Wednesday, April 8, 2009

இந்தியப் பரிசு(கேடு)


எத்தனை காலம்தான்..?-05
இந்தியப் பரிசு(கேடு)

அமைதிப்படையில் இருந்து
ஆரம்பிக்கப்படுகிறது.

கற்பிணி உட்பட அறுபத்திநான்கு பேரை
தெருவில் நிரையாகக் கிடத்தி
கனரக வாகனத்தை மேலேற்றிக்
கொன்ற ஒரு படைக்குப் பேர்தான்
அமைதிப்படை.

ஆறு இயக்கங்களை அரவணைத்துப்
புலிகளைக் கொல்ல ஏவிய இரசீவின்;
செயலுக்காகவே எழுதப்பட்டது
இலங்கை-இந்திய ஒப்பந்தம்.

மிருசுவில் அகதிமுகாமல் ஒரு
பாதிரியாருக்கு முன்னால் இந்தியப்படையால்
மாதர்மேல் நடத்தப்பட்ட பாலியல் இம்சையைப்பார்த்து
மயங்கினார் அந்தப் பாதிரியார்.

அன்றைய வீரகேசரியில் இதற்குப் பதிவுண்டு.

ஏழாயிரம் தமிழர், எண்ணற்ற புலிகள்,
சோறு கொடுத்தவன்-வீறு படைத்தவர் என்று
நூறு நூறாகக் கொன்றது இரசீவின் அமைதிப்படை!

பேச்சுக்கு அழைத்துப் பிரபாகரனைக் கொல்லென்றார் தீக்சித்.

ஜொனி என்ற புலிவீரனைப் பேச்சுக்கு
போகும் வழியில் மறைந்திருந்து
கொன்றது அமைதிப்படை.

திருமலையை தமிழன் பூமியாக நிலை நிறுத்திய
புலேந்திரன், குமரப்பா போன்ற பன்னிருவேங்கைகள்
சமாதான காலத்தில் பிடிக்கப்பட்டபோது-
ஆயுதத்தைக் கையளிக்கக் கேட்டுக் கொடுத்தபின்னால்
கைது செய்யப்பட்ட இந்த வேங்கைகளை
விடுதலை செய்யாமல் கொழும்பிடம் கொடுத்தபோது
இந்தப் பன்னிருவரும் நஞ்சுவில்லை அருந்திச்
சாகவிட்டது இந்தியம்..

காந்தீய தத்துவத்தில் உண்ணாது இறந்த
திலீபன், பூபதி அன்னை, போன்றவர்களது
தியாகத்திற்குப் பதில் சொல்லாது இறக்க வைத்தது இந்தியம்..

இந்துக் கடலில், கிட்டு முதலான ஒன்பது
வேங்கைகளைச் சுற்றி வளைத்துக்கொண்ட
இந்தியத்தால் ஒன்பது வேங்கைகள்
தங்களைத் தாங்களே நீரில் எரித்தார்கள்..

ஆலாலு, தர்மரைக் கொன்றார்கள்.

பழிகளைப் புலிகள்மேல் போட
நடத்தப்பட்ட நாடகம் இது.

இன்றைய நாட்கள்..

வான்புலிகள் வவுனியாவில் அடித்தபோதுதான்
இந்திய வலைப் பின்னணியின்
ஆட்கள் பிரசன்னம் காட்சிக்கு வந்தது..

கொழும்பில்-இன்னமும் கொழும்பின் சுற்றுத் தளம் எங்கும்
இந்திய ராடர்கள்..

சமாதானம் பேச வருவதுபோல் வந்து
பிரபாவைக் கொல்லும் திட்டத்தை
வகுத்துச் சென்றது இந்தியம்..

கல்மடுக்குளம் உடைக்கப்பட்டபோது,
இறந்தவர்கள் ஏராளம் இந்திய இராணுவம் என
ஊடகங்களில் பதிவு இருக்கிறது..

புலிகளின் படகுகள் வராதபடி இன்று
முற்றிலுமான இந்தியப் படைப் பின்னணியில்
முல்லைத்தீவில் ஏவுகணைத் தளம்..

மக்களுக்கு வைத்தியம் என்ற பெயரில்
புல்மோட்டையில் இந்திய இராணுவ முகாம்..

புலிகளால் முடிக்கப்பட்ட இலங்காவின்
ஐம்பத்தியேழு-ஐம்பத்தியெட்டு இராணுவக்
கலங்களின் பின்னால் இந்தியப்படை
இன்றாகி நிற்கிறது..

நுங்கப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்
நூற்றி இருபத்திஐந்து இந்திய இராணுவச்
சடலங்கள் இருப்பதாக தமிழகச் செய்திகள்..

போர்செய்வது யார்?

புலிகளை அழிக்க ரசீவான் போட்ட திட்டம்
இன்று இத்தாலி அறுப்பாளின்
பின்னாலும் தொடர்கிறதே..

பதவிக் குளிப்பில் உதவிக் களிக்கும் கருணாநிதி
ஈழச் சடலங்களின் மீது நின்று
எத்தனை நாடகங்கள்..

பராசக்தி கதைவசனத்திற்குப் பிறகு
ஈழசக்திக்கு இழிவுவசனம் அல்லவா கருணாநிதி
எழுதியபடி..

பதவி விலகுவோம் என வாங்கப்பட்ட
கடிதங்களுக்குப் பிறகு எத்தனை நாடகம்..?

சொன்னதைச் செய்தவன் எம்.ஜி.ஆர் ஒருவன்தான்
என்பதே இதுவரை சரித்திரம்..

சோனியா பேயாட்டம், இன்றைய
ஈழத்தமிழ்மண் மயானபூமி ஆக்கப்படுகிறது..

புலிகளால் துடைத்தெறியப்படுகின்ற போதில்
சிங்களர் துணைக்கு இந்தியம் போனதால்
ஈழத்தமிழன் பிணங்கள் அடுக்கப்படுகின்றன..

ஈழப்போர் வரலாற்றில் இல்லாத போர்!

இந்திய வல்லாதிக்க வரலாறு காலப்பழியாய்
சொந்தம் கொண்டாடப் போகிறது சோனியாக் குடுமி..

சிதம்பரம், தங்கபாலு, சோ, சு.சாமி போன்ற ஆசாமிகள்
தமிழன் வரலாற்றுப் பழியர்களாக
சுமையைக் கொடுக்கிறது சரித்திரம்..

கடத்திக் கடத்திச் தமிழ்ச் சிறுவர்களை அழிக்கிறது
காட்டாற்றுச் சிங்களம்..

தமிழன் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக்
கூடாது என்பதற்காக..
இளம்பெண்கள் வதைமுகாம்களில்
வல்லுறுவுக் கொடுமை..

ஆதரவுக் கரங்கள்போல் அகிலத்திற்கு அளந்து
நம்பி வருகின்ற இளையவர்களை
நாசுக்கா அழிக்கிறது சிங்களம்..

இந்தனைக்கும் யார் காரணம்..?

சோனியா.. சோனியா..

இத்தாலியில் இருந்து வந்தவளுக்கு
ஈழத்துத் தொப்புள் உறவு
எப்படித் தெரியும்..?

எத்தனை காலம்தான் இந்தக்
கொடுமைகள்..
-எல்லாளன்..

1 comment:

  1. என்ன ஒருவருமே பதிவிடவில்லை? ஏன்?

    ReplyDelete