Friday, April 10, 2009

நவீன பூராயணம்..!


எத்தனை காலம்தான்..?-06

இந்த நேரம்முதல்..
நவீன பூராயணம்..!


நவீன பூராயணம் ஒன்று
புதுசாய்ப் பிறக்கிறது..

இங்கே கூனிக்குப் பதிலாய்ச்
சோனியா..

பாராளுமன்றப் பலகணி இல்லாமல்..

மாநிலம் சார்ந்த
மடக்கைகள் இன்றி..

இந்திய நாட்டின் இன்றைய ஆட்சி
இலங்கா நாட்டுக்கு
இராணுவத்தை அனுப்ப முடியுமா?

வான்புலிகள் வவுனியாவில்
வெளுத்த முகாம்களில் இருந்து
இந்த இந்தியத்தின் முதல்
முகமூடி கிழிந்தது..

பொட்டு வைத்த இராணுவன்களை
சிங்கள மகிந்தங்களுக்கு
இந்த இந்தியம்தான் விற்றுக் கொண்டிருக்கிறது..

கூனிக்குக் கொடுக்கும்
காணிக்கையாக
அப்பாவித் தமிழனின் சடலங்கள்
அடுக்கப்படுகின்றன..

வீட்டை எரித்து மூட்டைச் பூச்சியை
அழித்தவன் போல்
தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கும்
மகிந்தன் ஹிட்லரை மிஞ்சிய
ஹிட்லர் ஆக..

பெரிய வெள்ளி தினத்தில்
கனடியத் தலைநகர் ஒட்டாவா
பாராளுமன்றத்தின் முன்பதாக..

ஒரு ஐம்பதினாயிரம்
தமிழர்களின் எழுகுரல்
அகிலத்தை அசைத்தது..

தமிழனின் அச்சாணியைக் கழற்றி
அரசாணியைச் சிங்களன் கையில் கொடுத்த
பிரித்தானியாவில் இரண்டு இளைஞர்களின்
சாகும்வரை உண்ணா விரதம்...

இதில் ஒருவனின் குடும்பத்தில் தாயும் சகோதரங்களும்
சிங்களத்தின் எறிகுண்டில் வன்னியில், கடந்தவாரம்
மரணக்குழியில் விதைக்கப்பட்டார்கள்..

இந்தியத்தை எதிர்த்து காந்தீயம் கொடுத்த
திலீபன் சாவைப் போல்
வெள்ளை மனிதங்;களுக்கு முன்னால்
உண்ணா நோன்பு கொண்ட
ஈழத் தமிழர்களைக் கண்டு
வெள்ளை உள்ளங்கள் விக்கித்து நிற்கின்றன..

மேற்குலகின் பதினான்கு நகரங்களுக்கு
மேலாக சமநேரத்தில் ஈழத்தின்
தமிழினச் சந்ததியின்
ஏகோபித்த அசைகுரல்களைச் சுமந்தபடி..

காலத்தின்பழி கருணாநிதி மட்டும்..?

இந்த வரலாற்றின் செல்லாக் காசாக..

சோனியாத் தாயே ஈழத்தவனைக் கொல்லாதே என்று
ஈனக் குரலில் இந்தக் கலைஞன் ஏன் கத்தவேண்டும்..

ஈழத்தமிழனைக் காப்பாற்றும் முதற்சுட்டு விரல்
இந்தத் தமிழக முதல் அமைச்சனிடம்
அல்லவா இருக்கிறது...

தமிழ் முதலமைச்சன் கையில்
என்ன தாம்பூலமா இருக்கிறது..?

ஆட்சிக்குக் காவு கொடுத்தபடியே
ஆச்சியை ஏன் கெஞ்ச வேண்டும்...

ஏழு கோடித் தமிழராலும்
இன்று ஏற்கப்பட்ட தலைவன் யார்..?

உலகப் பந்தில் ஐம்பத்தாறு நாடுகளில்
அலகுக் தமிழனாக இருக்கின்ற
பிரபாகரன் எங்கே..?

ஒரு குப்பைக் கடுதாசியைக் கூட இந்தக்
கருணாநிதிக்குக் கையில் எடுக்காத-
எடுத்துக் காட்ட முனையாத-
உலகத் தமிழினமாக
இந்த முதலமைச்சன் மரியாதைகள்...
போகப் போகின்றனவா..?

சரித்திரத்தை எழுதக் கூடியவன்
எம்.ஜீ.ஆர் ஒருவனே என்று
இந்தக் கருணாநிதியின்
கவச வாகனம் மட்டுமே காட்டுகிறது அல்லவா?

இராணுவ மாமேதை பிரபாகரனைப்
பொறுக்காத கருணாநிதி..
சோனியாவோடு சேர்ந்து இயங்கும் சதி
இரண்டுமாக..
இன்றைய வன்னிக் குருதியின்
வடிவங்கள் தோழர்களே..

தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின்
ஒரு அழைப்பைக் கனிணிக்
கோப்பில் இன்று கண்டேன்..

மனிதம் சுமக்கின்ற தமிழ்நாட்டு
அமைப்புக்களுக்கெல்லாம்
வன்னித் தமிழனைக் காப்பாற்றும்படி-
உடனே எழுச்சி கொள்ளும்படி,
அழைப்பு அனுப்ப அறைகூவல்
விடுக்கும்படி கேட்கப்படுகிறது...

இதை வாசிக்கின்ற பெரியவெள்ளித் தினமான
இன்று ஈழச் சிலுவை சுமக்கும்
எமது உறவுகளே இந்த நேரம்முதல்
வீதிக்கு வாருங்கள்..

கருணாநிதியும் சோனியாவும் ஒருசேரச்
சாக்காடு எடுக்கும் ஈழத்து வீதியைக்
காப்பாற்ற எழுந்து கொள்ளுங்கள் ...

இன்னமும் ஒரு சில மணித்தியாலங்கள்
உங்கள் கரங்கள் உலகை
அசைக்காவிட்டால்..?

தொப்புள்கொடி உறவுகளின் சாம்பல் மேடுதான்
உங்கள் பார்வைக்கு வரப்போகிறது..

போதாக்குறைக்குப் புலிகளைக் கவனிக்க
இந்த ஏப்ரல் இருபதாம் திகதி
சோனியாச் செய்மதி விண்ணுக்குப் போகிறதாக
இன்றைய செய்தியை எங்களுக்காய்..
இந்தியா அனுப்பியிருக்கிறது..

தமிழ்கொண்டு எழுதுகின்ற
கரங்களே..
இந்தநேரம் முதல் வன்னியின்
மனித அழிவைக் காப்பாற்ற
மன்றுக்கு வாருங்களே..

எத்தனை காலம்தான் எங்கள் மண்ணில்
அந்நியன் காலடிகள்..

-எல்லாளன்..

(பிந்தியசெய்தி: தமிழகத்து மனித இதயங்களை எரிகின்ற வன்னியைக் காப்பாற்ற அரசியல்-மக்கள் எழுச்சிக்கு அறைகூவல் விடுத்து இளையவர்களின் அழைப்பு அகிலமெங்கும் பரவுகிறது)

No comments:

Post a Comment