Sunday, April 12, 2009

தமிழகத் தமிழா!

உன்வெற்றிக்கான கணக்கு இது!

இந்திய வஞ்ச கத்தால்
இன்றுசிங் களவன் வந்து
எந்தையின் எழிலாம் பூமி
எல்லமும் பற்றி விட்டான்
குந்தவோர் இடமும் இன்றி
குலமெலாம் குண்டில் செத்தார்
சந்ததி உறவே சென்னைத்
தமிழகத் தோரே எண்ணீர்!

முந்தியும் அமைதி என்ற
முகத்திலே வந்த போதும்
சந்தியில் தமிழர் கொன்ற
சரித்திரத் தோடே சென்றார்
இந்தியில் இருப்பா ளுக்கு
எம்தமிழ் தெரியும் தானோ?
அந்தியாய் அவளே இட்ட
அடியிருள் விலக வைப்பீர்!

எழுகநீ எழுக வெந்த
ஈழமா வேங்கை மண்ணை
தொழுதுநீ எழுக வண்ணத்
தோகையே தமிழி னூற்றே
அழுதமண் உறங்கா தப்பா
அவலத்தைத் தோளில் ஏற்றுப்
பழுதிலாப் புதிய ஏட்டை
பாரினில் ஏற்று வாயே!

புதுக்குடி யிருப்பில் மண்ணின்
புலிகளே செத்தார் என்று
வெதுப்பகப் பாண்கள் போலே
விளையுடல் காட்டி னார்கள்
அதுவெலாம் புலிகள் இல்லை
அதற்குளே இராணு வத்தின்
செதுக்கலென் றரூசன் சொன்ன
சேதியும் கண்டேன் அப்பா!

புலிகளின் காலம் போனால்
பின்னொரு தமிழன் இல்லை
வலிமைதான் இன்றே உண்டு
வடிவம்போய்த் பதரே வந்தால்
எலிகளே ஆளும் மண்ணின்
எட்டப்பன் சிங்க நாட்டின்
முலையிலே பாலை நக்கி
முகத்தமிழ் அழிப்பான் கண்டீர்!

இந்திய நாட்டின் கண்ணே
இன்றொரு கடமை யுண்டு
சந்ததி யெங்கள் மண்ணின்
சாதனை எல்லாம் வெட்டி
குந்தகம் செய்த தாலே
கொற்றவத் தமிழன் பூமி
நொந்துநொந் தெழுகு தம்மா
நினைப்பநீ தமிழின் நாடே!

புலிகதோற் றாரே இல்லை
புல்லர்தான் எல்லைக் கூண்டில்
வலியதற் காப்பு வைக்கும்
வடிவமாய்ப் போயே விட்டார்
அலையிலே ஆயி ரம்மாய்
அடித்துமே தீயர் தம்மை
உலையிலே வைத்த தீரம்
இன்னுமுண் டெழுவீர் தானே!

-புதியபாரதி

No comments:

Post a Comment