தேசம்தந்த திருத்தலைவன்!
பிரபாகரன் எங்கள் தலைவன் ஈழப்
பிரபஞ்சம் தந்த முதல்வன்
கரிகாலன் அவன் பேராம் தமிழன்
காணுமுல கெல்லாம் அவனூராம்!
தூங்கிக் கிடந்த இனத்தில் வந்த
தூரன் இவனே வழிகாட்டி
வீங்கிக் கிடக்கும் சிங்க ளத்தை
வீழ்த்த வந்த தேரோட்டி!
வேலிக் குள்ளே வாழ்ந்த மங்கை
விடியல் மண்ணில் போர்நங்கை
தாலி நஞ்சாய் அணிந்து வந்தாள்
தானை கொண்டு அவள்நிமிர்ந்தாள்!
கண்ணில் தோன்றும் வண்ண ஒளியே
களத்தை நிமிர்த்தி வரும்புலியே!
அண்ணன் போதம் ஆர்த்திடும் வேதம்
அணங்காய்த் தருமே கரும்புலியே!
இந்திய வஞ்சர் இலங்கா நஞ்சர்த்
திசைகள் அனைத்தும் இவனுடைப்பான்!
சிந்தும் சுதந்திரப் பண்கொண்டு வருவான்
தேசம் தந்த திருத்தலைவன்!
(பிரபாகரன் எங்கள் தலைவன் என்ற எனது
முன்னைய பாட்டின் முதல் வரிகளில் எழுதப்;பெற்றது)
-புதியபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment