Saturday, June 27, 2009

புலிவெண்பா...!




இனப்பழிப்படலம்
ராசபக்சனும் கூனியுள்ளமும்..

அள்ளிவைத்த இந்தியமும் இத்தாலிச் சோனியளும்
கொள்ளிவைத்த போர்ப்படலம் கொள்ளீரோ-முள்ளிவாய்க்கால்
எல்லாமும் தீயாய் எரிந்தகதை கூனியளின்
சொல்லாம்ம கிந்தன் சுதி!

எல்லாம் தெரிந்தும் சதிசெய்த பான்கிமூன்
பான்கீச் சதியில் விசய்நம்பிக் கேடான
கூன்பட்ட அய்நாவின் கூத்தடிப்பில்-ஏன்சென்றார்
இன்றுவரை சொல்லால் இழுத்தகதை அல்லாமல்
துன்பத்தில் என்னமயிர் ஆச்சு!

ஆயிரம் இறந்தால் போர்க்குற்றம் இலட்சம் இறந்தால்..?
போர்க்குற்றம் என்றேதான் போட்டார் இசுரேலைக்
கூர்க்குற்றம் என்றதிந்திச் சோனியமே-மூர்க்கமென
எம்பதியில் வந்து இலட்சமாய்க் கொன்றோரைக்
கும்பத்தில் ஏற்றிவைத்தார் கொள்!

இந்தியத்தின் போர்க்குற்றம்..
இத்தா லியறுப்பாள் எம்தா லியறுத்தாள்
கொத்தாகக் குஞ்சுளைக் கொன்றாளே-இத்துணையில்
போர்க்குற்றம் இந்தியர்கே போடுவீர் மன்மோகன்
கூர்க்குற்றம் சோனியட்கும் சேரும்!

கருணாநிதி செய்த காலப்பழி..
செந்தமிழர்க் கென்று சிறப்புக் கடைவைத்த
நந்திகரு ணாதிக்கும் நாய்க்குற்றம்-சொந்தமக்கள்
பிள்ளை நலம்கருதித் தில்லிக்குப் போனாரே
கொள்ளிவைத்தார் ஈழமென்றே கொள்!

வெள்ளைக் கொடியுடனே வந்தோரைக் கொன்றசதி..
வெள்ளைக் கொடிகொண்டு வேளைவா என்றுவிட்டு
தள்ளிச் சுடவைத்தான் தக்கனுமே-முள்ளியிலே
தேவன் நடேசன் திசைவந்து கொன்றோர்க்கு
பாவபழி தீயுமிழும் பார்!

தமிழினக் கொடியரைத் தன்மடியில்..
நிலத்தை இனத்தை நிசத்தில் அழித்த
மலங்களைச் சேர்த்தான் மகிந்தன்-குலமாம்
தமிழர் குடிக்குத் தமிழெதிர் ஆன
உமிழெலாம் சேர்த்தான் உறி!

கிழக்கும் வடக்கும் கிடைத்த பழிகள்..
கிழக்கின் உதயம் உழக்கி நிற்கும்
முழக்கும் வடக்கின் வசந்தம்-அழப்பும்
கருணா இடக்ளஸ் கனிந்தவிக் கூட்டு
இருமும் கசங்கள் ஏர்!

பத்திரிகைகள் எரிப்பு: தேர்தல் குளிப்பு
செய்தியினைப் போடென்றார் செய்யாமல் விட்டதிற்கு
மொய்யாய் எரித்தார்கள் முட்டைகள்-கையில்
இராணுவம் வைத்து இடராய் வடக்கின்
கிராணமாய்த் தேர்தலாம் கேள்!

பழியர் ஒருநாள் பறப்பர்..!
எல்லாமும் எல்லா இடர்ப்பொழுதும் வல்;லாரின்
பொல்லாய் இருக்காது பெற்றமண்ணே-அல்லாட
வைக்கும் அரசும் வடிகிடக்கும் எட்டப்பர்த்
துக்கும்ஓர் நாளில் துறக்கும்!

ஈழமக்கள் கொன்றபழி இவர்களுக்கே..
ஈழமண் கொன்றோராய் இந்தியமும் பிள்ளைகளின்
வாழவென மட்டும்தீ மூக்காவும்-ஆழமென
ஆட்சிகண்டர் அல்லாமல் அன்னைமண்ணின் சாவெல்லாம்
நீட்சியிந்த நீசர் நிழல்!

-சோலைக்குயில்

படம்: நில்தை அழித்த சுவாமிநாதனும்
தமிழ்க் குலத்தை அழித்த மகிந்தனும்..

2 comments:

  1. நல்ல வெண்பா நான் கேட்டு வெகுநாள்
    பொல்லாத தமிழன் பொது இளவை---சொல்லாமல்
    கல்லாக உள்ளான் கண்கெட்ட பகைவன்
    செல்லாக வந்த வெண்பா சுவை

    ReplyDelete
  2. உருத்திராவுக்கு..

    உருத்திரா மிகநன்றி. உங்கள் கருத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
    வெண்பாவின் இலக்கணம் இன்றைய இளம் கவிஞர்கள் தெரியவேண்டும்.
    அதற்காக சில விளக்கம்,

    உங்கள் வெண்பா இப்படி இருப்பின் நன்று.

    நல்லவெண் பாகேட்டு நாள்வெகுவாய் ஆச்சுமடா
    பொல்லாத் தமிழர் பொதுவிளவைச்-சொல்லாமல்
    கல்லாக வுள்ளானே கண்கெட்ட துர்ப்பகைவன்
    செல்லாக வந்தவெண்பா தேன்!

    வெண்பா இலக்கணம்:
    காய் முன் காய் வரும், மா முன் நிரை வரும், கூவிளம் முன் காய், காய் முன் நேர் என்பதும், கனிச்சொல் வராததும் வெண்பாவின் இலக்கணம்.


    நல்லவெண்(கூவிளம்) பாகேட்டு(தேமாங்காய்) நாள்வெகுவாய்(புளிமாங்காய்) ஆச்சுமடா(புளிமாங்காய்)
    பொல்லாத்(தேமா) தமிழர்(புளிமா) பொதுவிளவைச்(கருவிளங்காய்)-சொல்;லாமல்(தேமாங்காய்)
    கல்லாக(தேமாங்காய்) வுள்ளானே(தேமாங்காய்) கண்கெட்ட(தேமாங்காய்) துர்ப்பகைவன்(புளிமாங்காய்)
    செல்லாக(தேமாய்காய்) வந்தவெண்பா(புளிமாங்காய்) தேன்!(தேமா)


    நான்தான்-தேமா
    நமதே-புளிமா
    நல்லவெண்-கூவிளம்
    பாகேட்டு-தேமாங்காய்
    (தேமா, புளிமா, காய், கூவிளம், என்பன வெண்பாவின் இலக்கண வாய்ப்பாடு. உங்களின் நல்ல வெண்பா இந்த வாய்ப்பாட்டில் எழுதின் உச்சம் பெறும்.
    தவறாக எண்ணவேண்டாம். இன்றைய இளம்கவிஞர்கள் மரபுப் பாடல்கள் இயற்றின்
    கருத்தும் சுவையும் அற்புதமாக இருக்கும். ஏனென்றால் புதுமைச் சொற்கள்
    நிறைய அறிந்தவர்கள் இன்றைய இளம் கவிஞர்கள். மரபு இலக்கணம் படித்தல்
    பெரும் சிரமம் என்று எண்ணாதீர்கள். அடிப்படையைக் கற்றாலே போதும்.
    -சோலைக்குயில்.

    ReplyDelete