ஓ..ஓ...
என்பூமி எரிகிறதே..
கூவித் திரியும் நரபலிச் சிங்கம்
கூட்டித் தின்னக்
குதித்தது காணடா..!
மான மண்ணை
ஈனனின் அரக்கம்..
இன்னுமா?
இன்னும் இன்னுமா..?
அது முடியாது..
அது முடியாது...
சாம்பல் பூத்த வியட்நாம்
வயல்களே..
ஆயிரம் மைல்நீள
எரித்தியச் செங்கடலே..
கிழக்குத் தீமோரில்
எரிந்த காடுகளே..
நீங்கள் உயிர்த்ததுபோல்
நாங்களும் எழுவோம்..
இந்த வரலாறு எரிந்ததாய் இல்லை..
எங்கள் மண்ணின் அறுகம்புல்
மீண்டும் வளரும்..
உயிரை இறைத்த எம்தமிழ் உறவே
நீவிர் பதிந்த சுவடுகள்
நிமிர்ந்து நடக்கும்..
புதியபாரதி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment