம்!

அடிவைக்க முடியாமல் பிணங்கள்..
எல்லோர் மனதும் இதுதான் கடைசியென
வல்லபகை கொட்டும் வதைகண்டார்-சொல்லில்
வடித்தெடுக்க ஒல்லுமோ வார்க்குருதி ஊடே
அடிப்பிணங்கள் கண்டார் அடி!

வன்பகைவர் நோக்கி..
இறப்புச் சிறியது இறந்துபடப் போகும்
பறப்புப் பதற்றமது பாடாம்-துறந்துமண்;
தேடினார் மாற்று மகிந்தபடை தன்பக்கம்
நாடினார் மக்கள் நடந்து!

தெரிந்த தலைவன்...
தலைவன் நாடி தனைப்பிடிக்கும் வல்லான்
உலைவாய்க் கணமெல்லாம் உறுவான்-கொலைவாள்
இறுக்கும் கொடியதொரு எல்லாத் திசையும்
வறுக்கும் எனவறிவான் வார்!

நம்பிக்கை குலைந்த..
என்றாலும் போரில் இருந்தபடி நம்பிக்கை
கன்றித் தளபதிகள் கண்டாரே-நின்றார்
அசாத்திய நம்பிக்கை ஆடிப்போய் விட்ட
உசாப்பொழுதில் வந்தார் உறி!

எண்ணத்தைத் தகர்த்த கொடூரம்..
ஆனாலும் அச்சமின்றி ஆதவச் சூரியனான்
கூனாப்போர் செய்யக் குறிகண்டான்-தானாகி
நின்று களப்பகையை நேர்கொள்ளத் தேர்தலைவன்
நின்றமகன் கண்டான் நெருப்பு!

பெரும்படைகள் பிரபாவைச் சூழ்ந்தபோது..
பிரபாவைத் தாக்கும் பொறிகண்டு வேங்கை
உரமாக வைத்தாரே உட்காவல்-அறுநூற்றாய்
போர்ப்புலிகள் சூழ புலித்தலைவன் காப்பாற்றச்
சேர்ந்தார் தளபதிகள் சொல்!

பல தளபதிகள் இறப்பும் தலைவன் காப்பாற்றுதலும்..
அந்தவொரு தாக்குதலில் துர்க்கா கடாபியொடு
நந்தீபன் துர்க்கா விதுசாவும்-வெந்தகளம்
தன்னில் புலிப்படைகள் தாமுயிரை இட்டாரே
தன்தலைவன் காப்பாற்றித் தான்!
(ஆதாரம்: திருநா நேர்காணல்-நன்றி இளம்விகடன்)

இன்னும் தொடரும்..
சோலைக்குயில்..

Saturday, July 4, 2009

கரும்புலி வணக்கம்..!


ஆடி ஐந்தென்றால் ஓடிவிடும் கொழும்பு..

இப்பவும் மூடித்தான் இருக்கும் சில
கதவுகள்..

ஐம்பத்தியெட்டு ஆடி..
எண்பத்தி மூன்று ஆடி..

ஓட ஓட வெட்டி தமிழனைப்
புதைத்த ஆண்டுகள்..

காடுவெட்டிப் பக்சாக்கள்
காட்சிக்கு வந்தபிறகு வருகிறது..
இதுவும் கறுத்த ஆடி..
எங்கும் கனத்த ஆடி..

இந்த ஆடி..
மாடுவெட்டிய மகிந்தம்
மனித்ததை வெட்டிய நாட்கள் ..

முன்னர் காலம் காலமாகக்
குருதி இழந்தோம்..

இப்பொழுது கடல் கடலாகக்
கொட்டி முடித்தோம்..

முன்னர் கொஞ்சம் கொஞ்சமாகப்
பறித்தான்
இப்பொழுது மிஞ்சும்படி இல்லாமல்
எரித்துவிட்டான்..

உயிரை இழந்தோம்..

உடமைகள் இழந்தோம்..

பயிரை இழந்தோம்..

பண்பாட்டுப் பூமியை இழந்தோம்..

கற்பை இழந்தோம்..

கனியை இழந்தோம்..பிஞ்சுக்
காளானை இழந்தோம்..

எங்கள் மக்களை
உள்ளே வைத்திருக்கிது புலிஎன்று
ஓலமிட்டார்கள்..

இப்பொழுது முள்ளுக்கம்பிக்குள் அல்லவா
மோடயாக்கள் வைத்திருக்கிறார்கள்..

வேண்டுமென்றே இருந்த உலகம்..
சாம்பல் மேட்டை உருவாக்கிவிட்டு
சலனமில்லாமல் இருக்கிறது..

மகிந்தன் சன்னதித்திற்கு
உடுக்கு அடித்த இந்தியம்..
சிங்கத்துவாய்க்கு மான்களைக் கொல்லச்
செருகுவாள் கொடுத்திருக்கிறது..

சோனியத்துக்கு என்ன தெரியும்..?

அமைதிக்கு வந்து இயமமாய்த்
திரும்பியது தெரியாது..

காலம்காலமாய் ஈழமண்ணை அழித்தவருக்குத்தானே
கச்சதீவையும் கொடுத்திருந்தார்கள்..

இராட்சதனை-இராசபக்சவை உருவாக்கிவிட்டு
பராக் பராக் என்கிறது உலகம்..

தென்முனைக்கு சீனாவை இறக்கிவிட்டு
இராசபக்சனிடம் அன்பாகக்
கதைக்கிறது இந்தியம்..

இராப்பொழுதில் சல்லாபித்த எட்டப்பம்
இப்பொழுது பகற்பொழுதிலும்
இறங்கிவிட்டது..

இருபத்திமூன்று வருடங்கள் இறங்காத
பல்கலைகக்கழகத்திற்கு
இன்று இடக்ளஸ் போனாராம்..

இதற்கு என்னவிலை..?

கொழும்பில் கூட்டம் கூட்டமாய் அள்ள
இவனும்தானே கூட்டு..

ரவிராசை, மகேஸ்வரனைக் கொன்றவரின் கைகள்
இவனிடமும் அல்லவா இருக்கின்றன..

அற்புதன், நிமலராசன்..
இவர்கள் மீதான அரக்கர்கள் யார்?

எல்லாம் தெரியும்..
எல்லாவற்றையும் எங்கள்
இனமே புரியும்..

எங்கள் கன்னியரை வன்மம் புரிய எதிரிக்குக்
கொடுத்துவிட்டு அல்லவா..
அந்நியன் ஆயுதத்தோடு வருகிறான் இந்த
அகப்பைக்காரன்..

சாட்சியம்கள் சொல்வதாக வந்தவர்கள்கூடச்
சரிக்கட்டி விட்டார்கள்..

சாத்தான்கள் வந்துவிட்டார்கள்..

பாசிசங்கள் பூசிமெழுகி வருகிறது..

பூச்சுவாக்கள் மேய்க்க வருகின்றன..

நேர்மையின் வேர்கள் படைத்த
வேங்கை மண்ணை..சிங்களக்
கோர்வை வெறியர்கள் கொழுத்திவிட்டார்கள்..

பார்வைக்கு நின்ற உலகம்
பகிடிக்குக் கதைத்துவிட்டுப் பறந்துவிட்டது..

இந்தியம் சோனியம் எல்லாம்..
மலையாளியை வைத்து..
தமிழ் வாழாமல் அழித்துவிட்டனர்..


பார்ப்பனியம்..
இரண்டாயிரம் இந்துக் கோவில்கள்
அழிய-அழிக்கப்பட
சூர்ப்பனகையோடு சிங்களத்தின்
விருதுகளைச் சேர்க்கின்றன..

கரும்புலிகள் இருந்தபோது
கறுத்த ஆடி வெளிச்சம்தரும்..

இந்த ஆடி
துயின்ற ஆடி அல்ல..
துடித்த ஆடிதான்..

சிங்கத்தின் வாயில்..
செந்தமிழ்மான்..

இராட்சதன் வெல்லும்வரை
கரும்புலிகள் இருப்பில் இருக்கும்..!

செருவில் எரிந்த செந்தமிழ் நிலமே
பருக்கைகள் ஓட ஒருநாள்
இருப்புப் பிறக்கும்..

தமிழீழ வணக்கம்..!
-எல்லாளன்.

Thursday, July 2, 2009


ஓ..முருகையனே..!

பாலனாய் இருந்தபோது
என்ஆச்சி பால்தருவாள்..கொஞ்சம்
கால்கள் ஊன்றி நடந்தபோது
குயிலோடு கூவக் கற்றுக்கொண்டேன்..

கோவில் மணியோடு
குமரன் அழைத்தான்..சிலநாட்கள்..

சமநேரத்தில்..
பாவில் நீங்கள்
அழைத்ததினால் தானே இவனையும்..
பற்றியது நெருப்பு..

சில்லையூர், முருகையன், அரியாலை
அல்லை சத்தியசீலன், தில்;லைச்சிவன்
காரை சுந்தரன், மகாகவி, காசி..சொக்கன்..
வேந்தன்..கந்தவனம்..புதுவை..மதுரகவி..

இன்னும் இன்னும் எத்தனை பிம்பங்கள்..
இதற்குப் பின்னால் எந்தக் கம்பங்களும்
ஒன்றாக நிற்க..முடியவில்லை..அப்பா..

அற்புதம் அற்புதம்..
இந்தத் தொடர்கள் இனிக்கிடைக்குமா என்ன..?

தொட்டுத் தெறிக்கும் பட்டுக் கதிர்களுக்குள்
நான் சுட்டெரிக்கபட்டதினால்தான்
எனது பதினாறாவது வயதுக் கவிதை
நட்டுக்கொண்டு வந்ததையா..

உங்கள் உருவங்களைப் பார்த்தே எனக்குப்
பருவம் வந்தேறியது..

கிளிநொச்சி ஈஸ்வரன் படமாளிகையில்..
ஒரு கவியரங்கு..

பூசி மினுக்கிப் பொடிபோட்டுக் கொண்டை குத்தி
நாசி மூக்குத்தி..நரிவால்..குதிரைவால்
கூந்தல் கிளப்பி கூட்டமாய்க் குதிப்பாய்..
பெண்களாய் இந்தத்
தியேட்டருக்குள் வந்திருக்கும்..
என்ற அந்தக் கவிஞன் முடிக்கவில்லை..

நிறுத்திவிட்டான் கவிஞன்..

சில்லையா, முருகையனா, காரையா..
மிளகாய்க்கு வருமானம் சொல்லிய
நாகலிங்கம் ஆசிரியரா...
கணக்கு எடுக்க மனத்துள் இன்று
கலங்கக்கங்கள்..

என்றாலும் தியேட்டர் குலுங்கிய
அன்றையப் பொழுதில்..

பெண்கள் முகம்திரும்பி..கதைத்து..
கூட்டமாய் எழுந்து குரல்கொடுக்க வரும்பொழுது..

தியேட்டர் இதனுள் வருவோர்போல் அல்லாமல்..
கவிகேட்க வந்திருக்கும் கார்த்தமிழின்
பெண்ணினமே..

அகலவாய் திறந்தான்..அந்தக் கவிஞன்..

கரமார்த்து நின்று உரமார்த்தபடி
கவிகேட்கவந்த
சபைக்கு இருந்துவிடத் தெரியவில்லை..

தமிழினித்த போதுகளில்
சிக்கிப் புல்லரித்தபடியே..

என்னப்பா..என்னப்பா...
இந்தக் கவிகளுக்கு.. எங்கே.. இணையுண்டு..?

இன்னொரு.. மயிர்க்கூச்செறியும் கவியரங்கு..
திங்களைச் சுற்றுதும் என்பது தலைப்பு..

ஆம்ஸ்ரோங், கொலின்ஸ், அல்ரின் ஆகியோர்
சந்திரனில் இறங்கிய செய்திவந்த
சிலநாட்களுக்குப் பின்னால்..அதுகொண்ட
ஒரு தலைப்பு..

சரவணை முத்தமிழ் மன்றத்தை
முழுநிலத்துக்கும் அங்குரார்ப்பணம் செய்த
முத்துக் கவியரங்கு..

நாசி அழகும் வீசி மயிர்பரப்பும்
முழுநுதலோடு மகாகவியும்..

திங்களைச் சுற்றப்போய் பெண்களைச் சுற்றிவந்த
காசியின் கவியும்..

புளியடியில் வந்து இறங்கி..என்ற
அல்லையின் வரியும்..

மதுரகவி, அய்யாத்துரை...தில்லைச்சிவன்..

மூளைக்குள் இறங்கி நாளங்கள் எல்லாம்
உடைப்பெடுத்தபடி நான்..

நீங்கள் கட்டிய ஏணைகளில் படுத்துறங்கிய தமிழாளுக்குப்
தாலாட்டுப் பாடிய தங்கக் கவிஞர்களே..

மாடு கயிறறுக்கும் என்றவனே எங்கள்...
ஈழக்கவிஞன்.அயலெடுத்த கவிஞனே..
முருகையனே..

பாரதியைப் படித்து..பாரதிதாசனைப் பார்த்துக்
கவியரசைப் பார்த்து.. இவர்களின்மேல்
ஏறி இருந்து சவாரிசெய்த
ஈழக்கவிஞர்களே.. உங்கள் வரிகள்..

தமிழகத்தையும் உடைத்தல்லவா புறப்பட்டன..

இந்தத் தாக்கம்..
இன்னும் இருக்கும்..

கயிறறுத்துப் புறப்பட்ட குயிலே..

புருவம் கொடுத்துப் புறப்பட்ட
முருகையனே..

நீயும், நெடிதுயர்ந்த உனது
நிலப்பரப்பும்..

காயும் என்று எண்ணாதே..
காலம் எல்லாமும் உனது
கணக்கிருக்கும்...

சென்றுவிட்டாய்.. இனியென்ன..
சென்றுவா..!
-புதியபாரதி.

Tuesday, June 30, 2009

மனமும் கனமும்..



இறந்தகதை சொல்லி அல்லது சொல்ல இத்தனை நாட்களா..?

மறக்க முடியாத ஒருவனுக்கு மரண வாய்ப்பாடா?

பெற்ற பிள்ளையைத் தளபதியாக்கிப்
பெற்ற மண்ணுக்குக் கொடுத்த தலைவன்
புராணங்களிலும் உண்டா..?

உலகப் போரியல் வரலாற்றில்
இந்தச் சூரியத் தேவனின் தளபதிகள்போல்
எந்தநாட்டு விடியற்போர் வைத்திருக்கிறது..?

இடுப்பில் இருந்து பிரிந்த கருணா என்ற
கசங்கட்டியால்தான் எட்டப்பத்துக்கூட
இந்த மவுசு..

பழியின் வரலாறுகூட
பாடத்திற்கு வந்திருக்கிறது என்றாலும்..
இரவு வந்துவிட்டால் ஆதவன்
இறந்தா படுவான்..

தேசியத்தை தெரியவைத்தனுக்கு
எதற்குத் தீர்த்தாஞ்சலி..?

பேரியக்கத் தலைவனுக்கு எதற்குப்
புறமுதுகுக் கதைகள்..

பணிக்குப் புறப்பட்டவர்களை
பகலவனுக்கப் பாடை கட்டிக்
காப்பாற்றப் போகிறார்களாம்..

கரும்புலியைத் திரும்பிவா என்று
கரிகாலன் அனுப்பியதில்லை..

திரும்பிவருவேன் என்று எந்தக்
கரும்புலியும் திரிந்தது இல்லை..

சீனம்-பாகிஸ்தான்-இந்தியம் என்ற
ஆனானப்பட்ட வல்லரசுகள்..
ஒரு அடுப்பில் சமைத்தது கிடையாது..

ஆனால் புலிகளைச் சமைக்கப் புறப்பட்டார்கள்..

அட..ஒரு விடுதலைக்கான
அரிச்சுவடிக்கும் சேகுவேரா என்ற
சிறப்பியலாளனுக்கும்..
சுடச்சுட வரிகொடுக்கும் கியூபாவும்..
ஒரு இனப்படுகொலையைத் தெரியவில்லை என்றால்..

ஆம் ..சுயநலங்கள்
சேர்ந்து கொடுத்த இரசாயன
எறி-எரிகுண்டுகள்..
பிச்சையெடுப்பவன் தெரியாத
புண்ணிய பூமியைச்
சாம்பல் மேடாக்கி விட்டார்..என்றால்

சத்தியபூமி சரிந்துபோக வேண்டியதுதானா?

நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரத்தில்
பொல்லுக் கொடுக்கப் புறப்பட்டால் என்ன செய்வது?

நாட்டில் இருக்கும்போது
கூடியிருக்க முடியாதவர்கள்..
எரிந்த வீட்டில் கூடுகட்ட நிற்கிறார்கள்..

யோசப், ரவிராசன், சிவராம்...
குமார், நிமலராசன், லசந்தா..
போன்ற மரணங்களின்
கொலைகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்..?

பாசிசச் சிங்களவனும்..
பாசிசத் தமிழனும் அல்லவா..
இந்தப் பாடைகட்டும் பல்லக்குவாதிகள்..

பக்கத்தே இருந்தபடி எல்லாக்
கக்கத்தும் மரணங்கள்..

இந்தக் கொலைக்காடர்கள் யார்..
எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாதா?

சூரன் மாமரமாய் வந்தகதை மாதிரி
கூட்டமைப்பு என்ற பெயரில்
காட்டிக்கொடுப்பவன் செய்திபோடச் சொல்லுகிறான்..

இவர்கள் யாரென்று
யாருக்கும் தெரியாதா?..

பாசிச ஏட்டய்யாக்கள் யாழ்ப்பாணத்தில்
பத்திரிகை எரிக்கிறார்கள் பார்க்கவில்லையா..?

ஒருபக்கம் பத்திரிகை எரிப்பு..
மறுபக்கம் காரியாலயத்திற்கு
பாதுகாப்பு..

எரிப்பவனைக் கக்கத்தில் வைத்து..
நரிக்கவசம் போடுகிற..முட்டாள்கள்..
துப்பாக்கிக்குள்ளே நப்பாசை கொண்டுவிட்டால்
தப்பாக்கிகள் என்ன தெரியாமலா
போய்விடும்..

இராணுவ ஒட்டடையில் பட்டடை போட்டுவிட்டு
தேர்தல் கிராணம் கௌவுகிறது..

அட..
வெறிகாறன் எழுதிகிற வியாக்கியானங்கள்..

விற்பனைக்காக பிரபாகரன்..
விமானத்தில் களத்தைப் பார்த்தார் என்ற எழுதுகிறவன்..
வெறியில் வானொலி நடத்துகிறவன்..
சூசை மட்டக்களப்பில் நிற்கிறாரா? என்று
கேள்விக்குறிபோட்டு எழுதுகிறவன்.. என்றும் பல
கண்முன் கரிபோடும் வாலாயங்கள்..
புண்ணாய் பிடுங்கித் தள்ளுகின்றன..

இன்றைய காலத்தில்..

தேசியத் தலைவனால் நியமிக்கப்பட்டவர் என்ற
காரணத்திற்காக தன்னைப் பேசவைத்தவரும்..
அவரின் அழைப்பாளர்களும்..
இன்னும் அசையாத கட்டுக்கோப்போடு நிற்கும்
ஊனாத்தானா அமைப்புகளும்
ஒன்றாக வரவேண்டும்..

நிலம், தேசியம், தன்னாட்சி, சுயம் கொண்ட
ஒரு இனத்தின் வரலாறு இந்த
நாடுகளுக்குச் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டும்..

ஒன்றுபட முடியாவிட்டால்
தின்று முடிக்கத் தினவெடுக்கின்றன துரோகங்கள்..

பத்மநாதன் எடுத்த முயற்சியில்
எல்லோரும் பங்குதாரராக வேண்டும்..

நினைத்தபாட்டுக்கு யாரும் எதையும் கதைக்காமல்
எல்லோரும் ஒன்றாக வருவோம்..

வெறிக்கூத்து ஆடுபவர்கள் சிங்களத்தின்
விசக்கூலிகள் ஆகிவிட்ட நேரமிது..

நிசத்தைத் தமிழன் வெல்ல..
உலகத்தில் ஒன்றாகி நிற்போம்...

-எல்லாளன்..
(நம்நாடு தளத்திற்காக..)

Sunday, June 28, 2009

பரணித் திருவெண்பா


பாவலன் நெஞ்சம்: முடிவுரை
இந்திய இந்தநூற்றாண்டுக் கயமை

ஈழத்தின் மீதான இந்தியக் கொல்கயவர்
கூழாடல் இந்நூற்றின் கீழாமே-பாழாக
மண்ணும் நிலமும் மரணநெடி ஊற்றுவித்த
புண்ணும் அழியாத பேய்!

தமிழன் நிலங்கள் சிங்களர்க்குத் தாரைவார்க்க..
புரையேறி விட்டதொரு புத்தநெடி யுத்தம்
கரையேறி விட்டதில்லைக் காணீர்-நிரையேறி
செந்தமிழர் வாழ்விடத்தைச் சிங்களர்க்கு விற்பதற்கு
கந்தகத்தான் எண்ணுகிறான் காண்!

புலிகள் விடவில்லை என்றழுத மேற்குலகம்..இன்று..
புலிகள் விடவில்லை போன்றழுத மேற்கு
கிலியாக்கும் சிங்களத்தைக் கேளார்-எலிப்பொறியாய்
முட்கம்பிக் குள்ளேதான் மேடிழந்த செந்தமிழன்
பட்டழித்தான் சிங்களத்தான் பார்!

இராட்சதன் இராசபக்சன்
பிச்சை மனிதர் பிறக்காத பூமியதை
நச்சு மகிந்தனவன் வந்துகண்டான்-இச்சான்
இராசபக்சன் இந்நாள் இராட்சதனாய் நின்றான்
தராசறிவீர் வற்பகைவன் தாக்கு!

இந்தியப் பழியும் ஈனமும் போக..
இந்தியா செய்தபழி என்றும் அழியாத
இந்தநிலை மாற்றுதற்கம் ஏதுஉண்டு-வெந்தநிலம்
சொந்தத் தமிழர் சுதந்திரமாய் வாழ்விடலே
இந்தியத்துக் குள்ளபணி ஏர்!

தேசத்தின் ஆத்மா தேசியத் தலைவன்!
வானம் இறுகி வரைகடலும் செங்குருதி
ஆன ஒருநிலத்தின் ஆத்மாவாய்-மானமொடு
போர்நின்ற மாத்தலைவன் பெற்றமகன் தன்னோடு
நேர்நின்றா ரென்பரணி நீளும்!


மாபெரும் தளபதிகளின் மானமண்!
பொட்டம்மான் தீபன் புலித்தேவன் சூசையொடு
மட்டற்ற வேங்கைகளின் மானமண்ணை-திட்டத்தால்
சீனாபா கிஸ்தான் சிறுமதியார் இந்தியமும்
தானாகி வந்தழித்தார் தான்!

அன்னைபடை மீண்டும் அவதரிக்கும்!
அறுபது ஆண்டாக அன்னைத் தமிழன்
சிறுமை படைத்தவரால் செத்தான்-குறுமதியார்
இந்தியத்தைக் கூட்டி இனக்கொலையை வைத்திடினும்
செந்தமிழன் வந்திடுவான் சொல்!


வேங்கைத் திருநாடு வெற்றிபெறும்!
கண்ணீர் உகுத்தநிலம் கற்பகத்து மான்புலிகள்
தண்ணீர்ச் சுனையாய்த் தரித்தநிலம்-மண்ணளந்த
வேங்கைத் திருநாடு வெற்றிவரும் நாளொன்றே
தீங்கான் மகிந்தனுக்குத் தீ!

புலிவீரன் மரணம் அடைவதில்லை..
போர்ப்புலியாய் நின்றரிய பொன்னுயிரைத் தானீந்து
வேர்ப்புக் கரையாத வித்துடலாய்-ஈர்ப்பு
அறுந்தெழிய எட்டப்பர் ஆகாத வேங்கை
மறத்தமிழர்க் கில்லை மரணம்!

பெற்றமண் எங்கும் பூக்களாய்...
என்னினிய செந்தமிழீர் எங்கள் அரும்புதல்வீர்
பொன்னாய் விடியல் பொறித்தவரே-இன்னுயிரால்
பெற்றமண் வார்த்துப் பெரும்பரணி ஆர்த்தோரே
நிற்பீரே என்றும் நிலம்!

கயமை அழியும்..
கண்ணீர் மலிந்து களச்சிறகில் நன்றிறுகி
மண்ணீர்க் குருதி வடித்தகதை-எண்ணீர்
கயமை கொடுத்தானைக் காலமது கொல்லும்
நியதி இதுவேதான் நில்!

புலிப்பரணி..!
பரணித் திருவெண்பா பாத்தொடுத்தேன் இந்நாள்
தரணிக் குரைத்தேன்யான் தாயீர்-முரசாய்
இருந்து முகவரிக்கு இட்டகரி காலன்
மருந்தாகி நிற்பானே மன்!


நிலத்தின் நேசர்க்கு வணக்கம்..!
இன்னுயிரைத் தந்தார்க்கும் எங்கள் சுதந்திரத்தின்
தன்னகத்தில் எங்கும் தரித்தார்க்கும்-மன்புலியாம்
தேசத் தலைவன் திரளாம் தளபதிகள்
வாசற்காய்த் தந்தேன் வணக்கம்!

-புலிவெண்பா முற்றிற்று-
ஐநூறு வெண்பாக்களுடன் புலிவெண்பா நூல்
விரைவில் எதிர்பாருங்கள்.

நற்கருத்து இட்ட நல்லோர்க்கு என் நன்றிகள்.
தமிழ்மணம் இணையத் தளம் மற்றும் எல்லா வகையிலும்
உலகம் பரவிய எண்ணவியல் மானிடர்க்கும் என்வணக்கம்.

சோலைக்குயில்

Saturday, June 27, 2009

புலிவெண்பா...!




இனப்பழிப்படலம்
ராசபக்சனும் கூனியுள்ளமும்..

அள்ளிவைத்த இந்தியமும் இத்தாலிச் சோனியளும்
கொள்ளிவைத்த போர்ப்படலம் கொள்ளீரோ-முள்ளிவாய்க்கால்
எல்லாமும் தீயாய் எரிந்தகதை கூனியளின்
சொல்லாம்ம கிந்தன் சுதி!

எல்லாம் தெரிந்தும் சதிசெய்த பான்கிமூன்
பான்கீச் சதியில் விசய்நம்பிக் கேடான
கூன்பட்ட அய்நாவின் கூத்தடிப்பில்-ஏன்சென்றார்
இன்றுவரை சொல்லால் இழுத்தகதை அல்லாமல்
துன்பத்தில் என்னமயிர் ஆச்சு!

ஆயிரம் இறந்தால் போர்க்குற்றம் இலட்சம் இறந்தால்..?
போர்க்குற்றம் என்றேதான் போட்டார் இசுரேலைக்
கூர்க்குற்றம் என்றதிந்திச் சோனியமே-மூர்க்கமென
எம்பதியில் வந்து இலட்சமாய்க் கொன்றோரைக்
கும்பத்தில் ஏற்றிவைத்தார் கொள்!

இந்தியத்தின் போர்க்குற்றம்..
இத்தா லியறுப்பாள் எம்தா லியறுத்தாள்
கொத்தாகக் குஞ்சுளைக் கொன்றாளே-இத்துணையில்
போர்க்குற்றம் இந்தியர்கே போடுவீர் மன்மோகன்
கூர்க்குற்றம் சோனியட்கும் சேரும்!

கருணாநிதி செய்த காலப்பழி..
செந்தமிழர்க் கென்று சிறப்புக் கடைவைத்த
நந்திகரு ணாதிக்கும் நாய்க்குற்றம்-சொந்தமக்கள்
பிள்ளை நலம்கருதித் தில்லிக்குப் போனாரே
கொள்ளிவைத்தார் ஈழமென்றே கொள்!

வெள்ளைக் கொடியுடனே வந்தோரைக் கொன்றசதி..
வெள்ளைக் கொடிகொண்டு வேளைவா என்றுவிட்டு
தள்ளிச் சுடவைத்தான் தக்கனுமே-முள்ளியிலே
தேவன் நடேசன் திசைவந்து கொன்றோர்க்கு
பாவபழி தீயுமிழும் பார்!

தமிழினக் கொடியரைத் தன்மடியில்..
நிலத்தை இனத்தை நிசத்தில் அழித்த
மலங்களைச் சேர்த்தான் மகிந்தன்-குலமாம்
தமிழர் குடிக்குத் தமிழெதிர் ஆன
உமிழெலாம் சேர்த்தான் உறி!

கிழக்கும் வடக்கும் கிடைத்த பழிகள்..
கிழக்கின் உதயம் உழக்கி நிற்கும்
முழக்கும் வடக்கின் வசந்தம்-அழப்பும்
கருணா இடக்ளஸ் கனிந்தவிக் கூட்டு
இருமும் கசங்கள் ஏர்!

பத்திரிகைகள் எரிப்பு: தேர்தல் குளிப்பு
செய்தியினைப் போடென்றார் செய்யாமல் விட்டதிற்கு
மொய்யாய் எரித்தார்கள் முட்டைகள்-கையில்
இராணுவம் வைத்து இடராய் வடக்கின்
கிராணமாய்த் தேர்தலாம் கேள்!

பழியர் ஒருநாள் பறப்பர்..!
எல்லாமும் எல்லா இடர்ப்பொழுதும் வல்;லாரின்
பொல்லாய் இருக்காது பெற்றமண்ணே-அல்லாட
வைக்கும் அரசும் வடிகிடக்கும் எட்டப்பர்த்
துக்கும்ஓர் நாளில் துறக்கும்!

ஈழமக்கள் கொன்றபழி இவர்களுக்கே..
ஈழமண் கொன்றோராய் இந்தியமும் பிள்ளைகளின்
வாழவென மட்டும்தீ மூக்காவும்-ஆழமென
ஆட்சிகண்டர் அல்லாமல் அன்னைமண்ணின் சாவெல்லாம்
நீட்சியிந்த நீசர் நிழல்!

-சோலைக்குயில்

படம்: நில்தை அழித்த சுவாமிநாதனும்
தமிழ்க் குலத்தை அழித்த மகிந்தனும்..

Saturday, June 20, 2009

இராட்சதம்!


இராட்சதம்!

இராட்சதன் இராசபக்சன்...
இராட்சதன் காதை எழுந்தது போலே
இராசபக்சன் வந்தான்காண் இன்று-மராட்டிய
மண்போலே வீரம் மலர்ந்த ஈழத்தைக்
குண்டால் அழித்தானே கூற்றன்!

தமிழ்மாதரைக் கற்பழிக்கச் சொன்னான் கோத்தபாயா...
கோத்தபாயா அந்தக் குலக்கழிவுப் பக்சனுமாய்
நாத்திவிட்டான் வன்புணர்ச்சி நாறவே-ஊத்தையர்கள்
பொற்தமிழர் மாதரைத்தான் புத்தபடை தான்குடிக்கக்
கற்பழிக்கச் சொன்னானே காடை!

தாய்முன்னே ஒரு சிறுமியின் கற்பழிப்பு..
தாய்மடியில் நின்றவளாம் தங்கச் சிறுமகளை
பேய்க்கழிவாய்க் கற்பழித்துக் கொன்றாரே-சேய்துடித்து
மாள்வதனைக் காண மனம்பதைத்த அன்னையவள்
தாள்பாறி வீழ்ந்தாளே தான்!

எரிந்து சிதறிய மக்கள்..
இலட்சக் கணக்கில் இடம்பெயர்ந்த மக்கள்
நிலத்தில் கிடந்துயிரை நீத்தார்-மலட்டு
மகிந்தன் இனவழிப்பான் வன்படையை ஏவி
மகிழ்ந்தான் தமிழினமே மாள!

இராசயனக் குண்டு எரிந்தது பூமி...
இரசாய னக்குண்டு ஏவிவிழத் தீயாய்
நரமாமி சப்பக்சர் நட்டார்-மரமாமி
இந்தியக் கூட்டார் எரிகுண்டாய்ப் போட
மந்திக்கை யானதம்மா மண்!

பதின்மூவாயிரம்போர் சென்றதெங்கே?...
வாலைக் குமரியரை வந்தன்னை முன்னாலே
சூலமுனை ஈட்டிகொண்டு சென்றுவிட்டார்-ஆலமென
பத்துமூன் றாயிரமாய் பாவையர் வாலிபராய்
எத்துமுனை கொண்டுற்றார் ஏன்!

கூனி சோனியா...
கூனியாய் வந்து கொடும்;கூற்றம் போலேதான்
சோனியா வாய்த்தாள் சுளையாக-மேனியாய்ச்
சுக்குநூ றாக்கிச் சிதறும் சதைவயலாய்க்
கக்கவைத்தார் எங்கரத்தக் காடு!

சிறுவர்களைப் பிரித்தெடுத்து..
பிஞ்சுகளைக் கூட்டிப் பெயர்ந்து பிடித்திழுத்து
அஞ்சியஞ்சி வீழ அடித்திழுத்தார்-நஞ்சுகளாய்
எங்கே இடித்திழுத்தார் எங்கிருக்கா ரென்றநிலை
எங்கும் குமுறுமலை ஏர்!

உணவின்றி மருந்தின்றியும் இறப்பு...
உணவும் குடிநீரும் இன்றி முதியோர்
கணமும் இறக்கின்றார் காணீர்-வணங்காமண்
கப்பலில் போனதுவோர் காலத் துணவுகளை
ஒப்புவிக்கா ஆட்சியது ஊனம்!

தமிழர்மண் பறித்தெடுக்கச் சதி...
முகாமுக்குள் வைத்து முதுசத்து மண்ணை
தகாது பறிக்கவே தாயம்-புகாவாறு
முள்ளுகம்பி போட்டு முடக்கி அதற்குள்ளே
தள்ளிவதை செய்குதடா தாட்டம்!

எட்டப்பர் கூட்டும் கூட்டம்..
எட்டப்பர் துட்டர் எழியர் அடிமையென
துட்டப்ப ரோடு துகில்கிடப்பார்-பட்டியென
மண்ணைப் பறிகொடுக்க வாய்தொடுக்க மாட்டாதார்
கண்ணிலே குத்துகிறார் காண்!

இருபதினாயிரமும் கருணாநிதியும்..
இருபதி னாயிரம் ஓர்நாள் இறக்க
கருணா நிதியாரும் கண்டார்-பெரும்தில்லை
சென்றார் கதைத்தார் பெரும்பதவி பெற்றாரே
நன்றெம்மைச் சாகவிட்ட நாதர்!

நடிகர்களை ஏவிவிட்டு...
ஆந்திரவில் ஓர்நடிகன் சென்னையிலும் ஓர்நடிகன்
நீந்திவிளை யாடிவைத்து நின்றாரே-சாந்திடலில்
ஈழமண் கொன்றோரை இந்தியத்தில் ஏற்றிவைத்த
ஆழமே எங்களின் ஆப்பு!

சுயமிகளால் வெந்த தமிழீழம்...
சுயநலங்கள் ஏற்றிவைத்த சொந்த நலனில்
அயலீழம் கொன்றாரே ஆரீர்-கயமைகளால்
எட்டப்பர் இந்தியர் ருஷ்யமும் சீனாவும்
கெட்டவராய்த் தொட்டழித்தார் தேசம்!

-சோலைக்குயில்
(picture:Mary statue distroyed by the lanken bombing)

Sunday, June 14, 2009

பிரபாகரம்


பிரபாகரம்!

தேவனெ உதித்த தீரன்!
பிரபாக ரப்புதல்வன் பெட்புமிகக் கொண்டு
வரமாக வந்துதித்த மாறன்-குரலாகக்
கோவில் தரும்தெய்வம் கொற்றமிறை தாம்பாடும்
தேவன் எனவுதித்த தீரன்!

இவன்மொழி மண்ணின் வேதம்
சொல்லில் இவனுரைத்தால் தெய்வமிடும் வீரமொடு
வில்லில் இவனுரைத்தால் வெற்றியிடும்-கல்லிலே
மந்திரத்தில் மாங்காய் மயக்க முடியாதான்
இந்தயுக வார்ப்பே இவன்!

எட்டப்பர் பலர் கட்டபொம்மன் ஒருவனே!
பெண்டுபல் கண்டோர் பிடிமாது கண்டவர்கள்
கண்டவழி கண்டு கடித்தவர்கள்-உண்டுவர
எட்டப்பர் ஆனவர்கள் எல்லோரும் தீயர்எம்
கட்டபொம்மன் மட்டும் கடவுள்!

இவனும் தூயன்..இவன்படையும் தூயபடை
என்றுமிவன் தூயன் இவன்படையில் வந்தாராய்
அன்னமென நின்றோர் அறமாதர்-வென்றபுலி
வேங்கைப் படைவகுத்து வேதமாய் நற்றமிழை
தாங்கிநடந் தானிவனே தம்பி!அறம்வெல்லும் அறிவன்!

நம்புவான் நம்ப நரிவேலை செய்தாலே
தும்பிவான் போலே திரியானே-நம்பியவர்
கெட்டவராய் மாறிக் கிளர்ந்துபடை தந்தாலும்
வெட்டியறம் செய்வான் விரதன்!

போர்க்கைதி கண்ட பிரபாகரன்!
சிங்கப் படையவரைச் துட்போர் பிடித்தாலும்
எங்குமவர்க் கின்னல் இவன்வையான்-சிங்களத்துப்
போர்ப்படஞன் பத்திரமாய்ப் போன்பின்பு தானுவந்து
வார்த்தைகளால் நன்றிசொன்னான் வையம்!

மாதரை மதித்த மாமகான்!
மாதுக்கள் நாடான் மணிநிலத்து மக்களின்பால்
பாதுக்கை யானவனே பாரறியும்-சூதுவைத்துப்
போனவர்போல் போகான் பிரபாகம் ஒன்றாலே
ஆனதிவன் மண்ணின் அறம்!

வேரார் பரணி இவன்!
மூண்ட கனத்தாலே முற்றிலுமாய் இந்தியத்தின்
பேண்ட குணத்தாலே போரிழந்தோம்-யாண்டும்
பிரபாகரத் தோன்றல் பெருநிலத்து வேரார்
பரணிக் கிவன்தெய்வம் பார்!


கூன்நிமிர்த்த வந்த கோ!

பிறந்து வரும்பொழுதே பெய்நிலத்திற் கானான்
இறந்து குறிப்பெழுதான் என்றும்-குறைமனிதன்
தான்சாவான் பாரீர் தலமுறையும் எம்தலைவன்
கூன்நிமிர்த்த வந்திடுவான் கொள்!

பிரபாகரத்தாய்!
பேச்சு எலாம்நீதி பொன்விழியில் மண்சுவடு
மூச்சு எலாம்தூய மேவுமறம்-பூச்சாகிப்
போயகலான் நிற்பான் பிரபாகப் புத்தகமே
தாயகமாய் வந்துதிக்கும் தாய்!

-சோலைக்குயில்

Wednesday, June 10, 2009

காட்டிக் கொடுத்தான்..


இருந்து காட்டிக் கொடுத்தவன்
இறந்ததாயும் காட்டிக் கொடுத்தான்..

--------------------------------
போரில் நடந்த புலிகளின் தடங்கள்
புத்தகங்களாக மலர்ந்தபோதுதான்..
உலகம் வியப்புக்குள் இறங்கியது..

முறிப்புப்போர், முற்றுகைப்போர், உடைப்புப்போர்,
ஊடறுப்போர் என எண்ணற்ற வகைகள்
போர்ப்பரணிகளாக விரிந்தன..

பல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில்
பாடப் புத்தகங்கள் ஆகின.

இழப்புகளிலிருந்தும், இறப்புகளிலிருந்தும்
உயிர்த்தெழுந்தது தமிழினம்.

இருப்புக்கும் உரிமைக்குமான அறுபது ஆண்டுகால
இரத்த இறைப்பு தமிழன் இனத்தின்
தார்மீகத்திற்கானது.

மகிந்த சிந்தனை என்ற மதத்த சிந்தனை
தமிழன் மரணத்திற்காகவே எழுதப்பட்டது.

மண்ணின் அபகரிப்புக்காகவே தமிழனுக்கு
மரணம்படுக்கை கொடுக்கப்படுகிறது.

இராசபக்ச இன்று இராட்சதபக்சவாய்
ஆகிக்கொண்டபோதுதான்
இலட்சம் மக்களின் குருதி
ஆறாய் ஓடியது.

குஞ்சும் குருமானுமாய் தமிழன்
கூட்டி அள்ளப்பட்டான்.

இந்தியக் காந்தி வம்சம்
ஈழத்தமிழனின் இறப்புக்காக
இலங்கைக்கு இறைத்துக் கொடுத்தது.

மேற்குலகம் பார்த்துக் கதைக்க முடிந்ததே ஒழிய
மரண ஓலத்திற்கு ஒரு
மண் அள்ளிப்போடக்கூட முடியவில்லை..

வன்னியில் மரண ஓலம்..
வதைமுகாம்..
கண்டியில் குளுகுளு வெப்பத்தில்
கதைத்துக் கொண்டார் பான்கிமூன்.

எங்களை இறக்க வைத்த இந்தியம்
போர்க்காலக் குற்றங்கள்
போர்த்தப்பட்டிருக்கும் இலங்கவை
காப்பாற்ற நிற்கிறது ..

எங்களுக்கு யார்துணை?

உலகவீதிகளில் நின்று
உரக்கக் கூவினோம். ஆனாலும்
கூட்டி அள்ளிய முள்ளிவாய்க்காலின்
கொடுமையை யார்தான் தடுத்தார்கள்.?

பொங்கி எழுந்த எங்கள்
குரல்கள் பூமிக்கு அடியில்
போடப்பட்டபோதுதான்..
இராசபக்ச எரித்து முடித்தான்.

பாதுகாப்பு வலயமென்று
பாடி அழைத்து
ஊதி எரித்த இந்தக் கொடுமையைப்
பார்த்தபின்னாலும்
அய்யன்னா அமைப்பு
அரச விருந்தாளியாக வந்துபோகிறது..

ஆனாலும்..
தீர்வுகள் மறுக்கப்பட்ட எங்கள்
பூமியில்,

தேச இனம் எரிக்கப்பட
பாச நிலங்களில்..

இனி அந்நியனுக்குப் பாதபூசை
செய்யப் பக்கத்தில் இருக்கின்றன.
பாவ சென்மங்கள்..

இருந்து காட்டிக் கொடுத்தவன்
இறந்ததாயும் காட்டிக் கொடுத்தான்..

ஆமாம் எங்கள் கைகளே
எங்களின் ஒத்தடங்கள்..

அய்நா மன்றை
அரங்காய் மாற்றுவோம்

இணையத்தளங்களில் உண்மையை
உரைப்போம்.

இனத்திற்காக எழுந்து நடப்போம்.

அகிலத் தெருக்களில் அறம் எழுதுவோம்.

உலகத் தமிழா உறக்காதே..
உறங்காதே..

எழுந்து நடப்பாய்..
இனமாய் எழுவாய்..
-எல்லாளன்.
நன்றி: தமிழர் தகவல்..

Sunday, June 7, 2009

இந்தியா.


புலிவெண்பா..
வன்னி வரலாற்றுப்போர்
அத்தியாயம்-04
இந்தியா.


இந்தியா புண்ணிய பூமியா?
புண்ணிய பூமியென்றும் பொற்கீதை நாடென்றும்
எண்ணியதோர் பாரதமின் றிப்படியா?-குண்டெறிந்து
ஈழத் தமிழர் இறப்பில் மகிந்தனுக்கு
சூழக் கைகொடுத்தார் சொல்!

இரசீவ் கொன்றது ஏழாயிரம்
இலட்சம் கொன்றனள் சோனியா கூட்டு
இரசீவார் அன்றேழு ஆயிரத்தைக் கொன்று
சிரசறுத்து வந்தகதை சொன்;னோம்-அரக்கரென
இன்றுசிறீ லங்கா இரசாய னக்குண்டால்
கொன்றெரிக்க இந்தியமே கூட்டு!

இந்தியா உருவாக்கிய இட்லர் இராசபக்சா
இந்தநூற் றாண்டதினில் இட்லர்க்கும் மேலாக
மந்தெரித்தல் போலே மடியவைத்தான்-இந்தியமே
சொல்ல மகிந்தன் சுவடழித்து வன்னிமண்ணை
கெல்லி எறிந்தானே கேள்!

உலகை அண்டவிடாமல் இந்தியா..
இந்தியம்தான் எல்லாம் இரசீவான் பாணியிலே
சந்தி முழுவதிலும் சாக்காடு-உந்துலகம்
ஓடிவரக் கூட ஒருவரையும் அண்டாமல்
மூடி அழித்தாரே மூடர்!

மக்களைப் புதைகுழிக்கு அனுப்பிய இந்தியா
முப்பதி னாயிரமாய் மேல்மக்கள் சாவேற்க
முப்பதி னாயிரமாய் ஊனமுற-துப்பலாய்க்
குண்டு எறிந்துவிழக் குப்பையாய்த் தானீந்து
சண்டி புரிந்தாளே சோனி!

இந்தியா தன்வேலையைப்
பார்க்கவெனக் கூறும் பக்சர்கள்

ஒருவருமே இல்லாமல் ஊரழித்த பின்னால்
செருக்கோடு இந்தியத்தைச் சொல்லிக்-கருக்கோடு
கோத்தபாயா சொல்லும் குறிச்சொல்லில் இந்தியர்க்கு
வாத்தியார் வேலையென்றான் வார்!

சீனா கோர்த்த இந்தியக் கழுத்து முத்துமாலை
சீனாவான் பாகிஸ்தான் சேர்ந்த இலங்காவை
ஏனோதான் அறியாயோ இந்தியமே-மூனாவாய்
முத்து மணிமாலை முடிச்சிறுக்கும் சீனாதான்
குத்திவரப் பாரடிநீ கேடு!

அழப்பிகளே இன்று இராசபக்ச அணி
புலியை அழித்துவிட்டு பேயெல்லாம் கூழாய்
எலியார்க்கு மாலையிட்டார் இன்று-வலிமை
இழந்தானே பிள்ளையான் எங்கோ மறைந்துவிட்டான்
அழப்பிகளே இன்றோர் அணி!


இந்தியப்பழி ஈழமெழுதிய சரிதம்
இந்தியத்தாற் சூழ்ந்தவினை ஈழம் அழிந்துபட
வந்த பழியொன்றும் மாறாது-உந்துலகம்
எங்கும் தமிழர்க்கு இந்தியமே ஊறுசெய்யும்
சங்கறுத்து நிற்குதடா சாற்று!

பாருலகம் எல்லாம் பழியேற்றும் இந்தியா..

வேருலகம் எல்லாம் விதந்துயரும் தமிழர்களை
கூரெறிந்து செயலாற்றிக் கேடாற்றும்-பாருலகில்
இந்தியத்துக் கென்ன இருந்தமிழன் சாவின்மேல்
வந்துபழி யாற்றுதடா வார்!

அய்நாவில் இலங்காவைக் காப்பாற்றி இந்தியா..

போர்க்குற்றம் கொண்ட கொழும்பார் அரசின்மேல்
நூர்க்குற்றம் அய்நா நொடிக்குகையில்-பார்க்குத்தன்
வல்லளவும் சொல்லி மகிந்தரசைப் காப்பாற்றி
கொல்லெழியர்க் கிந்தியமே கோ!

இலட்சம் தமிழ்மக்கள் இறந்ததிற்கு
ஒருவார்த்தை சொல்லாத சோனியா!

இத்தனை மக்கள் இறந்தார்க் கொருவார்த்தை
சுத்தமாய் இல்லாத சோனியா-நத்துகிற
பேயிலங்கை நாடிப் பிடிகையில் சீனாதான்
காயிறுக்கக் காட்டுமடி காதல்!

பிரபாகரனைக் கொல்ல சோனியா-
கருணாநிதி போட்ட கூட்டு

மாநிலத்தில் மூக்கா மனதுபடை யாளுகையில்
பூநிறத்தில் மாற்றமெதும் போடாது-மானமகன்
எம்ஜீயார் போனபின்பு இ;ன்தமிழர் மாநிலத்தின்
செம்மையெலாம் போனதடா செப்பு!
-Solaikkuyil

Friday, June 5, 2009

அய்நா மண்குதிரை


புலிவெண்பா..!
இந்தியக் கொடுமையும்..
அய்நா மண்குதிரையும்..


அய்நாவின் வஞ்சிப்பு
வக்கில்லா அய்நாவும் வஞ்சித்து விட்டதென
இக்கணத்தில் ஊடகங்கள் ஏடுஇட்டார்-துக்களமாய்
ஆயிர மாயிரமாய் அள்ளுமக்கள் தானிறக்கும்
பேயிறங்கப் பார்த்திருந்தார் பித்தர்!

அய்நா ஒரு மண்குதிரை
மண்குதிரை நம்பி மறிகடலை நீந்திவரக்
கொண்டுலகம் பார்ப்பதுவும் கேடாமே-குண்டுகளால்
பிய்த்தெறிந்த சாக்கிடங்கைப் பேசாமற் பார்த்திருந்த
அய்நாவால் என்னபயன் ஆர்!

சதீஷ் நம்பியாரும் விஜய் நம்பியாரும்..
தம்பியாம் நம்பியார் தக்கனுக்கும் தானவனின்
நம்பியார் அண்ணனோ நாயகர்க்கும்-கக்கமிட்டு
ஆலோச னைசொல்லும் அச்சு மலையாளிச்
சாலோச னைக்குண்டோ சாறு!

சரணடையச் சொல்லி சாக்கொடுத்த சதி..
வெள்ளைக் கொடியுடனே வேளைவா என்றபின்னே
கொள்ளிப்பேய் சுட்டுவைத்த கேடுஎன்ன-குள்ளர்
தெரிந்தும் அய்நாவைக் கேட்டபின்னே சென்றோர்
சரிந்ததுவும் நம்பிச் சதி!

கண்டியிலே பேசிவந்தும் காணாத பான்கீமூன்..
அய்நாச் செயல்மூனார் அக்கிரமம் சொல்லாமல்
பொய்நாவாய் நின்றிலங்கா போய்வந்தார்-மெய்நாவாய்
நின்றுலகம் செய்தல் நிகழுலகம் வைக்காமல்
மன்று எதற்கோதான் மன்!

ரைம்தாள் புரிந்த தர்மம்..

திரைம்ஸ்தாள் மானிடத்தின் தேடல் நடத்தி
உரைத்தார் இலங்காப்பேய் உண்மை -வரைந்தார்
இனத்தமிழர் வன்பதைப்பு ஏடெடுத்துக் காட்டி
மனத்தளவில் வென்றார் மனிதம்!

இனத்தைக் கொன்றபின்னும்..
இந்தியா எம்சாவுக்காய்..

பல்லாயிர மாய்மக்கள் பட்டழித்த பின்னாலும்
கொல்லாதி ருக்கக் கொள்ளவில்லை-சொல்லுறுத்தி
இந்தியா மூர்க்கம் இருந்தய்நா மன்றத்தில்
செந்தமிழர்க் கின்னலிட்டார் சொல்!

இந்தியாவின் சதியில் தென்னாபிரிக்கா..
எங்களுக் காக இருந்ததென் னாபிரிக்கா
சிங்களத்திற் காகவெனச் சேர்ந்தளித்தார்-முங்குளித்து
இந்தியா செய்த இயமப்பி ரச்சாரம்
உந்துபழி யாச்சேர் உலகு!

பக்கமிருந்த பன்னிரண்டு நாடுகள்..பன்னிரண்டு நாடுகளாய்ப் பக்க மிருந்துலவி
இன்றிலங்காப் போர்க்குற்றம் என்றுரைத்தார்-இன்கனடா
அய்ரோப்பா ஒன்றியம் ஆர்பிரித் தானியா
மெய்யுரைத்தார் எங்கதுயர் மேவி!

எமக்கு இந்தியா செய்தபழி
என்றும் அழியாது..

பாழ்பட்ட இந்திப் படுபாவிச் சோனியர்கள்
ஊழ்பட்டுப் போக எமையழித்தார்-ஊழ்வாய்
உருச்சியா சீனாவும் உக்குபா கிஸ்தானீர்
இரச்சாய னம்கொடுத்த எத்தர்!
-சோலைக்குயில்.

Tuesday, June 2, 2009

இராணுவக் கடைசிநாள்..



இராணுவக் கடைசிநாள்..

கதறக் கதறக் கருக்குலைத்தான் பெண்கள்
உதற உருக்குலைத்தான் உத்தன்-பதறவே
தாய்முன்னே பிஞ்சை தறித்துப் பறித்தெடுத்து
பேய்போலே வற்பிசைந்தான் பேய்!

பத்துபதி னைந்தான பாற்சிறுவர் ஆயிரமாய்
கொத்துவெனப் பல்லோரைக் கொண்டுசென்றான்-புத்தநில
வீடுகளில் வேலைசெய விட்டிருக்கான் பின்னாளில்
பாடுகிற சிங்களனாய்ப் பார்க்க!

தங்கத் தமிழ்மகளிர் தார்க்கூந்தல் கத்தரித்து
பொங்கும் புலியென்று போட்டழித்தான்-சிங்கபடை
கற்பழித்தான் கொன்றான்காண் கண்டதுண்ட மாக்கியவன்
பற்றைகளில் விட்டெறிந்தான் பார்!

நாளையொரு சந்ததியாய் நம்தமிழர் இல்லாமல்
வேளையொரு தந்திரமாய் வேரழித்தான்-கோளை
இனம்படக் கொன்று இசுத்திரியாய் மாறி
வனத்தரக்க ராய்நின்றான் வார்!

கோத்தபாய வென்ற துட்டப ரம்பரையான்
அத்துபடி கற்பழிக்க ஆணையிட்டான்-மூத்திரமாய்
நக்கிக் குடித்து நமதெட்டப் பர்களெலாம்
பக்கமெனச் சிங்களத்தே பார்!

இருந்தபோதும் காட்டி இடம்பெயர்ந்தான் அந்தக்
கருணாவெட் டப்பன்தான் காணீர்-பெருந்தலைவன்
வார்சடலம் ஈதென்று மார்தட்டிச் சாவுற்ற
ஓர்சடலம் தானுரைத்தான் ஓர்!

இடக்ளசான் துள்ளி எழுந்தான் மகிந்தன்
அடக்கிவைத்த ஆட்சியிலே ஆள்வான்-மடக்காய்
மடக்கென்று செம்புலியை மார்தட்டிப் பேசி
அடக்கென்றான் அந்நியற்காய் ஆ!

அரசியலார் நடேசன் அகிலத்து ஓர்வால்
கரவெள்ளை காட்டவே கண்டும்-பரதேசிச்
சிங்களத்தான் சுடவேதான் சேர்புலித் தேவனொடு
வெங்களத்திற் செத்தாரே வீரர்!

போர்க்கைதி யாயிருந்த பொல்லார் பெரும்படைஞர்
ஊர்ப்பிள்ளை போலே உவந்தளித்து-ஏரேழ்வர்
பத்திரமாய்ப் போகவிட்ட பண்புலியைக் கொன்றானே
புத்திகெட்ட புத்தபடை போ!

சிங்களத்தில் ஓர்மகனும் சாக விலைகொடுக்காத்
தங்கமென நின்றான் தலைவனே-பொங்குமுளம்
ஆரப் பெருங்குணத்தால் ஆரமுதன் ஆனானே
சூரியப் பொன்மகனார் சொல்!
-சோலைக்குயில்.

Sunday, May 31, 2009

வன்னிப் போர்ப்படலம்



புலிவெண்பா!
வன்னிப் போர்ப்படலம்



இராட்சதன் வந்தான்!

புலிவெண்பாப் போர்ப்பரணி புத்தகமாய் யாக்கிச்
சிலைசெய்த தாற்போலும் செய்தேன்-மலைபோலே
நிற்கின்ற வேளை நிலமே குருதிவிழப்
பற்பிளந்து வந்தானே பக்சன்!

குழந்தைகளைக் கொன்று குவித்த இனவழிப்பு!

இராட்சதனாய்ப் பண்டை இசக்கதைகள் போலே
இராசபக்ச வந்தான்காண் இன்று-கசக்கூறாய்க்
குஞ்சும் குருமானும் கொன்று சவக்காடாய்ப்
பஞ்சுநிலம் தீயிட்டான் பார்!

மோடனுக்குத் தீகொடுத்த சோனியா!

இந்தியத்துச் சோனியா ஈழத் தமிழர்களை
முந்தி யழித்திடவே மோடன்கை-மந்திரமாய்க்
கந்தகத்தைக் காட்டிக் கடிவாள மிட்டாளே
சந்ததியே வெந்ததடா சாற்று!

மந்திக்கை மாலையென மாண்டார் தமிழர்
தீக்குளித்தான் முத்துகுமார் தேசமெங்கும் எம்முறவு
ஆக்குவித்த செந்தணலும் ஆராரே-நாக்குளித்த
இந்தியத்துச் சோரம் இருந்தமிழர் தாயகத்தை
மந்திப்பூ வாக்கியதே வார்!

ஆயிரமாயிராய் அழிந்த சிறுவர்!
ஆயிரமாய்க் குஞ்சு அழகுச் சிறுமழலைத்
தாயரொடு தந்தையும் தான்செத்தார்-பேயரக்கன்
நாலுதிசை யூடேயும் நாசகுண்டு வீசியதால்
சாலுழக்கு எல்லாமும் சா!

மரங்களிலெல்லாம் சதைச்சிதறல்
மண்கிடங்கு எல்லாமும் மக்கள் பதுங்குகுழிக்
கண்மருங்கல் எல்லாமும் கஞ்சலென-விண்சிதறி
வார்மரங்கள் கூடு வழிப்பாதை யாமெங்கும்
ஊர்சிதறக் குண்டெறிந்தார் ஊர்!

கழிவாகி நின்ற கருணாநிதி
கருணா நிதியாரும் காட்டாப்புக் காட்டி
முருக்காகி நின்றதுதான் மிச்சம்-பெருக்கோடிச்
சேர்ந்தொருகால் தில்லியிலே சேர்ந்தார் பதவிக்காய்
ஊர்ந்தார் எமக்கில்லை ஓர்!

இராசயனக் குண்டுகள் nகாடுத்த காந்தி குடும்பம்
விண்ணளந்த ஓலங்கள் வீடில்லை ஊனில்லை
தண்ணீர் பருக்கின்றிச் சாவெடில்கள்-கண்ணிழந்த
போதியாப் போலே பொழிய விசக்குண்டைக்
ஊதிக்கொ டுத்ததடா இந்தி!

பிரபாகரன் பெருமையைப் பிடிக்காத இருவர்
மத்தியிலே சோனியாள் மாநிலத்தே தீமூக்கா
செத்தீழம் போகவெனச் செய்தாரே-புத்துலகம்
போற்றும் பிரபாப் பெருந்தலைவன் கொன்றுவிட
ஏற்றிவர்கள் தான்நடந்தார் ஏர்

சோனியா குடும்பத்தைச் சூழ்ந்தபழி சாகாது
இந்த வரலாற்றை இந்தியமே தான்நடத்தி
சிந்துரத்த மாக்கியதே சொல்லாயோ?-அந்தகராய்க்
கொன்றொழித்த காதைக்குக் கூனியாய்ச் சோனியா
நின்றழித்தார் என்றபழி நீளும்!

-சோலைக்குயில்

Saturday, May 23, 2009

அழுகின்றோம்..


அழுகின்றோம்..
ஆனாலும்..
எழுகின்றோம்...!


இருபத்தியோராம் நூற்றாண்டு
இராசபக்சா என்ற கொடியோனின்
தமிழன் இனவழிப்பால்
இரத்தவெடில் பூசி;க்கொண்டது..

இந்திய-இலங்கைக் கூட்டில்
சகுனிகளும் கூனிகளும்
மகுடிகளாக்கப்பட, ஈழ மக்களின்
மனித அவலம்-மரண ஓலம்
பூகோளக் கோடுகள் எங்கும் இரத்தமயமானது..

பொன்மனச் செம்மல் எம்ஜீயார் இல்லாத
தமிழகம் இன்றும் வெறுமையாக இருக்கிறது..

பிரபாகரன் என்ற மாமேதையின் அழிப்புக்கு
உறுதுணையாக-எதிர்ப்பார்த்துக் கருணாநிதி என்ற
காசுமேடு ஈழப்பிரச்சினையில்
கதைவசனம் எழுதியது.

தமிழகம் கொந்தளித்தும்
அமிழச்செய்தது கருணாநிதி-காங்கிரஸ்
கொத்தளம்..

அழுதான்..அழுதான்..
உலகம் முழுவதும் தமிழன் அழுதான்..

தீபமும் மெழுகும் உருக்கிய தீபங்களில்
தேசமெங்கும் தமிழன் கண்ணீர் கரைபுரண்டுகொண்டது..

கருகிய தமிழன் உடலங்களுக்காய்
கறுப்பு உடையில் கதறினான் தமிழன்..
தாயர் அழுதுபுரண்டனர்..

மார்பில் அடித்து மயங்கினார்கள்..

ரொறன்ரோ நகரத்து அடுக்கிய
மாடிகளின் நடுவேயான
அகண்ட தெருக்களில் தமிழன்
மெழுகுவர்த்திகளோடு இலட்சமாக
நடந்தபோது, கதறியழுத தமிழினத்தின்
காட்சிகளை கனடிய மனிதங்கள்
கணக்கில் எழுதின..

எங்கள் உறவுகளே..

ஈழமண்ணில் சாம்பல் ஆகிய
சொந்தங்களே..

கருவில் உதிர்ந்த
காலைப் பிஞ்சுகளே..

கற்பில் வதங்கிய
கன்னிச் சுடர்களே..

காடை அரசால்
சிதறிய தோடை நிலமே..

அழுகின்றோம்..
அழுகின்றோம்..

உருளுகின்ற துளிகளாய்
எங்கள் விழிகள்
உங்களுக்காக..

எட்டப்பம் இறைச்சியும் தண்ணியும்
அடித்து இராசபக்சா வெற்றியை
இங்கே கொண்டாடினார்கள்

கெட்டவர்கள் இன்று வெல்லலாம்..

ஆனால் நாளை வெல்லமுடியாது..

பிரபாகரம் அழியவில்லை..

அழியாது..!

அது செங்குருதியாக்கப்பட்ட
தமிழனின் உயிர்..

ஈழத்தில் புலிகளாய் இறந்தவர்களே..

நீங்கள்..
உலகத்தமிழனைப் புலிகளாய்ப்
பிறக்க வைத்தீர்கள்..

உங்கள் சாம்பல்களில் உலகத்தமிழன்
தேம்பி அழுகின்றான் ..

உண்மை..

ஆனால் ஓம்பிய விடியல்
உயிர்கொண்டிருக்கிறது..

இந்தநேரம் மட்டும் உங்களுக்காக
எங்கள் விழிகள்..


உங்கள் சாம்பல்களிலும்
உயிர்களிலும்
இது எங்கள் சத்தியம்..

இன்னும் எழுவோம்..
இனியும் எழுவோம்..
-புதியபாரதி.

Friday, May 15, 2009

தமிழா எழுவாய்!


கொத்துகொத்தாய் விழுகிறதே என்னினமே
செத்துமடி கின்றதடா எம்நிலமே
யுத்தவெடில் இராசபக்சா கேட்கிலனே
மொத்தமென தமிழினத்தை அழித்தனனே!

ஊருலகம் சொல்லியென்ன சிதறுவாயன்
யாருரைத்தும் கேட்கவில்லை குதறுவாயன்
பேரலையாய் தமிழனெலாம் பூமிநின்றும்
நீரலையாய் ஒழிந்ததடா நீதியெல்லாம்!

இந்தியத்தாள் கொடுத்தகையே ஈழமண்ணின்
அந்தியத்தை எழுதுகிறாள் சோனியாத்தாள்
வெந்துமடி கின்றதடா தமிழினமே
எந்தைவழி அழிப்பதுவோ அந்நியனே!

உலகமெலாம் ஆர்ப்பரிக்கும் செந்தமிழா
உன்கையில் இருக்குதடா எம்நிலமே
புலமனைத்தும் ஓர்குடிலில் எழுந்திடுவோம்
இராசபக்சாப் போக்கிலியை விரட்டிடுவோம்!
-எல்லாளன்
படம் நன்றி:தமிழ்ஸ்கை

Monday, May 11, 2009

என்னினிய தமிழகமே..!




என்ன சொல்லப் போகிறாய்
என்னினிய தமிழகமே
அன்னைமடி கருகுதே
ஆயிரமாய் மடியுதே.. என்ன..சொல்லப்

பின்னலிலே சோனியா
பின்னால் இருக்கிறளே
முன்னை இருந்தரக்கன்
மகிந்தன்கை பிடிக்கிறளே! என்ன சொல்லப்

கைகால்கள் இல்லையடா
கனிப்பிஞ்சு சிதறுதடா
பொய்கூறும் சிங்களத்தின்
பேய்க்கூடு சிரிக்குதடா! -என்ன சொல்லப்

தமிழகமே நீஎழுந்தால்
தாரணியே வெடிக்குமடா
உமிகளாய் ஈழமக்கள்
உயிர்ச்சிதறல் நிற்குமடா! -என்ன சொல்லப்

கட்டபொம்மன் தாய்நிலமே
கரிகாலன் வாழ்நிலமே
கெட்டவர்கள் கொலைவெறியில்
குதித்தெழடா தமிழகமே! -என்ன சொல்லப்
இன்றுனது கைகளிலே
இருக்குதடா பொன்வாக்கு
ஈழமண் விடுதலைக்காய்
எழுந்திடட்டும் உன்நாக்கு! -என்ன சொல்லப்
-புதியபாரதி

Sunday, May 10, 2009

மாதாவே உன்னை


மாதாவே உன்னை எண்ணி!

மாதாவே உன்னை எண்ணி
மனதினில் வழுது கின்றேன்
நீதானே தமிழை எந்தன்
நெஞ்சினில் அளித்தாய் உற்குப்
பூதானம் எதுவும் செய்யேன்
போற்றியுன் முகத்தைக் கோர்த்துப்
பாதானம் மட்டும் யாத்தேன்
பாரினில் நிலைத்தேன் தாயே!

மாதாவே அன்று என்னை
மடியினில் வைத்து நின்ற
போதான போதிற் சிங்கர்
புரிந்திடும் கொலையின் சேற்றை
சூதாளர் கொடுமைப் பேயைச்
சொல்லிநீ தந்தாய் அம்மா
வேதாளம் முருக்கு ஏற
மகிந்தவாய் இன்று கண்டேன்!

வயலிலும் வரப்பும் வாய்க்கால்
வண்ணநெற் தோட்டம் எங்கும்
அயலிலும் கோவில் ஆக்கி
அளித்தனை சுயத்தின் வெற்றி
நியதியின் வாழ்க்கை முற்றும்
நின்றுநீ துயரை வென்றாய்
முயலினைப் போலே பாவாய்
மொழிந்தனன் உனக்கே அம்மா!

மாதாவின் தினத்தில் இந்த
மகனுனை வழுதும் காலைப்
போதாகும் போது விண்ணின்
பெருமலை யாகச் சேரும்
நாதாற்கும் ஒலிப ரப்பில்
நல்லதாய் உன்னை எண்ணிப்
பாதானக் குரலே செய்தேன்
பண்பெனும் பெற்ற தாயே!
-புதியபாரதி

Saturday, May 9, 2009

தமிழா உன்வாக்கில்


தமிழா உன்வாக்கில்
தமிழீழம் இருக்கிறது!

அம்மாதான் வெல்ல வேண்டும்
அகிலத்துத் தமிழர் சென்னை
அம்மாநி லத்தில் ஈழ
அறைகூவல் வெல்ல வேண்டும்
சும்மாவாய்க் குமாரன் செத்தான்
சொல்லுவீர் தமிழ கத்தீர்
கும்மாளக் கூத்தின் றில்லை
கொண்டுவா இனத்தின் வெற்றி!

பணக்குலை கொண்ட மாந்தர்
பலாச்சுளை போலக் காசு
மணத்திடும் தீமூக் காவார்
வந்தனர் சோனி யாத்தாள்
பிணக்குடில் ஆக்கும் லங்காப்
பேயினை வளர்க்கும் போலிக்
கணக்குகள் தோற்க வைப்பீர்
காலத்தின் பணியீ தென்பேன்!

சீமான்பா ரதிரா சன்பேர்
செறிகடல் வைக்கோ தாசன்
கோமான்கள் ஈழ மார்பர்
கொண்டதோர் அணியே இன்று
நாமாளும் இனத்தின் வெற்றி
நாயக இருப்பே காட்டும்
ஆமாநீ அளிக்கும் வாக்கே
அளவிலாத் துயரம் போக்கும்!

இப்படிக் கூத்து ஒன்றை
இந்தியம் தந்த தேனோ?
செப்படிச் சோனி யாக்கள்
செத்திடும் ஈழக் காட்டை
எப்படி இயக்கு கின்றார்
இரசாய னங்கள் போடும்
மப்படி மகிந்தன் கோட்டை
வளர்க்கிறார் தமிழா பாராய்!

வெற்றியாய் ஈழம் வைப்பீர்
வேதனை போக வைப்பீர்
முற்றிலும் தமிழ மண்ணின்
முகத்தினைப் பற்றி நிற்பீர்
குற்றமாய் நிற்போ ரெல்லாம்
கொடியேற்ற விட்டால் எங்கள்
சுற்றமெல் லாமும் போகும்
சுதந்திர வாக்க ளிப்பீர்!
-புதியபாரதி

Wednesday, May 6, 2009

வதையிலும் எழுவோம்!


அன்னையெங்கே தந்தையெங்கே?
அண்ணனெங்கே தங்கையெங்கே?
பிஞ்சுவெங்கே பிள்ளையெங்கே?
பெரியரெங்கே உறவுஎங்கே?

அள்ளிவிழுந் தெரியுதையா!
அக்கினியில் புகையுதையா!
கொள்ளியிடும் சுண்ணமிடும்
குலமெங்கள் கருகுதையா!

கற்பழித்துச் சாகவிடும்
கயவன்படை பாருமையா!
நெற்குவியல் கொடுத்தவர்கள்
நிதம்பசியில் சாகுதையா!

அகதியென்று சென்றவரை
ஆலையென இடிக்கிறானே
துகளுணவுக் கேங்கியெங்கள்
தேசமக்கள் சாகிறானே!

பிள்ளைகளைப் பிரித்தெடுத்து
பேயனெங்கே கொண்டுசென்றான்
வள்ளிகளின் உடலமெல்லாம்
வருகுதையா முகாம்களெல்லாம்!

பிரித்தானிப் படக்கலைஞர்
பெரும்வதையைப் படமெடுத்தார்
நரியிலங்காப் படைக்கலத்தின்
நாசவதை உலகமிட்டார்!

சோனியாவாள் சிங்களத்தை
திருமணம்தான் செய்துவிட்டாள்
கூனியளாய் வந்தபின்னால்
கொட்டுதடா எங்கரத்தம்!

சிங்களமே எரிக்குதடா
சிதறுதேங்காய் ஆக்குதடா
இந்தியமே ஆயுதத்தை
இந்தாவென் றளிக்குதடா!

பத்துதரம் அய்நாவில்
தைமூரை யுதைத்தபின்னும்
செத்துவிழுந் தாபோச்சு
சுதந்திரத்தை எடுக்கலையா?

கொத்துதுன்பம் இறைத்தாலும்
குருதிவிழுந் திறைத்தாலும்
செத்துவிழா தீழமடா
சுதந்திரத்தை எழுதுமடா!
-புதியபாரதி


அழுகின்றாய் என்னினமே
அகிலமெலாம் அழுகின்றோம்
விழுகின்றாய் என்னினமே
வீதியிங்கும் நாம்விழுந்தோம்!

வித்துடல்கள் சுமந்தவெங்கள்
வேர்மண்ணை விடமாட்டோம்
எத்தனைதாய் இடர்வரினும்
ஈழமண்ணை மீட்டிடுவோம்!

-புதியபாரதி

Monday, May 4, 2009

காலத்தின் வீச்சாய்



காலத்தின் வீச்சாய்
கனிந்தனை அம்மா வாழ்க!


வாழிய தலைவி அம்மா
வாழிய ஜெயல லிதா
வாழிய அறத்தின் கீற்றே
வாழிய குரலின் வீச்சே
வாழிய ஈழ மண்ணின்
வரமிடும் கால ஊற்றே
வாழிய வாழி என்றே
வாழ்த்துகின் றோமே வாழி!

நேற்றெலாம் எங்கே என்ன
நிகழ்விலே இருந்தால் என்ன?
காற்றிலுன் குரல்கள் மாறிக்
காலமே பகைத்தால் என்ன?
போற்றிடும் மாந்தர் பின்னாள்
போகநீர் கண்டால் என்ன?
நாற்றினை ஈழ மென்றே
நட்டதே போதும் அம்மா?

பொன்மனச் செம்மல் வாக்குப்
பொதிந்தவுன் குரலின் நோக்கு
சொன்னதைச் செய்யும் உந்தன்
சீரிய கொள்கை நாக்கு
மன்னிய உலக முற்றும்
வந்ததே தமிழன் மன்றில்
கன்னலாய் அமுதத் தேனாய்க்
கனிந்ததே வாழ்த்து கின்றோம்.!

அன்னைமண் சிதறு கின்ற
அலறுவாய் ஓலம் கேட்டும்
சின்னபிஞ் சிறுவர் வாலைச்
சேயிழைத் தாயர் தந்தை
பன்னமாய்ச் சதையின் துண்டாய்ப்
பகைவனால் அழிக்கும் போதில்
சன்னமாய் எழுந்த உந்தன்
சரித்திரக் குரலே கண்டோம்!

ஆயிரம் கதைகள் கோடி
அரும்கவி இயற்றி வண்ணப்
பாயிரம் பரணி பாடிப்
பார்ப்புலம் வரித்தால் என்ன?
தாயினைப் போலே வந்த
தங்கமே நிகரே இல்லாய்!
கோயிலாய்த் தமிழாய்க் குன்றாய்க்
கொற்றவம் சமைத்தாய் வாழ்க!

-புதியபாரதி

Friday, May 1, 2009

தங்க முகுந்தா..


தங்க முகுந்தா..

சிங்கமுலாம் பூசிச்
சிந்திக்கின்றாய்..

கொஞ்சம் சிங்களத்திடமே செல்..

பாதுகாப்பு வலயமெல்லாம்..
பாதுகாப்பு வலயம் இல்லையென்று
அய்நா சொல்கிறதே..

உன்பொய்நா எதையோ பேசுகிறதே..

கிளிநொச்சி செல்ல வேண்டுமென்று கேட்ட
மிலிபாண்ட் கிலிகொண்ட சிங்களத்தையே
பார்த்து வந்தார்..

தலைமயிரை அறுத்து
தங்கையரின்மேல் வதையுறவு
செய்கிறானே..
வரும்செய்தி தெரியாதா?

நம்பியல்லவா சிங்களத்திடம் வந்தார்கள்..
அகதி முகாம்களில் இருந்து
கும்பிடக் கும்பிட எத்தனை நூறு நூறாய்
இழுத்துச் செல்லப்பட்டார்கள்..

சிங்க மலத்தைச்
சிரசெல்லாம் பூசுபவர்கள்.. பற்றி
என்ன நினைக்கிறாய்..

கருணாவையும், டக்ளஸ் கூட்டத்தாலும்
அரச ஏதுக்களாலும் கடந்த வருடம்..
ஏழாயிரவர் இறந்தார்கள் என்று
இன்று வந்த அமெரிக்கத் தகவல் கூறுகிறதே..

அறிவாயா?

அய்நா மடியில் தமிழன் பிரச்சினை
எப்படிச் சென்றது..?

சிங்கக் கொடுமை அல்;லவா?

போரும் சீரழிவும் எங்கே இருந்து வருகிறது..?
வேரும் உறவும் இல்லாதவனுக்கு என்சொற்களின்
வேதம் புரியாது வேடனே..

-எல்லாளன்.

Thursday, April 30, 2009

பரமேஸ்வரா..


உண்ணாது மண்ணை
உயிரோடு எழுதும் பரமேஸ்வரா..

சுப்பிரமணியன் பெற்றெடுத்த சுந்தரனே..!

உன்னை எனக்கு அல்ல.. அல்ல..
எமக்குத் தெரிகிறது..

ஒரு திலீபனாக..

ஒரு பூபதி அன்னையாக..

காந்தியத்தை வாந்தியெடுத்த
காந்தி குடும்பம் காணாத கர்மவீரன் நீ..

சென்னியில் இருந்து வன்னியைக் காட்டும்
உனது உயிரின் வரைபடத்தை
இப்பொழுது உலகம் பார்க்கிறது..

உனது முகத்தின் ஒளி இன்னமும் இருக்கும்..
அந்த இருபத்தி நான்காவது நாள் இது..

சீனாவின் வீட்டோவினால் அய்நாவில்
உன்சரித்திரம் அடங்கிவிட்டது..

உனது மக்களைக் கொன்று புதைக்கும்
சிங்களக் கூடாரத்தை இந்த
உலகிற்குக் காட்டுகிறாய் நீ..

குன்றாய் விரியும் சடலக் குவியல்
இன்றும் வருகிறது..

ஆழக்கடலில் நீளம் புதைந்த
சிங்களக் காட்டுமிராண்டிகள்..
பிராண்டி எடுக்கும் பேய்களாய்..

சோனியா தன்பிள்ளைகளுக்குக்
கூனியாய் எழுதும் கதையில்
வாழ்நாள் முழுதும் பழியைச் சுமக்கும்
பரதேசி ஆகிறாள்..

கழிஞன் கதையாய் கருணாநிதியின்
கபட நாடகங்கள்..

உலகம் இன்னமும் உன் உயிரின்
விலையை உணரவில்லை..

உன்னை எமக்குத் தெரிகிறது..

இந்த வரலாறு உன்னை
இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும்..

நீயொரு பிரபா மண்ணின்
பிம்பம்..

உன் பாதார விந்தங்களில்
பாப்புனைகிறோம்..

நாளைமட்டும் அல்ல
இன்றும் உனதே..
-புதியபாரதி

Tuesday, April 28, 2009

ஒபாமாவுக்கான வேண்டுகோள்.




83இல் காடையர்களை கொலைசெய்ய அனுப்பிவிட்டு
யேயார் தூங்கியதால்தான் தமிழன் நாட்டை விட்டுப்
புறப்பட்டான்.
58இல் கொன்றார்கள்.
பாணந்துறையில் ஐயரைக் கொழுத்தியது முதல் எத்தனை
மதகுருமார்களைச் சுட்டும் எரித்தும் சிறீலங்கா கொன்றகதைகள் உலகில் யாருக்கும் தெரியாது..
இப்பொழுது தமிழ்ப்பெண்களை இராணுவமே சாப்பிடு என்று
கோத்தபாயா சொன்னானே யாருக்கும் தெரியுமா?

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு என்று கொள்ளையடித்த
நகைகளை அனுரதபுரத்தில் ஆமி விற்கிறானே
யாருக்கும் தெரிகிறதா?

ஊடகக்காரர்கள் என்ற கோதாவில் வந்து
கொம்பியூட்டர்கள் கொள்ளை அடித்துப் போகிறார்களே
யாருக்கும் தெரிகிறதா?

அல்லை, கந்தளாய், மணலாறு என தமிழன்பூமி முழுவதும்
பறித்த சிங்களவனை தமிழ் எழுத்தில் இங்கே
பதில் உரைக்கிறான்.

சிங்கள இராணுவம் பஞ்சமா பாதகத்தின் முழுவடிவம்.
புலிகள் அப்படியா?
எங்களுக்குத் தெரியும் அவர்கள் புனிதமானவர்கள்.
-சுந்தரா

மானுடம் உள்ள அமெரிக்கர்களால்தான் ஒபாமா நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்.
மானுடம் அல்லாத சிங்கள வெறியர்கள் குஞ்சும் குழந்தையுமாய் கொன்று தள்ளுகிறார்களே, உந்தன் மானுடத்தைக் காப்பாற்று..மனிதாபிமானத்தைக் காப்பாற்று.. தமிழன் மீதான இனப்படுகொலையில் இருந்து காப்பாற்று.. சில நக்குண்ணிகளுக்கு ஒரு இனத்தின் மீதான கொலைவெறி தெரியாது. ஒபாமா நீயும் தெரியாமல் இருந்தால்.. எல்லாம் புச்சுப்போல் ஆகிவிடும்..
-எல்லாளன்

Monday, April 27, 2009

புதைகுழி எங்களுக்கு மட்டும் அல்ல..


ஈழத்தமிழன் தலைகளில்
பந்தா அடிக்கின்றீர்கள்.

சோனியா ஒருகதை.

ராகுல் ஒரு கதை.

பிரியங்கா ஒருகதை.

மேனனும் நாராயணனும் தில்லியில் ஒருகதை
பேரரக்கன் இராசபக்சாவோடு இன்னொரு கதை.

கருணாநிதி எங்கள் கண்ணீரோடு
இன்னொரு கதைவசனம்..

முகர்சி இன்னொரு முகர்சிங் வாசிப்பு.

ப.சிதம்பரம் இன்னொரு பகிடி.

மகிந்தன் சொல்லுவதெல்லாம் பொய்.
சொல்லாத அத்தனையும் மெய்.

போர் வெல்லவெல்ல அவன் பேச்சு.
ஊர் இல்லாமல் தமிழனைக் கொல்லுவதே
அவன் மூச்சு.

ஈழத்தமிழன் மரணம் நீடித்தால்
கூனியாளை இத்தாலி அறுப்பாள் என
இந்த வரலாறு எழுதும்..

கருணாநிதிக்கு தமிழகத்தின்
கழிஞர் எனப்படுவார்..

ஈழத்தமிழன் வீரபரம்பரை.

எங்கள் மரணங்களில்
இன்னும் எழுவோம்.

சதியாளர்களே புதைகுழிகளை
எங்களுக்காகத் தோண்டாதீர்கள்..

அது உங்களுக்கும்தான்!

-சுந்தரபாண்டியன்..

Saturday, April 25, 2009

அறமே எழுந்துவா!




அறம்பாடு கின்றேனே அறத்தாளே எழுந்துவா
அசுரமடி கிழித்தெறிய ஆரோக ணித்துவா
திறம்பாடு கின்றேனே தீயூழித் தாயேவா
தீயர்பொய் சொல்லுகிறார் துரந்தரிநீ துடித்தெழடி
இறக்காடு நடத்துபவன் இராசபக்ச பாரடிநீ
இரசாய னக்குண்டை ஏவுகிறான் பாரடிநீ
மறக்காட்டுச் செந்தணலே மாகாளி துடித்துவா
மண்சாம்பல் ஆக்கிவரும் மகிந்தபடை அழித்துவா!

அன்றிந்திப் பேயரக்கம் அமைதிபடை என்றுவந்தார்
இரசீவின் கொடுமையிலே இனத்தமிழன் அழிந்தாரே
இன்றவளாம் சோனியாப்பேய் ஈழமண் அழிக்கின்றாள்
ஊழித்தீ அறம்காட்டு இவள்குணத்தை அழிக்காயோ?
சென்றவர்கள் தில்லிநகர்த் தேசத்தார் தீக்குணத்தால்
சிறீலங்காப் பொய்யருக்காய்த் தூதிட்டார் அழிக்காயோ?
கொன்றுபுதை ஆக்கிவரும் கூட்டாரைக் கண்டுவா
குஞ்சுகளே கருகுதடி குதித்துவா மறத்தாளே!

கருணாநி தியானே காசுமடி படுத்துறங்கும்
கழிவுபொய் சொல்லுகிறான் கண்டுவா செந்தணலே
பிரபாக ரன்தம்பி பிணமாக்கச் செய்வதற்காய்
பேசியவொப் பந்தமாய்ச் சோனியாக் கூட்டமொடு
கரம்கோர்த்துச் செல்லுமந்தக் காட்டாரைக் கொண்டுவா!
கணமொருபொய்க் கஞ்சலரைக் காணாயோ செந்தழலே
இரையாக்கி வாலயரை இறைஞ்சியள்ளி வல்லுறவில்
இராசபக்ச கோத்தபடை ஏவுகிறான் அழித்துவா!

ஈழத்தமிழ் உயிர்கள் இவர்களுக்கு விளையாட்டு
ஏழிலங்கைத் தீயாளே இறைஞ்சுகிறேன் எழுந்துவா
ஊழித்தீ யானவளே உத்தமியே குதித்துவா
இரசீவின் உயிருக்காய் இன்தமிழர் அழிப்பதுவோ?
ஆழிக்க டல்மகளே அதிரமண் இறங்காயோ?
அன்னைதந்தை சிறார்களென அலறுதடி பார்க்காயோ?
வாழியெனத் தமிழர்கை வந்துநீ வாழ்த்துகையில்
வதைகொடுக்கும் மகிந்தபடை வாலறுந்து போகுமடி!

சீதையவள் தொடுத்தாளே செந்தணலே எழுந்துவா!
திரபதை யம்மநகர்த் சுடுநெருப்பே எழுந்துவா!
பாதைத வறியதால் பாண்டியனை நீறாக்கிப்
பார்த்தகண் ணகியாளின் பண்புத்தீ எழுந்துவா!
நீதிக்கோ டழித்தவரை நீறாக்கு நீறாக்கு
நின்றுபார்மே னன்முகர்சி நாராய ணக்கும்பல்
கூதிப்பேய்ப் பொய்யரிடும் கூற்றங்கள் அழித்துவா
குடிலுயிர்கள் காத்திடவே கொழுந்தாளே எழுந்துவா!

-அக்கினிக்குஞ்சு
(Pray in every temple)

Wednesday, April 22, 2009

பிரபா என்னும் பரணித் தலைவன்!



வெண்பா
வாராது வந்த மனிதப் பெரும்தலைவன்
தேராது நிற்பவர்க்குத் தேசமில்லை-கூராட்சி
தின்று உயிர்கருக்கும் தீக்கொடுமைப் பேய்நாட்டை
என்றும் அறியாதோர் இத்தர்!

நீதி வழுவான் நெறிபிசகான் பின்னெண்ணி
மாதுக்கள் காணும் மனதுஇலான்-பூதசிங்கர்ப்
போந்தானும் கூடப் பொரியள்ளச் சென்றவரும்
மாந்தித் திளைத்தாரே மாது!

நற்குணங்கள் வாய்த்தவனாய் நற்றமிழைப் போற்றிவரும்
பொற்குணங்கள் கொண்டவொரு பேதமிலான்-அற்புதமாய்
மூன்று தசப்தங்கள் முன்னேற்றுப் பேருலகம்
ஒன்றாய்த் தமிழனிட்டார் ஓர்!

நாளைவரான் இன்னோர் நற்தலைவன் மண்மீதில்
தோளில் இவன்போலே தீரமுளான்-வேளையிது
ஒன்றே விடியல் உறுமண்ணில் வேராக்கும்
என்றே இந்நாள் எடு!
காப்பியக் கலித்துறை
பொல்லார் அசிங்கர் பொரியாரிடும் தீது கண்டே
எல்லா யுகமும் இழிவாரிலே இத்த ழிந்தோம்
கல்லார் மனமாய்க் கறையாகிய கொன்ற ழிப்பை
வெல்வோம் எனவாய்ப் பிரபாவெனும் வீர னுற்றான்!
விருத்தம்
செத்து அழிந்து சிதறினோமே
சிங்கப் புதரில் பதறினோமே
மொத்தி மொத்த முடிந்தோமே
மோடர் வதையால் அழிந்தோமே
இத்தால் இனியும் அழிவதுவோ?
என்றே உதித்தான் பிரபாவே
வித்தே விடியல் என்றிட்டான்
வீரன் வந்தான் தமிழ்நிலத்தே!
எண்சீர் விருத்தம்
தாழ்ந்தகுடி தாழ்வதுவோ தருக்கன் வாளில்
தமிழ்நிலமே அழிவதுவோ தானை ஏற்று
மூழ்கும்போர் தனையாடி முத்துக் கொள்வோம்
மோகமண்ணைக் காத்திடவே வித்துக் கொள்வோம்
ஆழ்ந்துறக்கம் கொள்ளாதே அன்னை நாடே
ஆண்டவினம் துயின்றாலே அழியும் கூடே
வீழ்ந்தநிலம் வெல்லவென்றே பிரபா வந்தான்
வீதிமுற்றும் மங்கைவந்து வேங்கை என்றாள்!
கலித்துறை
தம்பி தாங்கிய தானையின் போர்ப்பறை தன்னில்
எம்பி வந்ததே ஈடிணை அற்றதோர் ஏற்றம்
அம்பி நோக்கிய அன்னைமண் விடியலின் அறமாய்
நம்பி யார்த்ததே நானிலம் முற்றிலும் நன்றாய்!
வஞ்சி விருத்தம்
வாழிய தலைவன் தேசம்
வாழிய வேங்கைப் போதம்
வாழிய புலியின் படையே
வாழிய உறவின் நிலமே
வாழிய பிரபாத் தம்பி
வாழிய பரணித் தலைவா
வாழிய தளபதி யோரே
வாழிய அரசிய லோரே
வாழிய மக்கள்கூடே
வாழிய வாழிவாழி!

Sunday, April 19, 2009

தமிழா எழுந்து வா!




எங்களின் கூடுகள் இடிந்து நொருங்கின
எங்களின் குருதிகள் நிலத்தில் இறைத்தன
சிங்களச் செருக்கன் தீக்கிரை யாக்கினன்
எங்குமே ஓலமாய் இறக்க முடித்தனன்
தங்கும டங்களாய் தரணி இருக்கவோ?
பொங்கும னங்களே பூட்டிக் கிடக்குமோ?
இங்குபே ரிந்தியம் ஈழம் துடைக்குதே
சங்கிடும் தமிழகம் தாழ்ந்து கிடப்பதோ?

எங்குநீ என்னின ஈழ மைந்தனே
எங்குநீ தமிழகத் தீர இளைஞனே
கங்கையில் குளிக்கவா காலம் எடுக்கின்றாய்
நொங்கென அறுபடும் நிலத்தை மறக்கின்றாய்
எங்குநீ எங்குநீ இதயத் தமிழனே
எங்களின் மாந்தரே இதயம் துடித்துவா
சிங்களம் சோனியா சேர்ந்த அறுவடை
இங்குநீ பார்ப்பதா இன்றே எழுந்துவா!

-புதியபாரதி

Friday, April 17, 2009

அறத்தின் வெற்றி!




செந்தணல் ஏந்தி சுதந்திரம் எண்ணி
செங்களம் வந்தனை புலியே
சுகக்களம் எதுவும் சுகந்தமாய் வார்த்துச்
சுயநலம் கண்டிலாய் புலியே
சிந்துகள் பாடிச் செறிபகை ஊர்ந்து
சிந்தினை தற்கொடை புலியே
சுழலிடும் பூமிச் சுற்றிலும் தமிழர்
சொந்தமாய் நின்றனை புலியே
வந்தனர் கொடியர் வல்லரக் கங்கள்
மகிந்தனைப் பிணைத்தனர் எனினும்
வன்மையெம் எதிரி வகைதொகை இன்றி
மடித்தனன் மக்களை ஆயின்
இந்தவோர் பொழுதும் ஏந்திய நாட்கள்
இன்றுனக் கானது யுகமே
எங்களின் தேச எழிற்கொடி அசைந்து
எங்கெலாம் பறக்குது புலியே!

எத்தனை வருடம் எத்தனை அரசு
எல்லமும் வென்றனை புலியே!
வெள்ளையர் நாடும் வீறிடும் அய்நா
வீதியெல் லாமதும் விளைந்தார்
எங்களின் மாந்தர் இன்றிடும் புயலே
இனப்படு கொலையதைப் பகர்ந்தார்
உள்ளமும் பற்றி உறவுகள் பற்றி
உயர்ந்தனர் தமிழகத் தோரே
உதிரங்கள் மாயும் உண்மைகள் காட்டி
உண்ணாதி ருக்கிறார் தாயர்
குள்ளம கிந்தன் குவலயம் முழுதும்
குதர்க்கமாய் பொய்யுரை தந்தான்
கொடுமையைக் கண்டு கொதித்தது உலகம்
கொடுத்தமுற் தடையினால் நொந்தார்
தௌ;ளிய தலைவன் செறிகளம் காணும்
சிறப்பினில் நின்றதெம் நிலமே
தியாகமாய்த் தலைவன் துருவிய வேட்கை
தேசெலாம் வென்றது அறமே!
-புதியபாரதி

Thursday, April 16, 2009

எழுந்து நிற்கும் புலத்தமிழர்



பாகிஸ்தான் சீனா ரஷ்யா
பாரதச் சோன்யா கூட்டம்
ஏகித்தான் வரித்தார் லங்கா
இராசபக் சாவின் பக்கம்
மோகித்து ஆயு தங்கள்
மூடையாய்க் கொடுத்தார் யுத்தப்
போகியோ தமிழன் சாவில்
பொரித்துமே எடுக்கின் றானே!

இனப்படு கொலையே என்று
இன்றுபே ருலகம் கண்டார்
கனத்துரு வாண்டா மண்ணில்
கக்கிய சரிதம் போலே
மனத்திலே பேயாய் ஆடும்
மகிந்தனும் இரண்டு நூறாய்
தினம்தினம் கொல்லு கின்றான்
தேசெலாம் கேட்டா ரில்லை!

சுனாமியாய்த் தமிழன் மட்டும்
திரண்டனன் உலக முற்றும்
அனாதைகள் இல்லை மண்ணின்
அறுகம்புல் உறவே என்று
வினாடிக்கு வினாடி பொங்கி
வேதனை உகுத்து கின்றான்
கனாவிலும் காணாக் காட்சி
கண்டது உலகம் தானே!

உண்ணாது உலக மன்றை
உலுக்கிய தமிழன் கண்டேன்
எண்ணாது இருந்த வெள்ளை
ஏடெலாம் எழுதக் கண்டேன்
புண்ணாக மனது எற்றும்
பொங்கிய மக்கள் கண்டேன்
விண்ணாகப் பரந்த சேதி
விறைப்பிலும் ஒலிக்கக் கண்டேன்

தமிழனே புலிகள் என்றார்
புலிகளே தமிழன் என்றார்
இமயமாய்த் திரண்ட சுற்றம்
இடித்திடும் பலமாய் நின்றார்
அமைதிதான் வேண்டும் என்றார்
அன்னைமண் காப்பீர் என்றார்
இமையொடும் கண்ணே போல்வர்
எங்களின் உறவே என்றார்!

மன்றெலாம் இலட்சம் மக்கள்
மகுடமாய்த் தமிழாய் நின்றார்
கொன்றொழிக் கின்ற சிங்கக்
கொடியரைக் காண வைத்தார்
இன்றெலாம் அய்நா மன்றம்
இனவழிப் பதனை நேரிற்
சென்றுமே பகுக்கா விட்டால்
சொந்தமண் இறக்கும் என்றார்!

உலகமெல் லாமும் ஈழம்
உரைத்ததெம் உறவீர் எங்கள்
நிலமது எரியும் போது
நிரையெனக் குவிந்தீர் மண்ணின்
குலமென வேற்று நாட்டில்
கொடியுடன் வந்தீர் எங்கள்
புலித்தமிழ் மண்ணை இந்தப்
புவியெலாம் வரைந்தீர் வாழ்க!

-புதியபாரதி