Wednesday, December 24, 2008

சிறுவர் தமிழ்:

சிறுவர் தமிழ்:
மழை


மின்னல் மின்னி இடியிடித்து
மேகக் கூட்டம் பரவுது
இன்னல் எல்லாம் போகமழை
எங்கும் பெய்யப் போகுது.

மழையின் தூறல் கண்டுதோகை
மயிலும் நடம் ஆடுது
கிளையில் தாவி குரங்குப்பிள்ள
கிடுகிடுன்னு ஓடுது!

ஆடும் கிளையில் பாடும்குயிலும்
அழுகைக் கானம் இசைக்குது
போடும் கூச்சல் வீசிவீசி
புயலும் காற்றும் அசைக்குது!

கோட்டான் நாரை மீனையள்ளிக்
கொள்ள நேரம் பார்க்குது
வேட்டை யாட வந்தநரி
வேருக் குள்ளே பதுங்குது

தொப்பி போல நீர்க்குமிழி
தோன்றித் தோன்றி மறையுது
கப்பல் விட வாடாவென்ற
கண்ணன் சத்தம் கேட்குது!

1 comment:

  1. கவிஞர் இராசலிங்கம் அவர்களே!
    இயேசு பாலன் பிறந்த இன்பத்திருநாளாம் இவ் இனிய நன்நாளில்உங்களின் வலைப்பூவில் அற்புதமான மழலைக் கவி
    அழகு ததும்ப ஜொலிக்கிறது. மென்மேலும் உங்களின் கவியும்,கலையும். வளரட்டும்.
    எனது இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும் ,உங்கள் குடும்ம்பத்தினருக்கும் உரித்தாகட்டும்.
    தமிழ்சித்தன்.

    ReplyDelete