Tuesday, April 7, 2009

வீழமாட்டோம்..!




ஒருக்காலும் வீழமாட்டோம்..!

ஐயகோ ஈது என்ன
அரக்கமா வெறியா எங்கள்
தையல்கள் மான பங்கம்
தந்ததே மகிந்தச் சேனை
மையலாய்த் தவழும் சின்ன
மழலையை நிரையாய்க் கொன்றார்
ஐயவென் தமிழீர் தொப்புள்
அன்னைமண் எழுந்து வாடா!

எரிகுண்டு கொத்துக் குண்டாய்
இரசாய னத்துக் குண்டாய்
கரிக்குண்டு எகிறும் சிங்கக்
கந்தகம் எரிக்கு தந்தோ!
நரிக்குண்டு சோனி யாத்தாள்
நம்மீழக் கூனி யானாள்
மரிக்கின்ற சனத்தைப் பாராள்
மனிதமே இல்லாக் கூராள்!

மருத்துவச் சேவை என்று
வார்ப்படை அனுப்பி வைத்தாள்
கருத்தொடு பிரபா தன்னைக்
கண்டுகொல் லென்று விட்டாள்
பொருத்தியே வுக்க ணையை
பூட்டியே முல்லை விட்டாள்
பருத்தபூ தம்மாய் வந்து
பத்திர காளி யானாள்!

இந்தியா இல்லை என்றால்
எம்மினம் சாகா தம்மா
பந்;தியாய்ப் பிணத்தை வைத்துப்
பார்க்குதே; வேகு தம்மா
முந்திரச் சீவான் வந்தும்
முடித்தனெம் இனத்தை; வான
அந்தியே பொழுதே இந்த
அழித்தவள் வாழ மாட்டாள்!

இரசீவான் இறந்தான் என்றால்
ஈழமா அழிய வேண்டும்
முரசெனும் இந்தி ராவை
முடித்தமண் அழித்தா விட்டார்
நரபலி யாடும் இந்த
நாசரால் தமிழன் சாகும்
வரகதை இவட்கே உண்டு
வரலாறு சொல்லும் பாராய்!

ஒருகாலும் வீழ மாட்டோம்
இருப்போம்நாம் வெல்வோம் இந்தத்
தெருநாய்கள் தங்கப் பாலு
சிதம்பரம் சோக்கள் கூட்டம்
பெருச்சாளிக் கருணா நெற்றிப்
பேருக்கு அறிஞன் பட்டம்
உருத்தான பொய்யர் எல்லாம்
ஒழித்தோடிப் பிடிக்கின் றாரே!

அறுபதாண் டுகாலம் எங்கள்
அன்னையைக் கொன்றார் முற்றும்
நிறையென இலங்கை மண்ணை
நின்றதெம் புகலைச் சொத்தைக்
கறையெனக் கொன்ற காடைக்
கந்தலுக் குதவு கின்றீர்
மறையென எழுவோம் எங்கள்
மானமண் வெற்றி காண்போம்!

-புதியபாரதி

2 comments:

  1. //எரிகுண்டு கொத்துக் குண்டாய்
    இரசாய னத்துக் குண்டாய்
    கரிக்குண்டு எகிறும் சிங்கக்
    கந்தகம் எரிக்கு தந்தோ!
    நரிக்குண்டு சோனி யாத்தாள்//

    உங்களின் உணர்வுகள் நன்றாக தெரிகின்றது

    ReplyDelete
  2. உணர்வுத் தெறிப்புடன் எழுதப் பெற்றுள்ள அருமையான அறுசீர் மண்டிலப் பாக்கள்.

    'சொல் சரிபார்ப்பை'(word verification-ஐ) நீக்குங்கள்!

    ReplyDelete